பெங்களூரு:

கர்நாடகா சட்டமன்ற தேர்தல் மே 12ம் தேதி நடக்கிறது.

இங்கு காங்கிரஸ், பாஜக, மதசார்பற்ற ஜனதா தளம் இடையே கடும் போட்டி நிலவுகிறது. ஏற்கனவே காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு விட்டது.

பாஜக 2 கட்டமாக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதை தொடர்ந்து தற்போது 59 வேட்பாளர்கள் அடங்கிய 3 வது பட்டியலை வெளியிட்டுள்ளது.