சென்னை:

டந்த 2016ம் ஆண்டு டிசம்பர் 5ந்தேதி அப்போதைய தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா உடல்நலமில்லாமல் அப்பல்லோவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்  சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

சுமார் 75 நாட்கள் அப்பல்லோவில் சிகிச்சை பெற்று வந்த அவர், உடல் நலம் தேறி வருவதாக அப்பல்லோ மட்டுமல்லாமல் மருத்துவர்கள், தமிழக கவர்னர், அதிமுக அமைச்சர்கள், கட்சி தலைவர்கள்  உள்பட ஜெ.வை மருத்துவமனைக்கு வந்து பார்த்து சென்ற  அனைத்து தரப்பினரும் கூறி வந்த நிலையில், திடீரென அவர் மரணமடைந்தாக கூறப்பட்டது.

இது தமிழகத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து விசாரிக்க வேண்டும் என எதிர்க்கட்சியினரும், ஓபிஎஸ்சும் வேண்டு கோள் விடுத்ததை தொடர்ந்து, ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு நியமனம் செய்தது.

இந்த விசாரணை ஆணையம், ஜெ.க்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், முன்னாள் தலைமை செயலாளர்கள், ஆலோசகர்கள் உள்பட அரசு அதிகாரிகள், சசிகலா குடும்ப உறுப்பினர்கள் உள்பட அனைத்து தரப்பினரிடம் விசரணை மேற்கொண்டு வருகிறது.

விசாரணையின் ஒரு பகுதியாக சசிகலாவையும் விசாரிக்க ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. தொடக்கத்தில், ஆணையத்தின் கேள்விக்கு பதில் அளிக்க மறுத்து வந்த சசிகலா, பின்னர், ஆணைய நீதிபதி எச்சரிக்கையை தொடர்ந்து பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்துள்ளார்.

அவர் தாக்கல் செய்துள்ள வாக்குமூலத்தில்,  அப்பல்லோவில்  ஜெ. சிகிச்சை பெற்று வந்த போது, அபபோதைய தமிழக  பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ், அமைச்சர் ஓபிஎஸ், அதிமுக எம்.பி. தம்பித்துரை ஆகியோர் பலமுறை பார்த்தனர் என்று கூறி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும், சொத்துக்குவிப்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தன்னை  தண்டித்து விடுமோ என்று வேதனை பட்டார் என்றும், அதன் காரணமாக கடும் கடும் மன அழுத்தத்தில் இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

இதன் காரணமாகவே அவரது உடல் பாதிக்கப்பட்டது. ஏற்கனவே கடந்த 2014ம் ஆண்டு சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் இருந்த போதே ஜெயலலிதாவிற்கு மன அழுத்தம் அதிகரித்து பாதிப்புக்கு உள்ளார் என்றும்  கூறப்பட்டுள்ளது.

இதற்காக தொடர்ந்து  மருந்து மாத்திரைகள் எடுத்து வந்த ஜெ., ஆர்.கே.நகர் இடைத்தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்றும், ஆனாலும் அவரது உடல் தொடர்ந்து பாதிப்படைந்து வந்ததாகவும், அவருக்கு நீரிழிவு மருத்துவர், தோல்நோய் மருத்து வர்கள் பரிசோதனை செய்து குறைந்த அளவிலான ஸ்டீராய்டு மாத்திரைகளை அளித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2016ம் ஆண்டு செப்டம்பர் 16ம் தேதிவரை மாத்திரை சாப்பிட்டு வந்த அவருக்கு 19ம் தேதியன்று காய்ச்சல் வந்ததாகவும், அதன் காரணமாக அவரது உடல்நிலை மேலும் பாதிப்படைந்தது என்றும், 21ந்தேதி அன்று மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அளித்தும் மறுத்துவிட்டார் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும்,  22ந்தேதி அன்று ஜெயலலிதா சோர்வாக காணப்பட்டதாகவும்,  இரவு 9.30 மணியளவில் அவரது  உடல்நிலை மேலும்  பாதிப்படையவே  டாக்டர் சிவகுமாருக்கு போன் செய்தேன் என்றும், அவர்  உடனடியாக அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்  விஜயகுமார் ரெட்டிக்கு போன் செய்து இரண்டு ஆம்புலன்ஸ்களை வரவழைத்தார் என்றும் கூறப்பட்டுள்ளது.

அப்பல்லோ ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்று அங்கு சிகிச்சைகாக அனுமதித்ததாகவும் சசிகலா பிரம்மான பத்திரத்தில் கூறி உள்ளார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவை அப்போதைய தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ், ஓபிஎஸ், தம்பித்துரை ஆகியோர், மருத்துவமனையில்  செப்டம்பர், அக்டோபர் மாதங்களில்  பார்த்தனர் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆரம்பத்தில் ஜெ.வின் உடல்நிலை சரியான நிலையில், மீண்டும் சில நாட்கள்  ஓய்வெடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியதால், ஜெ. மருத்துவமனையிலேயே ஓய்வு எடுத்து வந்தாகவும் கூறி உள்ளார்.

ஜெ.வை அப்பல்லோவில் யாரும் பார்க்கவில்லை… என்றும், ஜெயலலிதா இட்லி சாப்பிட்டார் என்று கூறியது எல்லாம் பொய். அவரை யாரும் பார்க்கக்கூட அனுமதிக்கப்படவில்லை. மக்களிடம் பொய் சொன்னதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம் என்று அதிமுக அமைச்சர்கள் கூறிய நிலையில், சசிகலாவின் பிரம்மாண வாக்குமூலம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.