அமைச்சர் பதவி கேட்டு புதுச்சேரி பாஜக அலுவலகத்தை சூறையாடிய ஜான்குமாரின் ஆதரவாளர்கள்… வீடியோ…

Must read

புதுச்சேரி: அமைச்சர் பதவி கேட்டு புதுச்சேரி பாஜக அலுவலகத்தை ஜான்குமாரின் ஆதரவாளர்கள் சூறையாடினர். இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் பாஜக என்.ஆர்.காங்கிரஸ் கட்சி கூட்டணி வெற்றிபெற்றது. முதல்வராக என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி பதவி ஏற்ற நிலையில், அமைச்சரவை ஒதுக்கப்படுவதில் சிக்கல் நீடித்து வருகிறது. நீண்ட இழுபறிக்கு பின்னர் என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக கூட்டணிப் பேச்சுவார்த்தையில் பாஜகவுக்கு சபாநாயகர் பதவி, 2 அமைச்சர்கள் பதவி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதனையடுத்து, புதுச்சேரி சபாநாயகராக ஏம்பலம் செல்வம் பதவியேற்றுக்கொண்டார். ஆனால்,அமைச்சர்கள் பதவியேற்பு நடைபெறுவதிமேலும், பாஜகவின் முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம், ஜான்குமார் ஆகியோருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பாஜக அமைச்சர் பெயர்பட்டியலில்  ஜான்குமாரின் பெயர் இடம்பெறவில்லை என கூறப்படுகிறது.   இதனால் ஆத்திரம் அடைந்த எம்.எல்.ஏ. ஜான்குமாரின் ஆதரவாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர்  சித்தானந்தா நகர் பகுதியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். அங்குள்ள சேர்,மேஜைகளை அடித்து நொறுப்பினர்.

இதனையடுத்து,அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் அங்கு வந்த கட்சி நிர்வாகிகளும், காவல்துறையினரும்,”இது தொடர்பாக மேலிடத்துக்குத் தெரிவிக்கப்படும் எனக் கூறி போராட்டத்தைக் கட்டுப்படுத்தினர். இதனால் புதுச்சேரியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

More articles

Latest article