புதுடெல்லி:

பங்களாதேஷ் நடிகர்கள் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய தடை விதிக்கப்பட்டது.


எனினும், குத்துச் சண்டை வீரர் காளி ஜடாவ்பூர் பாஜக வேட்பாளர் அனுபம் ஹஜ்ராவை ஆதரித்து பிரச்சாரம் செய்துவந்தார்.

இது குறித்து தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ள திரிணாமூல் காங்கிரஸ் கட்சி, காளி அமெரிக்க பிரஜை. வாக்காளர்கள் மனதில் வெளிநாட்டு பிரஜையான காளி ஆதிக்கம் செலுத்தக் கூடும் என்பதால் தடை விதிக்க வேண்டும் என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்த பாஜக வேட்பாளர் ஹஜ்ரா, காளி எனது நல்ல நண்பர். நட்பு ரீதியாகவே என்னுடன் பிரச்சாரத்தில் கலந்து கொள்ள அவர் வந்தார் என்றார்.

குத்துச் சண்டை வீரர் காளி கூறும்போது, ஹஜ்ரா எனது நெருங்கிய நண்பர். அவரது சகோதரர் விடுத்த அழைப்பை ஏற்றே நான் பிரச்சாரத்துக்கு வந்தேன். எங்கள் நட்பு கட்சியை விட பெரிது. அவர் எப்போது அழைத்தாலும் நான் வருவேன் என்றார்.