லக்னோ: உத்தரப்பிரதேச மாநில சட்டப்பேரவை கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது.  சட்டப்பேரவைக்குள் பாஜக எம்எல்ஏக்கள் செய்யும் அட்டூழியர்கள் தொடர்பான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. மாண்புமிக்கு சட்டப்பேரவையில், ஒரு பாஜக எம்எல்ஏ பாக்கு போடுகிறார், மற்றொரு பாஜக எம்எல்ஏ கையக்கட கணியினில் ஆன்லைன் ரம்மி விளையாடுகிறார். இந்த வீடியோக்கள் வைரலாகி வருகிறது.

மக்களின் பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எம்எல்ஏக்கள், மக்களுக்கு சேவையாற்றுகிறார்களோ இல்லையோ, மக்கள் விரோத நடவடிக்கைகளை மேற்கொள்வதில் எந்தவித தயக்கமும் காட்டுவதில்லை. ஏற்கனவே கடந்த 2012ம் கர்நாடக பாஜக அமைச்சர்கள் 3 பேர் சட்டப்பேரவைக்குள் ஆபாச படம் பார்த்த விவகாரம் தொடர்பான வீடியோ வெளியாகி நாடு முழுவதும் பாஜகவுக்கு தலைகுனிவை ஏற்படுத்தியது. இதையடுத்து, அந்த 3 பாஜக அமைச்சர்களும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு ஒடி ஒளிந்தனர்.

இந்த நிலையில், தற்போது அதுபோன்ற ஒரு சம்பவம் உ.பி. மாநில சட்டப்பேரவையில் அரங்கேறி உள்ளது. சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடைபெற்றுக் கொண்டி ருக்கும்போது, அதை கண்டுகொள்ளாத பாஜக எம்எல்ஏக்கள், போன்களை பார்த்துக்கொண்டும், பாக்கு போட்டுக்கொண்டும் தங்களது நேரத்தை கழிக்கின்றனர்.

மாநில பாஜகவைச் சேர்நத் ஒரு எம்.எல்.ஏ குட்கா சாப்பிடுவதில் மும்முரமாக இருக்கிறார், மற்றொருவர் ஆன்லைனில் சீட்டு விளையாடுகிறார், இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. இது மாநில பாஜகவுக்கு மட்டுமின்றி மத்திய பாஜக அரசுக்கும் தலைகுனிவை ஏற்படுத்தி உள்ளது.