டெல்லி: நபிகள் நாயகம் தொடர்பாக கருத்து தெரிவித்த, நுபுர் ஷர்மா மீதான உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் தீர்ப்பு கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், நீதிபதிகளின்  எதிர்மறையான கருத்துகளை திரும்பப் பெற வேண்டும் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் குடியரசுத் தலைவருக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது.

நூபுர் ஷர்மா தொடர்பான வழக்கை விசாரித்த, உச்சநீதிமன்ற நீதிபதிகள், சூர்யாகாந்த் மற்றும் ஜேபி பார்திவாலா ஆகியோர் அடங்கிய விடுமுறைக்கால சட்ட அமர்வு கடுமையாக விமர்சனம் செய்தது. இந்த விவகாரம் காரணமாக நாடு முழுவதும் தீப்பற்றி எரிகிறது என்று நடைபெறா நிகழ்வுகளை சுட்டிக்காட்டி விமர்சித்ததுடன், இதற்கு நூபுர்ஷர்மாதான் காரணம் என குற்றம் சாட்டியிருந்தது.

நீதிபதிகளின் கருத்து ஒருதலைப்பட்சமாக இருந்ததாக சமூக ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். வரம்புமீறி நீதிபதிகள் தங்களது கருத்தை பதிவிட்டுள்ளனர், அவர்கள்  நாடு முழுவதும் வன்முறை நடைபெற வேண்டும் என எதிர்பார்க்கிறார்களா என சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.

இந்த நிலையில்,  டெல்லியைச் சேர்ந்த சமூக ஆர்வலரும், கவு மகாசபா தலைவருமான அஜய் கௌதம் என்பவர்,  உச்ச நீதிமன்ற பெஞ்ச் அளித்த “பாதகமான கருத்துக்களை” திரும்பப் பெறக் கோரி இந்திய தலைமை நீதிபதி என்வி ரமணா மற்றும் குடியரசு தலைவருக்கு மனு அனுப்பி உள்ளார். அவரது மனுவில்,  நுபுர் சர்மாவுக்கு எதிராக. நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் ஜே.பி. பர்திவாலா  அளித்த கடும் விமர்சனங்களை திரும்பப் பெறப்பட வேண்டும், அப்போதுதான்,  நூபுர் ஷர்மா மீதான வழக்கு நியாயமாக நடைபெறும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்ற நீதிபதிகளின் இத்தகைய கருத்துக்களுக்குப் பிறகு, நூபுர் ஷர்மாவுக்கு நியாயமான விசாரணை மறுக்கப்படும் என்பதையும், ஷர்மாவின் கருத்தை கன்னையாவின் தலை துண்டிக்கப்பட்டதையும் இணைக்கும் நீதிபதிகளின் கருத்துக்கள் குறித்து, குடியரசுத் தலைவருக்கும் அந்த மனு அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

நீதிபதிகளின் தீர்ப்பானது, உதய்பூரில் நடைபெற்ற கொடூரமான செயலை நியாயப்படுத்துவதாக இருப்பதாகவும், கொலையாளிகளின் வெறிச்செயலும், மத துவேஷமும் இந்த கருத்துகளுக்கு பின் மறைந்துவிடுவதையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று மனுவில் கூறபட்டுள்ளது.

நுபுர் ஷர்மா மீது போடப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் டெல்லிக்கு மாற்ற வேண்டும் என்றும் கடிதம் மனுவில் கோரப்பட்டுள்ளது.