நலவாரியத்தில் பதிவு செய்யாதவர்கள்,புதுப்பிக்காதவர்களுக்கு நிவாரணம் இல்லை: கோர்ட்டில் தகவல்

Must read

சென்னை: நலவாரியத்தில் பதிவு செய்யாதவர்களுக்கும், புதுப்பிக்காதவர்களுக்கும், நிவாரணம் வழங்க வாய்ப்பு  இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
ஊரடங்கின் உத்தரவு காரணமாக, நலவாரியத்தில் பதிவு பெறாதவர்களுக்கும், உறுப்பினர் அட்டையை புதுப்பிக்க தவறியவர்களுக்கும்,  நிவாரணம் கோரி கட்டுமானத் தொழிலாளர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தன.
இந்த வழக்கு, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், நலவாரியத்தில் நிபந்தனைகளுக்கு உட்பட்டே வழங்கப்படுகிறது.
எனவே, நலவாரியத்தில் புதுப்பிக்க தவறியவர்கள் மற்றும் உறுப்பினர்களாக இல்லாதவர்களுக்கு, நிவாரணம் வழங்குவதற்கான வாய்ப்பு இல்லை என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, வழக்கு விசாரணை வரும் திங்கட் கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

More articles

Latest article