லண்டன்: இங்கிலீஷ் பிரிமியர் லீக் கால்பந்து தொடர், ஜுன் 17ம் தேதி மீண்டும் துவங்குகிறது என்று பிரிட்டன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஏற்கனவே துவங்கி நடைபெற்றுவந்த இந்தத் தொடர், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, கடந்த மார்ச் 9ம் தேதியுடன் நிறுத்தப்பட்டது. லெய்செஸ்டர் – ஆஸ்டன் வில்லா அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டிதான், அத்தொடரின் கடைசிப் போட்டியாக இருந்தது.
அப்போட்டியில் லெய்செஸ்டர் அணி 4-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இந்நிலையில், பயிற்சியை மீண்டும் விரைவில் தொடங்குவது குறித்து முதன்மையான கால்பந்து கிளப்புகள் சாதகமாக வாக்களித்துள்ளன.
மீண்டும் துவங்கவுள்ள இத்தொடரின் முதல் இரண்டு போட்டிகள், ஆஸ்டன் வில்லா – ஷெஃப்பீல்டு யுனைடெட், மான்செஸ்டர் சிட்டி – ஆர்சினல் அணிகளுக்கு இடையில் நடைபெறும் என்று பிபிசி செய்திகள் தெரிவிக்கின்றன.