பாகிஸ்தான் வீரர்களால் சிறைப்பிடிக்கப்பட்ட இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் இன்று இரவு ஒன்பது மணிக்கு இந்திய எல்லையில் ராணுவத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார். ஆவணங்கள் மற்றும் மருத்துவ பரிசோதனைகளுக்கு பிறகு இந்திய மண்ணில் கால்பதித்த அபிநந்தனை பாராட்டி அனைவரும் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

abhi

கடந்த 14ம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் இந்திய சிஆர்பிஎஃப் வீரர்கள் 40 பேர் கொல்லப்பட்டனர். இந்திய வீரர்களின் உயிரிழப்பிற்கு பதிலடி கொடுக்கப்படும் என அறிவித்த மத்திய அரசு உரிய ராணுவ நடவடிக்கைகளை முன்னெடுத்தது. அதன்படி பாகிஸ்தான் எல்லையில் உள்ள பால்கோட் பகுதியில் உள்ள தீவிரவாதிகளின் முகாம் மீது இந்திய விமானப்படை துல்லிய தாக்குதல் நடத்தியது.

அத்துமீறி தனது எல்லைக்குள் இந்தியா தாக்குதல் நடத்தியதாக கூறிய பாகிஸ்தான் தக்க பதிலடி கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி இந்திய எல்லையில் நோட்டமிட்ட பாகிஸ்தான் போர் விமானத்தை ராணுவ வீரர்கள் சுட்டு வீழ்த்தினர். அதுமட்டுமின்றி, பாகிஸ்தான் எல்லைக்குள் சென்ற இந்திய விமானப்படை எஃப் 16 ரக விமானத்தை சுட்டு வீழ்த்தியது. அப்போது பாகிஸ்தான் விமானத்தின் மீது தாக்குதல் நடத்திய இந்தியாவின் மிக் 21 ரக விமானம் விபத்திற்குள்ளானதில், அதன் விமானி அபிநந்தன் வேறி வழியின்றி பாராஷீட் உதவியுடன் பாகிஸ்தான் எல்லைக்குள் தரையிறங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

Abhinandanjpg

கடந்த 27ம் தேதி பாகிஸ்தான் எல்லையில் தரையிரங்கிய அபிநந்தனை சிலா் தாக்குவது போன்ற காட்சிகளும், அபிநந்தன் ரத்தம் வடிந்த முகத்துடன் இருப்பது போன்ற காட்சிகள் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. அதன் பின்னா் மாலையில் அபிநந்தன் இயல்பாக டீ குடிப்பது போன்றும், பிறா் கேட்கும் கேள்விகளுக்கு அவா் இயல்பாக பதில் அளிப்பது போன்ற காட்சிகள் வெளியாகின. இது இந்தியா்களுக்கு சற்று ஆறுதலாக அமைந்தது. இருப்பினும் பாகிஸ்தானால் சிறைப்பிடிக்கப்பட்ட அபிநந்தனை மீட்க இந்தியா துரித நடவடிக்கைகளை மேற்கொண்டது. அந்நாட்டு வெளியுறவுத் தூதர்களை சந்தித்த இந்திய அதிகாரிகள் அபிநந்தனை ஜெனிவா ஒப்பந்தத்தின் படி பாதுகாப்பாக ஒப்படைக்க கேட்டுக் கொண்டது. இது ஒருபுறம் இருக்க ராஜாங்க ரீதியிலான நடவடிக்கையும் இந்திய அரசு முன்னெடுத்தனர்.

இதற்கிடையே பாகிஸ்தான் எல்லையில் தரையிறங்கிய அபிநந்தனை இந்தியாவிடம் ஒப்படைக்கும்படி சவுதி, அமெரிக்க உள்ளிட்ட உலக நாடுகள் அழுத்தம் கொடுத்தன. இதனால் கடந்த வெள்ளிக்கிழமை பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பேசிய அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் நல்லெண்ண அடிப்படையில் அபிநந்தனை விடுவிப்பதாக அறிவித்தார். அதன்படி இன்று லாகூரில் இருந்து விமானம் மூலம் அழைத்து வரப்பட்ட அபிநந்தன் வாகா எல்லையை அடைந்தார். இன்று மாலை 4 மணியளவில் அவர் ஒப்படைக்கப்படுவார் என பாகிஸ்தான் அறிவித்த நிலையில் இரு முறை காலத்தாமதத்தை ஏற்படுத்தியது.

abhi

இறுதியாக மருத்துவ பரிசோதனை மற்றும் ஆவணங்கள் சரிபார்ப்பு முடிந்த நிலையில் இருநாட்டு சட்ட நடவடிக்கைக்கு பிறகு இந்திய வீரர்களிடம் கையொப்பம் பெற்றுக் கொண்ட இந்திய எல்லையில் விமானப்படை உயர் அதிகாரிகள் மற்றும் ராணுவ அதிகாரிகளிடம் அபிநந்தன் ஒப்படைக்கப்பட்டார். இந்தியா கேட் வழியாக தாய் மண்ணில் கால் வைத்த அபிநந்தனை ராணுவ அதிகாரிகள் கைக்குலுக்கு வரவேற்றனர். பாகிஸ்தானில் இருந்து 75 மணி நேரத்திற்கு பிறகு இந்திய எல்லையில் கால் பதித்த அபிநந்தனை அங்கு கூடியிருந்த மக்கள் அனைவரும் கரகோஷம் எழுப்பி வரவேற்றனர்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய விமானப் படை அதிகாரி ஆர்.ஜி.கே. கபூர், ” இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள அபிநந்தனுக்கு வழக்கமான நடைமுறைப்படி மருத்துவ பரிசோதனைகள்
நடைபெறும். அபிநந்தன் விமானத்தில் இருந்து வெளியேறிய போது காயம் ஏதாவது ஏற்பட்டதா என்பது பற்றி மருத்துவ பரிசோதனை செய்யப்படும், அவர் நாடு திரும்பியது மகிழ்ச்சி அளிக்கிறது “ என கூறினார். இதையடுத்து நாடு திரும்பிய அபிநந்தனை வாழ்த்தி பிரபலங்கள், தலைவர்கள் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதற்கு முன்னதாக இன்று மாலை அபிநந்தன் விடுவிக்கும் செய்தி அறிந்த உடன் இந்தியாவில் உள்ள மக்கள் அனைவரும் மேள வாத்தியங்கள் வாசித்து, நடமனாடி, பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.