சென்னை:

டிமை அதிமுக அரசைப் பயன்படுத்தி பொங்கல் விடுமுறையை ரத்து செய்வதா?  என்று மோடி அரசு மீது திமுக தலைவர் ஸ்டாலின் ஆவேசமாக கூறினார்.

பொங்கலுக்கு மறுநாளான மாட்டுப்பொங்கல் அன்று மோடியின் உரையை கேட்க மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டிருந்து கடுமையான சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதையடுத்து, இன்று செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்,  அரசு உத்தரவிடவில்லை; மாணவர்கள் விருப்பம் இருந்தால் பள்ளிக்கு வரலாம் என்று பல்டியடித்திருந்தார்.

இந்த நிலையில், திமுக. தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  ”அடிமை அதிமுக அரசைப் பயன்படுத்தி பொங்கல் விடுமுறையை ரத்து செய்வது, பொங்கல் விழாவின் முக்கியத்துவத்தையும் – மனமகிழ்ச்சியையும் கெடுப்பது போன்ற பாஜகவின் உள்நோக்கம் மாறவில்லை” என்றும்,  முதல்வரும், அமைச்சரும் தரும் பதிலைப் பார்த்தால் பள்ளிக் கல்வித்துறை அதிமுக அரசின் கட்டுப்பாட்டில் இல்லையோ என்ற சந்தேகமே எழுகிறது! எனவே, இந்த விவகாரத்தில் வெறும் மறுப்பையும், மழுப்பலையும் விட்டுவிட்டு முறையான அறிவிப்பை அதிகாரபூர்வமாக வெளியிட வேண்டும்  என்று கூறி உள்ளார்.