பானஜி:

மனோகர் பாரிக்கர் இறந்ததால் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள பானஜிக்கு, பாரிக்கர் மகனுக்கு பாஜக வாய்ப்பு தரவில்லை.


கோவா முதல்வராக இருந்த மனோகர் பாரிக்கர் உடல் நலக்குறைவால் காலமானார்.

இவர் பானஜி சட்டப் பேரவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இந்த தொகுதிக்கு பாரிக்கரின் முன்னாள் ஆலோசகர் சித்தார்த் குன்காலேங்கரை பாஜக வேட்பாளராக அறிவித்துள்ளது.

முதலில் பாரிக்கரின் மூத்த மகன் உத்பலை வேட்பாளராக நிறுத்த பாஜக முடிவு செய்திருந்தது.
ஆனால், திடீரென முடிவை மாற்றிக் கொண்டு, சித்தார்த்தை அக்கட்சி வேட்பாளராக அறிவித்துள்ளது.

பாரிக்கர் மத்திய அமைச்சரானபோது, சித்தார்த் பானஜி தொகுதிக்கு நடந்த தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

அதன்பிறகு மீண்டும் 2017-ம் ஆண்டு மனோகர் பாரிக்கர் பானஜி தொகுதியில் போட்டியிட்டு வென்று முதல்வர் ஆனார்.

இந்த தொகுதிக்கு மே 19-ம் தேதி இடைத் தேர்தல் நடக்கிறது.