டில்லி:

2ஜி மேல்முறையீடு வழக்கில் ராஜா, கனிமொழிக்கு டில்லி உயர்நீதி மன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

2ஜி அலைக்கற்றை ஊழல் தொடர்பான வழக்கில் சிபிஐ நீதிமன்றம் விடுதாலை அளித்த தீர்ப்பை எதிர்த்து, டில்லி உயர்நீதி மன்றத்தில் அமலாக்கத்துறை சார்பில் கடந்த 19ந்தேதி மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கு குறித்து முன்னாள் அமைச்சர் ராஜா, திமுக எம்.பி. கனிமொழி உள்பட குற்றம்சாட்டப்பட்ட அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்ற வந்த 2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கில், கடந்தஆண்டு டிசம்பர் மாதம் 21ந்தேதி  சிபிஐ கோர்ட்டுதீர்ப்பு வழங்கியது.

அப்போது,   வழக்கில் இருந்து திமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ராஜா, கனிமொழி உள்பட 14 பேரை விடுதலை செய்வதாக நீதிபதி அறிவித்திருந்தார்.

பெரும் எதிர்பார்ப்புடன் பார்க்கப்பட்ட இந்த வழக்கில் ராஜா, கனிமொழி உள்பட அனைவரும் விடுதலையானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் வழக்கின் தீர்ப்பு குறித்து மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று பல அரசியல் கட்சி தலைவர்களிடம் இருந்து கோரிக்கைகள் வந்திருந்தன.

இந்நிலையில், அமலாக்கத்துறை டில்லி ஐகோர்ட்டில் கடந்த 19ந்தேதி மேல்முறையீடு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

அதுபோல  சிபிஐ சார்பிலும்  டில்லி ஐகோர்ட்டில் நேற்று (20 ந்தேதி) மேல்முறையீடு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.