சென்னை,

ருத்துவமனையில் உயிருக்கு போராடி வரும் நடராஜனை சந்திக்க சசிகலா 5 நாட்கள் பரோலில் தமிழகம் வந்திருக்கிறார். மருத்துவமனையில் அவர் நடராஜனை பார்த்துவிட்டு, அங்குள்ள மருத்துவர்களிடம் நடராஜனை எப்படியாவது காப்பாற்றுங்கள் என்று கதறியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், சசிகலாவின் நடவடிக்கை குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார்,  நடராஜனை காப்பாற்ற ஆடும் அந்த தசை, ஜெ.வை காப்பாற்ற ஆடாதது ஏன்? ஜெவை காப்பாற்ற என் துடிக்கவில்லை  என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், நடராஜனை காப்பாற்ற எடுத்த முயற்சிகளில் துளி கூட ஜெ.வுக்கு எடுக்கவில்லை என்றும் அதிரடியாக குற்றம் சாட்டினார்.

சென்னை பெரும்பாக்கம் குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடராஜனுக்கு கிட்னி மற்றும் கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டதன் காரணமாக, அவருக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது.

தஞ்சாவூர் பகுதியை சேர்ந்த கார்த்திக் என்ற மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உறுப்புகள் நடராஜனுக்கு பொறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இது விதிமீறி நடைபெற்றதாக  பெரும் சர்ச்சையையும் கிளப்பி உள்ளது.

இந்நிலையில், சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டு கள் சிறை தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருக்கும் சசிகலா, கணவரை காண 5 நாள் பரோலில் தமிழகம் வந்தார்.

இதுவரை இரண்டு தடவை மட்டுமே தனது கணவரை பார்த்த சசிகலா சுமார் 2 மணி நேரம் மட்டுமே அவருடன் செலவழித்து உள்ளார். அப்போது தனது கணவரை எப்படியாவது காப்பாற்றும்படி மருத்துவர்களிடம் கெஞ்சியதாக தகவல்கள் வெளியானது.

இந்நிலையில், பட்டினம்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்,

தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் என்பதை போல நடராஜனை காப்பாற்ற சசிகலா குடும்பம் என்னென்ன முயற்சிகளை மேற்கொண்டுள்ளது என்று விரிவாக கூறினார்.

தற்போது நடராஜனை காப்பாற்ற மேற்கொள்ளப்படும் முயற்சிகளில் துளிக்கூட ஜெயலலிதாவை காப்பாற்ற மேற்கொள்ளவில்லை என்றும் பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.

ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது தமிழக மக்கள் அனைவரும் பிரார்த்தனை செய்தனர். ஆனால்,  தினகரனோ அல்லது சசிகலா குடும்பத்தினரோ ஜெயலலிதா வுக்காக என்ன பிரார்த்தனை மேற்கொண்டனர் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

தினகரன் பேசுவது சாத்தான் வேதம் ஓதுவதுபோல் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.