சீனாவின் வுஹான் நகரில் கடந்த 2019 ம் ஆண்டு டிசம்பர் மாதம் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகெங்கும் பரவி பொது சுகாதாரத்தையும் பொருளாதாரத்தையும் வேரோடு சாய்த்தது.

உலக மக்கள் அனைவரின் துயருக்கும் காரணம் சீனா தான் என்று அமெரிக்கா தொடங்கி பல்வேறு நாடுகள் குற்றம் சாட்டின, உலக சுகாதார அமைப்பு சீனா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி, அந்த அமைப்பில் இருந்து அமெரிக்கா வெளியேறுவதாக அப்போது அதிபராக இருந்த டிரம்ப் அறிவித்தார்.

கடந்த மாதம், வுஹான் சென்று சோதனை நடத்த துவங்கியது உலக சுகாதார அமைப்பு, நான்கு வார ஆய்வு பணிகளை முடித்து திரும்பி இருக்கும் இந்த குழு, தங்களது அறிக்கையை தயார் செய்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில், இந்த குழுவில் இடம் பெற்ற ஆஸ்திரேலியவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாண பொது சுகாதார நோயியல் இயக்குனர் டோமினிக் டுவயர் ஆய்வின் போது தான் பார்த்தவற்றையும் தனது அனுபவங்களையும் வெளியிட்டுள்ளார்.

கொரோனா தொற்று விவகாரத்தில் உள்ள அரசியலுக்கு அப்பாற்பட்டு அங்கு நிகழ்ந்தவற்றை அறியவே நாங்கள் அங்கு சென்றோம்.

டோமினிக் டுவயர்

டிசம்பர் 8, 2019 ம் ஆண்டு முதன் முதலாக பாதிப்புக்குள்ளாகி மீண்டவரை நாங்கள் சந்தித்தோம், அவரை மட்டுமல்ல, தொற்று நோய்க்குள்ளாகி தனது இளம் மனைவியையும், குழந்தையையும் நிராதரவாக விட்டுவிட்டு இறந்து போன மருத்துவரின் குடும்பத்தினரையும் சந்தித்தோம்.

தொற்று நோய் பரவ தொடங்கிய ஆரம்ப நாட்களில் அதற்கு மருத்துவம் பார்த்த மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களையும் சந்தித்து பேசினோம்.

வுஹான் நகரில் இருந்து ஆய்வு முடித்து தற்போது ஆஸ்திரேலியா திரும்பி இருக்கும் டுவயர் அந்நாட்டு விதிகளின் படி தனிமைப்படுத்தலில் இருக்கிறார்.

தொற்று பரவுவது குறித்தோ, இதற்கு என்ன மருந்து, எப்படி பாதிக்கிறது என்பது பற்றியோ யாரும் அறிந்திராத நேரத்தில் பாதிப்புக்குள்ளான பலரையும் சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடினோம்.

சீனாவில் உள்ள தொற்று நோய் நிபுனர்கள், விஞ்ஞானிகள், மருத்துவர்கள் என்று பலதரபட்டவர்களை சந்தித்து நாளொன்றுக்கு குறைந்தது 15 மணிநேரம் அவர்களுடன் நட்புடன் பணியாற்றினோம்.

விலங்குகளில் தோன்றி வௌவ்வாள்கல் வழியே மனிதனுக்கு பரவியது இந்த வைரஸ் என்பதை நாங்கள் உறுதியாக கண்டுபிடித்தோம். ஆனால் விலங்கிலிருந்து வௌவாலுக்கு பரப்பிய பிராணி எதுவென்றும் எந்த இடத்தில் நிகழ்ந்தது என்பதும் உறுதியாக தெரியவில்லை.

இந்த தொற்று எப்படி ஏற்பட்டிருக்கும் இதன் தொடர் சங்கிலி எது என்பது குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறோம். சீனாவின் பல்வேறு இடங்களில் வௌவால்கள் மற்றும் விலங்குகளிடம் நடத்திய ஆய்வில் இன்றளவும் உண்மை புலப்படவில்லை.

வுஹான் இறைச்சி சந்தையில் இருந்து பரவியது என்று கூறப்ட்ட நிலையில் தற்போது செயல்படாமல் மூடப்ட்டிருக்கும் அந்த வளாகத்தையும் சென்று பார்த்தோம்.

அங்கு உணவுக்காக வளர்க்கப்படும் மூங்கில் எலி, புனுகுப் பூனை, கீரிப்பிள்ளை வகையை சார்ந்த பிராணிகளின் மாமிசம் விற்கப்பட்டதையும் அறிந்தோம்.

