டெல்லி:

130 கோடி மக்களை கொண்டுள்ள இந்தியாவில் 20 கோடி பேருக்கு மனநலப் பாதிப்புகளால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், தமிழ்நாட்டில் 1லட்சம் பேருக்கு 4,796 பேர் மனம் நலம் கோளாறுகளால் பாதிக்கப்பட்ட உள்ளதாகவும்,  தி லான்செட் உளவியல் நிறுவன ஆய்வு தகவல்  தெரிவித்து உள்ளது.

சமீபத்தில் வெளியான மனநல மருத்துவம் குறித்த லான்செட் ஆய்வறிக்கை குறித்து, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வெளியிட்டுள்ள தகவலில்,  ஏழு இந்தியர்களில் ஒருவர் மனநல கோளாறால் பாதிக்கப்பட்டு இருப்பதாக அதிர்ச்சி தகவலை தெரிவித்து உள்ளது.

இந்திய மாநிலங்களில் மனநல கோளாறுகளின் சுமை உலகளாவிய அளவில் அதிகரித்து வருவதாகவும், சுமார் 20 கோடி இந்தியர்களுக்கு மனநல கோளாறுகள் இருப்பதாகவும் கூறி உள்ளது.

2017 ஆம் ஆண்டில் 197.3 மில்லியனில் 45.7 மில்லியன் மக்கள் மனச்சோர்வுக் கோளாறுகள் மற்றும் 44.9 மில்லியன் மக்கள் பதட்டக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டு ரஇருந்ததாகவும்,  அதிக பாதிப்பு உள்ள கோளாறு களில், idiopathic வளர்ச்சி அறிவுசார் இயலாமை பெரும்பாலான இந்தியர்களை பாதிக்கிறது. 4.5 சதவீதம் என்ற அளவில் அதன் பாதிப்பு உள்ளது என்று தெரிவித்து உள்ளது.

மேலும்,   மனச்சோர்வுக் கோளாறுகள் (3.3), பதட்டக் கோளாறுகள் (3.3) மற்றும் நடத்தை கோளாறுகள் (0.8) என்று பல்வேறு கோளாறுகளை வரிசைத்துப்படுத்தும் ஆய்வுகள்,  தமிழ்நாட்டில் 1லட்சம் பேருக்கு 4,796 பேர் மனம் நல கோளாறுகளால் பாதிக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்து உள்ளது.

அதுபோல ஆந்திராவில் லட்சம் பேருக்கு, 4,563 பேரும், தெலுங்கானா மாநிலத்தில்,4,356 பேரும்,  ஒடிசாவில் 4,159 பேரும், கேரளாவில் 3,897 பேரும் பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்துஉள்ளது.

கேரளாவில் (4,035), மணிப்பூர் (3,760), மேற்கு வங்கம் (3,480), இமாச்சலப் பிரதேசம் (3,471), ஆந்திரா (3,462) ஆகிய மாநிலங்களில் இந்த அதிக அளவிலான பாதிப்புகள் உள்ளதாகவும், . நடத்தை சீர்கேடு சம்பவங்களில், ஜார்கண்ட் மற்றும் பீகார் மாநிலங்கள் முறையே 100,000 பேருக்கு 983 மற்றும் 974 என்ற எண்ணிக்கையில்  இருப்பதாகவும் தெரிவித்துஉள்ளது.

அதுபோல,  பீகார் மற்றும் உத்தரபிரதேச மாநிலங்களில் இடியோபாடிக் வளர்ச்சி அறிவுசார் இயலாமை அதிகமாக கூறி உள்ளது.

மனநலக்கோளாறுகள், மனஅழத்தம் போன்றவை, தற்போதைய நிலையில், டீன்ஏஜ் பருவத்தினரையும், இளம் தலைமுறையையே அதிகமாக பாதிக்கிறது.  இளம் பருவத்தினரில் 45 சதவீதம் பேர் மது அல்லது போதை பொருட்களுக்கு அடிமையாகிறார்கள். அந்த அளவிற்கு மன அழுத் தம் அவர்கள் வாழ்க்கையை நிர்மூலமாக்குவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அதே வேளையில் இந்தியாவில், மன அழுத்தம், மனநலக் கோளாறுகளை சரிசெய்யும் வகையில் தேவையான உளவியல் நிபுணர்கள் இல்லை என்பதும் வருத்தத்திற்குரியதே.