புதுடெல்லி: சமீபகாலமாக பின்னடைவை சந்தித்துவந்த வங்கித்துறை, தற்போது சீரடைந்து வருவதாக தெரிவித்துள்ளது இந்திய ரிசர்வ் வங்கி.

ரிசர்வ் வங்கியின் ஆண்டறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது; நாட்டில் இப்போதைய நிலையில், பொருளாதார மந்தநிலை நிலவியபோதிலும், நிதி அமைப்பு நிலையானதாகவே இருந்து வருகிறது.

பல்வேறு சிக்கல்களால் ஏற்பட்ட பின்னடைவு தற்போது சிறிதுசிறிதா சீரடைந்து வருகிறது. அதேசமயம், உலகளாவிய அளவிலான மற்றும் உள்நாட்டு அளவிலான நிச்சயமற்ற பொருளாதாரத் தன்மைகள் மற்றும் அபாயங்கள் தொடர்ந்துகொண்டு இருக்கின்றன என்பதையும் மறுக்க முடியாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்மூலம், இந்த சீரடைவு நிலையற்றது என்றும், நிலைமை மீண்டும் மோசமாகலாம் என்றும் ரிசர்வ் வங்கி மறைமுகமாக குறிப்பிடுகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.