டில்லி

கொரோனா நிவாரண முகாம்கள் குறித்த மாநில வாரி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தியாவை அச்சத்தில் ஆழ்த்தி வரும் கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த நாடெங்கும் தேசிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  இதனால் பல வெளிமாநில தொழிலாளர்கள் உண்ண உணவு, வசிக்க இடமின்றி தவித்தனர்.   அவர்களுக்கு மாநில அரசுகள் நிவாரண முகாம்கள் அளித்து உணவு மற்றும் இருப்பிடம் அளித்துள்ளது.

 

இது குறித்த விவரங்களை மத்திய அரசு உச்சநீதிமன்றத்துக்கு அளித்துள்ளது.

அதில் மாநில வாரியான பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது.  அதன்படி கேரளாவில் 15541 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.  அடுத்ததாக மகாராஷ்டிராவில் 4000 முகாம்களும் உத்தரப்பிரதேசத்தில் 2230 முகாம்களும் அமைக்கப்பட்டுள்ளன.

நாடெங்கும் மொத்தம் 26476 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.  இவற்றில் அரசு 22567 முகாம்களையும் தன்னார்வு  தொண்டு நிறுவனங்கள் 3909 முகாம்களையும் அமைத்துள்ளன.  அரசு அமைத்துள்ள முகாம்களில் 6,31,119 பேரும் தன்னார்வு தொண்டு நிறுவன முகாம்களில் 4,05,908 பேரும் தங்கி உள்ளனர்.

இதைத் தவிரப் பணி அளிக்கும் நிறுவனங்கள் 15,05,107 பேருக்கு உணவு மற்றும் தங்குமிடம் அளித்துள்ளன.