பிந்துவின் டார்கெட் யார்?: பிக்பாஸ் அலப்பறை

தனியார் டிவியில் வெளியாக தினசரி ஒரு சர்ச்சையை ஏற்படுத்தி வரும் பிக்பாஸ் தொடரில் தற்போது புதுசாக  நடிகை பிந்துமாதவி நுழைந்துள்ளார்.

ஏற்கனவே இருந்த நமீதா, கஞ்சா கருப்பு போன்ற ஒருசிலர் வெளியான நிலையில் தற்போது பிந்து வீட்டிற்குள் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

தொடக்கத்தில் 14 போட்டியாளர்கள் பங்கேற்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி என்று கூறப்பட்டது. ஆனால், இறுதியில் நமீதா 15வது போட்டியாளராக கலந்து கொண்டார்.

தற்போது  கிட்டத்தட்ட 36 நாட்கள் கடந்த நிலையில், 6 பேர் ஏற்கனவே வெளியேறிவிட்டனர். மீதமுள்ள 9 போட்டியாளர்களுக்கு இடையில் ஏகப்பட்ட பஞ்சாயத்து. இதில் நாட்டாமையாக சனி, ஞாயிறு நாட்களில் வரும் கமல்ஹாசன்  தீர்ப்பு கூறி அமைதி ஏற்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் பிந்து மாதவி புதிய போட்டியாளராக வந்துள்ளார். கடந்த ஒரு மாதமாக டிவியில் ஒளிபரப்பி வந்த ஷோவை பார்த்திருக்கும் பிந்து, வந்தவுடன், தனது நாமினேஷன் என்று காயத்ரி ரகுராம் என்று கூறி சலசலப்பை ஏற்படுத்தி உள்ளார்.

அவர்களுக்குள் நடைபெற்ற சம்பாஷனையின்போது, பரணி வீட்டின் சுவர் ஏறிக் குதிக்க முயன்ற போது ஏன் யாரும் அவரை தடுக்க முயற்சி செய்யவில்லை என்று காயத்ரியிடம் கேள்வி எழுப்பி, அவரை தர்ம சங்கடத்துக்குள்ளாக்கினார்.

மேலும், வீட்டில் இருந்த அனைவரும் ஏன் பரணியை டார்கெட் செய்தீர்கள்.. என்றும், அதன் காரணமாகவே அவர் சுவர் ஏறி குதித்து தப்பியோட முயன்றார் என்ற பிந்து,  யார் அந்த நேரத்தில் தலைவர் என்று காயத்ரியிடம் கேள்வி எழுப்பினார்.

அதற்கு காய்த்ரி நான்தான் அப்போது தலைவராக இருந்தேன் என்று கூறியதும், நீங்கள் ஏன் பரணியை தடுக்க வில்லை என்று அடுத்த கேள்வி கேட்டு மடக்கினார்.

இதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல், காயத்ரி அவரை பார்த்து முறைத்து வருகிறார்…

இதன்மூலம் கிற்து மாதவியின்  டார்கெட் காயத்ரிதான் என்பது பிக்பாஸ் ரசிகர்களுக்கு தெரிந்திருக்கும்…

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Who is the Bindhu Target ? Bigboss show, பிந்துவின் டார்கெட் யார்?: பிக்பாஸ் அலப்பறை
-=-