டில்லி,

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 29-ம் தேதி மீண்டும் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதையடுத்து பிப்ரவரி 1-ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது என பாராளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி அனந்தகுமார் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் டிசம்பர் 15-ம் தேதி துவங்கியது. பரபரப்பான விவாதங்கள், மருத்துவம், முத்தலாக், நீதிபதிகள் சம்பள உயர்வு போன்ற முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்ட இந்த குளிர்கால கூட்டத்தொடர் பரபரப்பான  விவாதங்கள் மற்றும் எதிர்க்கட்சியினர் அமளியுடன் தொடர்ந்து நடைபெற்று வந்தது.

இன்றுடன் குளிர்கால கூட்டத்தொடர் முடிவடைவதாக பாராளுமன்ற சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அறிவித்தார்.

அதைத்தொடர்ந்து,  பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கும் நாள் குறித்தும் பாராளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி அனந்தகுமார் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் ஜனவரி 29ம் தேதி தொடங்குகிறது.  ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையுடன் இந்த கூட்டத்தொடர் தொடங்க இருப்பதாகவும்,

அதைத்தொடர்ந்து பிப்ரவரி 1-ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்றும்,  பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு ஜனவரி 29-ம் தேதி தொடங்கி பிப்ரவரி 9-ம் தேதி வரையிலும், இரண்டாவது அமர்வு மார்ச் 5-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 6-ம் தேதி வரையிலும் நடைபெறும்”

இவ்வாறு அர் கூறினார்.