ஊழலுக்கு எதிராக போராடுவதாக கூறும் மோடி, கறைபடிந்தவர்களுக்கு சீட் கொடுத்திருப்பது ஏன்? ராகுல் கேள்வி

Must read

 

ஹரித்துவார்:

 ‘‘கறை படிந்த தலைவர்கள் என ஒதுக்கி, காங்கிரஸ் கட்சி குப்பையில் வீசியவர்களை, பாஜவில் சேர்த்துக்கொண்டது ஏன்? என்று அகில இந்திய காங்கிரஸ் துணைத்லைவர் கேள்வி எழுப்பினார்.

உத்தரகாண்ட் சட்டப்பேரவை தேர்தலையொட்டி, காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி. பக்வன்பூர் என்ற இடத்தில்  பிரசார ஊர்வலத்தை தொடங்கினார்.

பக்வன்பூரில் இருந்து  75 கி.மீ. தூரத்திற்கு  பிரசாரம் மேற்கொண்டார். இந்த 75 கிலோ மீட்டர் பிரசார பயணத்திட்டம் 11 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியதாக இருந்தது. அவரது பிரசார பயணத்தின்போது ஏராளமான பொதுமக்கள்  கைகளை அசைத்து தங்களது ஆதரவை தெரிவித்தனர்.

இறுதியில்  புஹானாவில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் ராகுல் பேசியதாவது,

பிரதமர் மோடிக்கு  ஊழலைப் பற்றி பேச எந்த தகுதியும் இல்லை. காங்கிரசில் இருந்த ஊழல் கறைபடிந்த தலைவர்கள்  தற்போது பாஜ.வில் இருக்கிறார்கள். அவர்களுக்கு தேர்தலில் போட்டியிட இடம் ஒதுக்கி உள்ளார்.

ஊழலுக்கு எதிராக போராடுவதாக மோடி கூறிக் கொள்கிறார். ஆனால், கறைபடிந்தவர்கள் என நாங்கள் (காங்கிரஸ்) குப்பையில் தூக்கி வீசியவர்களை,  பிரதமர் மோடி சேர்த்துக்கொண்டு தேர்தலில் சீட் கொடுத்திருப்பது ஏன்? அவர்களை கட்டித் தழுவி அன்பு காட்டுவது ஏன்? என்று கேள்வி எழுப்பினார்.

உத்தரகாண்ட்டில் காங்கிரஸ் அதிருப்தி தலைவர்கள் பலர் பாஜவில் சேர்ந்து இம்முறை தேர்தலில் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

More articles

Latest article