சிட்னி:
ஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும், இந்திய அணி அங்கும் விளையாடும் போட்டிக்கான அட்டவணையை ஆஸ்திரேலியாக வெளியிட்டு உள்ளது.

ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம், 2020-21 சீஸனுக்காக அட்டவணையை வெளியிட்டு உள்ளது. அதன்படி,  ஆகஸ்ட் மாதம் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 3 ஒருநாள் ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலிய அணி பங்கேற்கிறது. இத்தொடர்  ஆகஸ்ட் 9 முதல் ஆகஸ்ட் 15 வரை  நடைபெறும் என அறிவித்து உள்ளது.
பின்னர் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக 3 ஆட்டங்கள் டி20 தொடர் அக்டோபர் 4 முதல் 9 வரை நவம்பரில்  நடைபெறும்.
அக்டோபர் 18 முதல் நவம்பர் 15 வரையிலான டி20 உலகக் கோப்பையும் இடம்பெற்றுள்ளது.
இந்திய அணி டி20 உலகக் கோப்பைப் போட்டிக்கு முன்பு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்கிறது.
டிசம்பர் 3 முதல் ஜனவரி 7 வரை இரு அணிகளுக்கு இடையிலான 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறுகிறது.
அதன்பின்னர் ஜனவரி மாதம் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் இரு அணிகளும் பங்கேற்கின்றன.
இந்திய அணியின் ஆஸ்திரேலியச் சுற்றுப்பயணம் விவரம்…

டி20 தொடர்
முதல் டி20: அக்டோபர் 11, பிரிஸ்பேன்
2வது டி20: அக்டோபர் 14, கான்பெர்ரா
3வது டி20: அக்டோபர் 17, அடிலெய்ட்
டெஸ்ட் தொடர்
முதல் டெஸ்ட்: டிசம்பர் 3-7, பிரிஸ்பேன்
2-வது டெஸ்ட்: டிசம்பர் 11-15, அடிலெய்ட் (பகலிரவு)
3-வது டெஸ்ட்: டிசம்பர் 26-30, மெல்போர்ன்
4-வது டெஸ்ட்: ஜனவரி 3-7, சிட்னி
ஒருநாள் தொடர்
முதல் ஒருநாள்: ஜனவரி 12, பெர்த்
2-வது ஒருநாள்: ஜனவரி 15, மெல்போர்ன்
3-வது ஒருநாள்: ஜனவரி 17, சிட்னி
ஜனவரி 2021ல் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஒரு டெஸ்ட் ஆட்டமும் நியூசிலாந்துக்கு எதிராக ஒருநாள், டி20 தொடர்கள் நடைபெறுகின்றன.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த அட்டவணைகள் மாறுதலுக்கு உட்பட்டவை என கிரிக்கெட் ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது.