இந்திய பிரச்னைகளை வெளிநாட்டில் பேசுவதால் யாருக்கு பயன்?….மோடிக்கு சிவசேனா கேள்வி

Must read

மும்பை:

பிரதமர் மோடி பிரிட்டனுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு வாழும் இந்தியர்கள் மத்தியில் அவர் உரையாற்றினார். அப்போது இந்திய பிரச்னைகள் குறித்து மோடி பேசினார். இதற்கு சிவசேனா கண்டனம் தெரிவித்துள்ளது.

சிவசேனா கட்சியின் அதிகாரப்பபூர்வ நாளேடான சாம்னா ஒரு கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது.

அதில், ‘‘ மோடி இந்தியாவில் ஒரு பார்வையாளராகவும், வெளிநாட்டில் பேசுபவராகவும் இருக்கலாம். யாராவது பிரதமர் மோடியின் பேச்சை பார்க்க வேண்டும் என்றால் நாட்டின் தலைநகரத்தை லண்டன், நியூயார்க், டோக்கியோ, பாரீஸ் அல்லது ஜெர்மனிக்கு மாற்ற வேண்டும். இது சாத்தியமானது கிடையாது. சினிமாவை போன்று வெளிநாடுகளிலும் தேசிய தலைநகரத்தை வடிவமைக்கலாம்.

இந்தியாவில் நடைபெற்ற பாலியல் பலாத்கார சம்பவங்கள் குறித்து லண்டனில் பேசுகிறார். அநீதிக்கு எதிராக அவரது மனதில் இருக்கும் தீப்பொறிகள் பற்றி பேசுகிறார். அயல்நாட்டு மண்ணில் தீப்பொறிகள் சுழன்று வருவதை நாங்கள் காண்கிறோம். பாலியல் பலாத்காரம் போன்ற விவகாரங்களில் பிரச்சனைகளை வெளிநாடுகளில் பேசுவது பிரதம மந்திரிக்கு சரியானதா? ஏன் அவமதிப்பு சம்பவங்கள் பற்றி வெளிநாட்டில் பேசுகிறீர்கள்? பரவலாக இருக்கும் ஊழல், பாலியல் பலாத்கார சம்பவங்கள் மற்றும் பாதுகாப்பற்ற தேசம் பற்றி ஏன் வெளிநாட்டில் பேச வேண்டும்?

ஜப்பான் சென்ற போது இந்தியாவில் உள்ள கருப்பு பணம் மற்றும் ஊழல் குறித்து பேசினீர்கள். முந்தைய ஆட்சி காலத்தில் உங்களுக்கு ஒருவேளை எதிர்ப்பு இருந்து இருக்கலாம். காங்கிரஸ் அல்லது காந்தி குடும்பத்துடன் உங்களுக்கு ஆழமான எதிர்ப்பு இருந்து இருக்கலாம்.

ஆனால் உள்நாட்டு விவகாரங்களை வெளிநாட்டில் பேசுவதால் யாருக்கும் பயன் அளிக்கப்போவது கிடையாது. வைர வியாபாரி நிரவ் மோடி கொள்ளையடித்துவிட்டு வெளிநாட்டிற்கு தப்பிவிட்டார். மல்லையா லண்டனில்தான் உள்ளார். மல்லையாவிற்கு பாதுகாப்பு அளித்துள்ள நாட்டிற்குதான் பிரதமர் மோடி சென்றுள்ளார். அவர் வரும்போது வெறும் கையுடன் தான் வருவார்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

More articles

Latest article