எனது அன்பு சகோதரர் ராகுல்காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்! முதல்வர் மு.க.ஸ்டாலின்

Must read

சென்னை:  காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியின் பிறந்தநாளை யொட்டி, அவருக்கு திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவரும் வயநாடு தொகுதி எம்.பி.யுமான ராகுல் காந்தி 51வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, அவருக்கு பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்  ராகுல்காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து டிவிட் பதிவிட்டுள்ளார். அதில்,

எனது அன்பு சகோதரர் ராகுல்காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள், ஒவ்வொரு அம்சத்திலும் ஒரு சமத்துவ இந்தியாவை ஸ்தாபிப்பதற்கான அவரது தன்னலமற்ற, அயராத உழைப்பைப் பாராட்டுவதில் மற்றவர்களுடன் சேர்ந்து நானும் மகிழ்கிறேன்.. காங்கிரஸ் கட்சியின் நெறிமுறைகள் குறித்த அவரது அர்ப்பணிப்பு முன்மாதிரியாக உள்ளது.

இவ்வாறு வாழ்த்துச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

More articles

Latest article