விநாயகருக்கு கஜானனர் எனப் பெயர் வரக் காரணம் என்ன?
யானை முகமும், தலையில் இரு கொம்புகளும் உடைய கஜமுகாசுரன் என்ற அசுரன், அசுர குல குருவாகிய சுக்கிராச்சாரியாரின் போதனைப்படி, சிவபெருமானின் திருநாமத்தைச் சொல்லிக்கொண்டே பல ஆண்டுகள் காலம் கடுமையான தவம் இருந்து சிவபெருமானிடம் வரம் பெற்றான்.
சாகாவரம் பெற்ற அரக்கன் தேவர்களுக்குக் கொடுமை புரிந்தான் . விநாயகர் தேவர்களுக்கு  ஆறுதல் சொல்லிவிட்டுக் கஜமுகாசுரனுடன் போருக்குப் புறப்பட்டார்.
விநாயகப் பெருமானுக்கும், அசுரனுக்கும் இடையில் கடும் போர் மூண்டது
ஈசனிடம் வரம் பெற்ற கஜமுகாசூரனை எந்த ஆயுதத்தாலும் கொல்ல முடியாது. என்று தெரியவே  சற்றும் யோசிக்காமல் தனது வலது தந்தத்தை ஒடித்து கஜமுகாசூரனை வதம் செய்தார். இதனால் அவரது திருநாமம் கஜானனர் ஆனது.