கொல்கத்தா:

பிரதமர் மோடி கலந்து கொள்ளும் பேரணிகளுக்கு ஆகும் செலவை கேட்பீர்களா? என தேர்தல் ஆணையத்திடம் கேள்வி எழுப்பியுள்ளார் மம்தா பானர்ஜி.


கிழக்கு மிட்னாப்பூர் பகுதியில் நடந்த பேரணியில் கலந்து கொண்டு மம்தா பானர்ஜி பேசியதாவது:

பணம் கொடுத்து வாக்குகளைப் பெற பாஜக முயற்சிக்கிறது. பிரதமர் மோடி கலந்து கொள்ளும் தேர்தல் பிரச்சார கூட்டங்களுக்கு ஆகும் செலவை தேர்தல் ஆணையத்திடம் கேட்போம்.

மற்றவர்களின் செலவை கேட்கும் தேர்தல் ஆணையம், பிரதமர் மோடி கலந்து கொள்ளும் பேரணிக்கு ஆகும் செலவு குறித்து ஏன் மோடியிடம் கேட்கவில்லை.மோடி கலந்து கொள்ளும் கூட்டங்களுக்கு பணம் கொடுத்து ஆள் பிடிக்கிறார்கள்.

வாழ்க்கையின் தன் தாயையும், மனைவியையும் மதிக்காதவர் மோடி. தாயை மதிக்காதவர் நாட்டை எப்படி மதிப்பார்.

வேட்பு மனுதாக்கல் செய்தபோது, தன் மனைவியின் அசையும், அசையா சொத்து விவரம் தெரியாது என்று குறிப்பிட்டுள்ளார்.

பொதுவாக இது போன்ற கருத்துகளை நான் நான் பேசுவதில்லை. ஆனால், மோடி என்னை பேச வைத்துவிட்டார்.

வேட்பு மனு தாக்கலின் போது கேட்கப்பட்ட கேள்விகளுக்கு தெரியாது என்றே பதில் அளித்துள்ளார். எனவே, வாரணாசி தொகுதியில் போட்டியிட மோடி தாக்கல் செய்த வேட்புமனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றார்.