இந்த பிராணிகளிடம் இவ்வகையான வைரஸ் எளிதில் பரவும் என்பதற்கு ஆதாரம் இருந்த போதும், இந்த சந்தையை மூடுவதற்கு முன் இங்கு எடுக்கப்பட்ட மாமிச மாதிரிகளில் வைரஸ் தொற்று கண்டுபிடிக்கப்படவில்லை.

2019 டிசம்பரில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட முதல் 174 பேரில் ஒருவர் கூட இந்த சந்தைக்கு வரவில்லை என்ற போதும். தற்போது மூடிய நிலையில் உள்ள இந்த சந்தையை பார்க்கும் போதே இது எவ்வாறு பரவியிருக்கும் என்று ஊகிக்க முடிகிறது.

இந்த வளாகம் திறந்திருந்திருந்த நேரத்தில், நெருக்கடியான, காற்றோட்டமோ, கழிவு நீர் வெளியேறும் வசதியோ இல்லாத இந்த இடத்தில் நாளொன்றுக்கு 10,000 பேர் வரை வந்து சென்றதாக தெரிகிறது.

ஹுனான் இறைச்சி சந்தை

நவம்பர் மற்றும் டிசம்பர் மாதம் தோன்றிய இந்த வைரஸ் வுஹானில் முதலில் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன் வேறு எங்காவது தோன்றியிருக்க வாய்ப்பிருக்கிறது என்ற கூற்றையும் மறுப்பதற்கில்லை, என்ற போதும், அது குறித்து உறுதியாக தெரியவில்லை.

வுஹானில் உள்ள இந்த இறைச்சி சந்தை நோயை பரப்பும் மையமாக தான் இருந்திருக்க முடியுமே தவிர இங்கு தோன்றியிருக்க வாய்ப்பில்லை.

மீன், இறைச்சி, ஐஸ் கிரீம் உள்ளிட்ட உணவு வகைகளை சேமித்து வைக்கும் சேமிப்பு கிடங்கில் இருந்து பரவி இருக்குமா என்ற கேள்விக்கு விடையில்லை இது குறித்த ஆய்வுகள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.

வைரஸ் ஆராய்ச்சி மற்றும் பரிசோதனை கூடத்தில் இருந்து இது வெளியே பரப்பப்பட்டது என்ற கூற்றில் உண்மையில்லை, அது அரசியல் காரணங்களுக்காக சொல்லப்பட்டது என்றபோதும், வுஹான் வைராலஜி மையத்திலும் சென்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இங்குள்ள ஆராய்ச்சியாளர்களுடன் பேசியதில், குறிப்பிட்ட கால இடைவெளிக்கு ஒருமுறை அவர்களின் இரத்த மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு தரவுகள் சேமிக்கப்பட்டு உள்ளதாகவும்.

யாருக்கும் கொரோனா வைரஸ் எதிர்ப்பு சக்தி பயன்படுத்தியதாக ஆதாரமில்லை.

பரிசோதனை கூடத்தில் இருந்து வைரஸ் வெளியேறுவது என்பது அரிதான ஒன்று என்ற போதும் வுஹான் மையத்தில் இருந்து வெளியேறவில்லை என்பது உறுதியாக எங்களுக்கு தெரிந்தது.

உலக சுகாதார அமைப்பு சீனாவில் மேற்கொண்ட இந்த ஆய்வு நடவடிக்கையில் பல்வேறு அமைப்புகளை சார்ந்த 17 சீனர்கள், 10 சர்வதேச ஆராய்ச்சியார்கள், மற்ற துறை வலலுநர்கள் ஏழு பேர் மற்றும் உதவியாளர்கள் பங்குபெற்றனர்.

இந்த குழு சீனாவின் 200க்கும் மேற்பட்ட மையங்களில் இருந்து பெறப்பட்ட 76,000 க்கும் அதிகமான தொற்று நோய் குறித்த தரவுகளை ஆய்வு செய்தது.

சீனாவில் நடத்தப்பட்டது முதல்கட்ட ஆய்வு தான் என்றும் ஐரோப்பிய நாடுகளில் பரவும் தொற்று குறித்தும் தரவுகள் அடிப்படையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ள டோமினிக் டுவயர்,

கொரோனா தொற்று குறித்த உடல் மற்றும் மன ரீதியான பாதிப்பு வுஹானில் மட்டுமல்ல உலகெங்கும் இன்னும் பல ஆண்டுகள் தொடரும் என்றும் தெரிவித்துள்ளார்.