அரசு பணிகளில் 27 சதவீதம் ஓபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு: பிரதமருக்கு முதல்வர் கடிதம்

Must read

சென்னை: அரசு பணிகளில் 27 சதவீதம் ஓபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீடு அளிப்பது குறித்து பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
மத்திய அரசு வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் ஓபிசி பிரிவினர் பெற்று வருகின்றனர். அவர்களில் கிரீமிலேயர் என்ற ஒரு பிரிவினை தனித்தனியாக பிரித்து, அவர்களுக்கு வேறு விதமான ஊதியம் வழங்கும்  வகையில் ஒரு திருத்தத்தினை மத்திய அரசு கொண்டு வந்திருக்கிறது.
அதனை உடனடியாக கைவிட வேண்டும், ஏற்கனவே நடைமுறையில் இருக்கக்கூடிய திட்டத்தை தொடர்ச்சியாக அமல்படுத்த வேண்டும் என்று பிரதமருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் மூலம் வலியுறுத்தி உள்ளார்.
பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு தமிழகத்தில் எவ்வாறு தமிழக அரசு வழங்கிறதோ அதே போல இட ஒதுக்கீட்டு முறையை பின்பற்ற வேண்டும், இதன் மூலம் சமூக நீதி காக்கப்படும் என்று தெரிவித்து உள்ளார்.
எனவே கிரீமிலேயர் என்ற புதிய முறையை பின்பற்றக் கூடாது, ஏற்கனவே இருக்கும் பழைய நடைமுறையையே பின்பற்ற வேண்டும் என்று அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

More articles

Latest article