டெல்லி:
டெல்லி மாநகராட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

டெல்லி மாநகராட்சி தேர்தலுக்கான வாக்கு பதிவு கடந்த 4-ஆம் தேதி நடந்தது. இந்த தேர்தலில் டெல்லியை ஆளும் ஆம் ஆத்மி, பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது.

மொத்தம் 1,349 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மொத்தமுள்ள 250 வார்டுகளுக்கும் சேர்ந்து 50% வாக்குகள் பதிவாகியதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளன.

கடந்த தேர்தலில் டெல்லி மாநகராட்சியை பா.ஜ.க. கைப்பற்றியிருந்தது. இந்நிலையில் இந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெறும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ளன. பாஜக இரண்டாவது இடமும், காங்கிரசுக்கு குறைந்த அளவிலும் இடங்கள் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், டெல்லி மாநகராட்சி தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்கியது. வாக்கு எண்ணிக்கைக்காக, மொத்தம் 42 வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் பார்ப்பதற்கு வசதியாக வாக்கு எண்ணும் மையங்களில் பெரிய அளவிலான எல்இடி திரைகள் வைக்கப்பட்டுள்ளன. மேலும் அந்த பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.