புதுடெல்லி:
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இதில் 25 மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர், வழக்கமாக நவம்பர் மாதம் தொடங்கும். குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச சட்டமன்ற தேர்தல்களை முன்னிட்டு குளிர்கால கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் 7- ஆம் தேதி தொடங்கும் கூட்டத்தொடர் டிசம்பர் 29-ந் தேதி வரை நடைபெறுகிறது. மொத்தம் 23 நாள்கள் நடைபெறும் இந்த தொடரில் வர்த்தக முத்திரைகள் திருத்த மசோதா, பொருட்களின் புவியியல் குறியீடுகள் பதிவு மற்றும் பாதுகாப்பு திருத்த மசோதா, பல மாநில கூட்டுறவு சங்கங்கள் திருத்த மசோதா உள்ளிட்ட 16 மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இந்திய சீன எல்லைப்பிரச்னை, வேலைவாய்ப்பின்மை, ஒரே நாளில் தேர்தல் ஆணையரை நியமித்தது, பொருளாதாரத்தில் நலிவடைந்த உயர் ஜாதி பிரிவினருக்கான 10 சதவிகித இடஒதுக்கீடு, புலனாய்வு அமைப்புகளை தவறாக பயன்படுத்துவது உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து கூட்டத்தொடரில் விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்தன.