பாஜக 200 இடங்களில் கூட வெற்றிபெறாது, பாஜக-வால் ஆட்சி அமைக்கவும் முடியாது என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

2014 மற்றும் 2019 தேர்தலில் காங்கிரஸ் கட்சி மிகவும் குறைவான இடங்களிலேயே வெற்றி பெற்ற நிலையில் 2024 தேர்தலில் காங்கிரஸ் கட்சி பாஜக-வை விட கூடுதல் இடங்களில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் கலந்துகொண்டு பேசிய கார்கே பாஜக 200 இடங்களில் கூட வெற்றிபெறாது என்று பேசினார்.

400 இடம் என்று பாஜக கூறிவருவதை அவர்கள் மறக்க வேண்டிய நிலையில் உள்ளனர். பாஜக வெற்றிபெறும் தொகுதிகளின் எண்ணிக்கை குறையும் நிலையில் காங்கிரஸ் கட்சியின் வெற்றி எண்ணிக்கை கூடும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேற்கு வங்கம், ஒடிசா மாநிலங்களில் பாஜக கடும் சவாலை சந்தித்து வரும் நிலையில் அவர்கள் ஆட்சி அமைப்பது என்பது நிறைவேறாத காரியம் என்று தெரிவித்த அவர் ஜூன் 4ம் தேதிக்கு பிறகு எனது பதவி குறித்து கவலைப்படாமல் தனது பதவி குறித்து தான் அமித் ஷா கவலைப்படுவார்.

மோடி வயதை காட்டிலும் கிட்டதட்ட அதிக ஆண்டுகள் மக்களுக்கு சேவை செய்வதற்காக அரசியலில் இருக்கிறேன் பதவி குறித்து நான் கவலைப்படவில்லை என்றும் கூறினார்.