அமராவதி:

ந்திராவுக்கு மத்திய அரசிடம் இருந்து  நிதி உதவி கிடைக்காத நிலையில், நாங்கள் ஏன் வரி செலுத்த வேண்டும் என்றும்  ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கேள்வி எழுப்பி உள்ளார்.

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க மறுத்த மத்திய அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி உள்ள தெலுங்குதேச கட்சி தலைவரும், ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு மத்திய அரசு மீதும், பிரதமர் மோடி மீதும் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறார்.

இந்நிலையில், மத்திய அரசு ஆந்திரா தலைநகரை உலகத் தரம் வாய்ந்த தலைநகரமாக மாற்ற நிதி தரவில்லை என்று குற்றம் சாட்டினார்.

தெலுங்குதேசம் கட்சியின் வருடாந்திர மாநாட்டு நடைபெற்றது. 3 நாட்கள் நடைபெற்ற இந்த மாநாட்டில் கட்சியின் வளர்ச்சி, அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பொதுத்தேர்தல் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.

மாநாட்டில் இறுதியில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சிறப்புரை ஆற்றினார். அப்பேது, மத்திய அரசுக்கு வரிகள் செலுத்துகிறோம். ஆனால், அதற்கு பதிலாக நமக்கு எதுவும் கிடைக்கவில்லை. ஆந்திரா தலைநகரான அமராவதியை உலகத் தலைநகராக மாற்ற நாம் விரும்பினோம். ஆனால், மத்திய அரசு விரும்பாததால், அமராவதிக்கு மத்திய அரசு நிதி வழங்கவில்லை என்று குற்றம் சாட்டினார்.

அமராவதியை டெல்லி, மும்பை, ஹைதராபாத், பெங்களுரு போன்று  சிறந்த  தலைநகரமாக  உருவாக்க தேவையான நிதியை மத்திய அரசு தர மறுக்கிறது.  இதன் காரணமாக   மத்தியில் ஆளும் பாரதியஜனதா அரசு மாநில மக்களுக்கு கொடுத்த வாக்குறு தியை மீறி உள்ளது என்றும் கண்டனம் தெரிவித்தார்.

மேலும், மோடி அரசாங்கத்தின் ஒருதலைப்பட்சமான நடவடிக்கை காரணமாக மாநிலங்களின் நிதி நிலைமை பலவீனமடைந்து வருகிறது, இதன் கரணமாக மத்திய அரசாங்கத்தின் மீது மாநிலங்கள்  நம்பிக்கையை இழக்க வழிவகுக்கிறது என்று கூறினார்.

எதிர்க்கட்சிகளை நசுக்குவதற்கு சிபிஐ மற்றும் உளவுத்துறை போன்ற அமைப்புகளை  தவறாக பயன்படுத்தி வருகிறது. இது இந்திய அரசியலில் பெரும் கவலையாக உள்ளது என்றும், பிராந்திய கட்சிகளை  கலவரம் மூலம் பா.ஜ.க. அழிந்து விடும்” என்றும்  நாயுடு கூறினார்.

“மோடியின் திட்டங்களில் யாராலும் பயன் அடைந்திருக்கிறீர்களா?” என்றும் தொண்டர்களிடையே சந்திரபாபு நாயுடு கேள்வி எழுப்பினார்.

வங்கி கணக்குகளை டிஜிட்டல் மயமாக்கியதால் மக்கள் ஆத்திரமாக இருபபதாகவும், மக்கள் கடுமையாக உழைத்து சம்பாதித்த பணத்தை பெற வங்கிகளை நாட வேண்டி உள்ளது என்றும், ஜிஎஸ்டி வரி சாதாரண மக்களுக்கு சுமையை ஏற்படுத்தி இருப்பதாகவும் குற்றம் சாட்டினார்.