மும்பை:
பணமதிப்பிழப்பு அமல்படுத்தப்பட்டு 4 மாதங்கள் கழித்து ரூ. 7.5 லட்சம் பணத்தை மாற்ற பிரதமர் அலுவலகத்தை தொடர்பு கொண்டும், ரிசர்வ் வங்கியை தொடர்பு கொண்டும் தீர்வு கிடைக்காமல் பெண் ஒருவர் அவதிப்பட்டு வருகிறார்.

47 வயதாகும் ஆர்சி சிங் ஒரு இன்டீரியர் டிசைனர். பணமதிப்பிழப்பு அறிவிப்பை வரவேற்ற இவர் அவற்றை மாற்ற வழங்கப்பட்ட அவகாசத்திற்கு பின்னர் சண்டிகர் மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வரும் தனது மனநிலை பாதிக்கப்பட்ட சகோதரர் வசம் ரூ. 7.5 லட்சம் இருப்பது தெரியவந்துள்ளது.
இதை மாற்ற பிரதமர் அலுவலகத்திற்கும், ரிசர்வ் வங்கிக்கும் கடிதம் எழுதினார்.

ஆனால் தற்போது வரை உதவி கிடைக்காமல் அவதிப்பட்டு வருகிறார். இந்தியர்கள் மார்ச் 31ம் தேதி வரையிலும், வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் ஜூன் 30ம் தேதி வரை மும்பை, டெல்லி, கொல்கத்தா, சென்னை, நாக்பூர் ஆகிய நகரங்களில் உள்ள ரிசர்வ் வங்கி கிளை அலுவலகங்களில் பழைய ரூ. 500, 1,000 நோட்டுக்களை மாற்றிக் கொள்ள அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஆர்சி சிங் கூறுகையில், ‘‘உடல் நிலை பாதிக்கப்பட்ட எனது 57 வயது சகோதரர் அவினாஸ் சிங் தற்போது சண்டிகர் ஆர்யா மருத்துவமனையில் இருந்து புனே சயிதன்ய மனநல மருத்துவமனைக்கு ம £ற்றப்பட்டுள்ளார். இதற்காக அவரது வீட்டை காலி செய்தபோது உடமைகளோடு, ஒரு பையில் செல்லாத ரூபாய் நோட்டுக்கள் ரூ. 7.5 லட்சம் இருந்ததை வீட்டின் உரிமையாளரும், அவினாஸ் சிங்கின் வளர்ப்பு த ந்தையின் மகளுமான சகோதரி முறை கொண்ட அந்த பெண் கடந்த பிப்ரவரி 12ம் தேதி திருப்பி கொ டுத்தார்’’ என்றார்.

மேலும், அவர் கூறுகையில், ‘‘இதன் பின்னர் நான் பிப்ரவரி 27ம் தேதி பிரதமருக்கு கடிதம் எழுதினேன். ரிசர்வ் வங்கிக்கு நேரில் சென்று கோரிக்கை விடுத்தேன். அரசின் உத்தரவு இல்லாமல் இது போன்று மாற்றி தர இயலாது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துவிட்டது.

எங்களது பெற்றோர் விவகாரத்து பெற்று பிரிந்துவிட்டனர். இதில் நான் எனது தந்தையுடனும், அவினாஸ் சிங் தயாருடனும் பிரிந்துவிட்டோம். எனது தாய் வேறு திருமணம் செய்து கொண்டார். தாய் இறந்தபோது இந்த பணத்தை அவினாஸ் சிங்கிடம் ஒப்படைத்துவிட்டார். அந்த பணத்தை எதிலாவது முதலீடு செய்யலாம் என்று தெரிவித்தேன். ஆனால், அதற்கு அவினாஸ் அப்போது மறுப்பு தெரிவித்துவிட்டார்’’ என்றார்.

‘‘தற்போது அவர் உடல் நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கு அதிகப்படியாக செலவாகிறது. இந்த சமயத்தில் எங்கள் வசம் உள்ள செல்லாத ரூபாய் நோட்டுக்களை மாற்றிக் கொடுத்தால் அவினாஸ் சிங் சிகிச்சைக்கு உதவியாக இருக்கும்.

நான் அவருக்கு செலவு செய்து சிகிச்சை அளிக்கும் அளவுக்கு என்னிடம் பணம் இல்லை. மாதத்திற்கு தற்போது ரூ. 25 ஆயிரம் செலவாகிறது. இது தொடர் சிகிச்சை முறையாகும். எனது வீடும் ஒரு படுக்கை அறை கொண்ட சிறிய வீடு. அதனால் அவரை வீட்டில் வைத்து சிகிச்சை அளிப்பது சாத்தியமில்லை’’ என்றார் ஆர்சி சிங்.

அவர் தொடர்ந்து கூறுகையில், ‘‘இது கருப்பு பணம் இல்லை. இதை மாற்ற பிரதமர் உதவி செய்ய வேண்டும். இல்லை என்றால் நீதிமன்றத்தின் உதவியை நாட முடிவு செய்துள்ளேன். இந்த பணத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று தெரியவில்லை. இது போன்ற சிறப்பு நிகழ்வுகளுக்கு பணத்தை மாற்றிக் கொடுக்க ஏற்பாடு செய்ய வேண்டும்’’ என்று கேட்டுக் கொண்டார்.