லக்னோ; கொரோனாவில் உயிரிழந்த கணவர்மீண்டும் உயிர்தெழுவார் என நினைத்து கடந்த  18 மாதங்களாக அவரது மனைவி கங்கை நீர் தெளித்து பாதுகாத்து வந்துள்ளார். இந்த சோக சம்பவம் உ.பி. மாநிலத்தில் நடைபெற்றுள்ளது.

சீனாவில் இருந்து 2019ம் ஆண்டு இறுதியில் பரவிய கொரோனா பெருந்தொற்று உலகம் முழுவதும் பரவி லட்சச்கணக்கான மக்களை காவு வாங்கியதுடன், உலக பொருளாதாரத்தையே தலைகீழே மாற்றியது. மக்கள் சொல்லோனா துயரத்துக்கு ஆளாகினர். தற்போது இயல்பு வாழ்க்கை திரும்பி உள்ளது.

இந்த நிலையில். உ.பி.மாநிலத்தில், கடந்த ஆண்டு கொரோனாவில் உயிரிழந்த கணவர், மீண்டும் உயிர்த்தெழுவார் என்ற நம்பிக்கையில், கடந்த 18 மாதங்களாக கணவரின் உடல்மீது கங்கை நீர் தெளித்து பாதுகாத்து வந்துள்ளார் அவர் மனைவி. இறந்த கணவரின் உடலுக்கு இறப்பு சான்றிதழ்கள் வழங்கப்பட்டு விட்ட நிலை யிலும் அந்த பெண்மணி, உடலை அடக்கம் செய்யாமல், கணவர் கோமாவில் இருப்பதாக கூறி அவர் மீண்டு வருவதற்காக 18 மாதங்களாக கங்கை நீரை உடல் முழுவதும் தெளித்து வந்துள்ளார். கணவரின் உடல் அழுகி சிதைந்த நிலையில், அக்கம் பக்கத்தினரின் புகாரின் பேரில் காவல்துறையினர் விரைந்து வந்து, அவரின் உடலை அப்புறப்படுத்தினர். விசாரணையில்  அந்த பெண் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரிய வந்துள்ளது.