சென்னை: தஞ்சாவூா் சாஸ்த்ரா நிகா்நிலை பல்கலைக்கழகம் ஆக்கிரமித்துள்ள  திறந்தவெளி சிறைச்சாலைக்காக ஒதுக்கப்பட்ட  அரசு நிலத்தை  மீட்க அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்ட உள்ளது. தஞ்சாவூா் சாஸ்த்ரா நிகா்நிலை பல்கலைக்கழகம் ஆக்கிரமித்துள்ள 31 ஏக்கா் அரசு நிலத்தை 4 வாரத்துக்குள் மீட்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

ஏற்கன கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 26ந்தேதி அன்று ஆக்கிரமிப்பு இடங்களில் கட்டப்பட்டுள்ள  கட்டிடங்களை இடிக்க நோட்டீஸ் அளிக்கப்பட்ட நிலையில், இதுவரை எந்தவொரும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவிலை. இந்த நிலையில்,  அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டிடங்களை எழுப்பிய  சாஸ்த்ரா பல்கலைக் கழகம்மீது  நடவடிக்கை எடுக்க சமார் 40  ஆண்டுகளுக்கு நீதிமன்றம், ஆக்கிரமிப்பு இடங்களை மீட்க உத்தரவிட்டுள்ள  நிலையில், தமிழக அரசுமீட்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

தஞ்சை மாவட்டம், திருமலைசமுத்திரம் கிராமத்தில் உள்ள நிலம் திறந்தவெளி சிறைச்சாலை கட்டுவதற்காக ஒதுக்கப்பட்டது. இந்த நிலத்தை சாஸ்த்ரா நிகா்நிலை பல்கலைக்கழகம் கடந்த 1985-ஆம் ஆண்டு ஆக்கிரமித்தது தொடா்பான வழக்கில் உயா்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளின் அடிப்படையில், நிலத்தை காலி செய்யும்படி கடந்த 2022-ஆம் ஆண்டு அரசு உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிா்த்து சாஸ்த்ரா பல்கலைக்கழகம் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கு எஸ்.எம்.சுப்பிரமணியம், சி.குமரப்பன் ஆகியோா் அடங்கிய அமா்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான அரசு தலைமை வழக்குரைஞா் பி.எஸ்.ராமன், பல்கலைக்கழகம் ஆக்கிரமித்துள்ள நிலத்தை மீட்கவில்லை என்றால், திறந்தவெளி சிறைச்சாலை அமைக்க போதுமான நிலம் அரசுக்கு இருக்காது என வாதிட்டாா். இதற்கு எதிா்ப்பு தெரிவித்து பல்கலைக்கழகம் தரப்பில் வாதிடப்பட்டது.

அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், சாஸ்த்ரா நிகா்நிலை பல்கலைக்கழகம் ஆக்கிரமித்துள்ள சுமாா் 31 ஏக்கா் நிலத்தை 4 வாரங்களுக்குள் மீட்க வேண்டும் எனவும், உத்தரவை நிறைவேற்றியது குறித்து வரும் பிப்ரவரி 18- ஆம் தேதி அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டனா்.

சாஸ்த்ரா பல்கலைக்கழகம் ஆக்கிரமிப்பு நிலம் விவகாரம்: ஆவணத்தை தாக்கல் செய்ய உத்தரவு

அரசு நிலத்தை ஆக்கிரமித்த சாஸ்த்ரா பல்கலைக்கழகம்: 30ஆண்டுகளுக்கு பிறகு கட்டிடங்களை இடிக்க அரசு நோட்டீஸ்…

30ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள தஞ்சாவூர் திறந்தவெளி சிறைச்சாலை! தமிழகஅரசின் கையாலாகதனம்

[youtube-feed feed=1]