கொல்கத்தா:

மித்ஷா தேர்தல் பிரசாரத்தின்போது உடைக்கப்பட்ட வித்யாசாகர் சிலை,  சரி செய்யப்பட்டு, மீண்டும் அதே இடத்தில் நிர்மாணிக்கப்பட்டது. சிலைக்கு  மேற்கு வங்க முதல்வர் மம்தா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

நடைபெற்ற மக்களவை தேர்தல் இறுதிக்கட்ட  பிரசாரத்தின்போது, பாஜக திரிணாமுல் இடையே ஏற்பட்ட மோதலின்போது வங்க அறிஞர் ஈஸ்வர் சந்திர வித்யாசாகர் விலை பாஜக குண்டர்களால் உடைக்கப்பட்டது.

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், உடைக்கப்பட்ட சிலை சரி செய்து மீண்டும் திறக்கப்படும் என மோடி அறிவிக்க, அதை ஏற்க மறுத்த மம்தா, மாநில அரசே சிலையை சரி செய்து நிர்மாணிக்கும் என்று கூறியிருந்தார்.

அதன்படி உடைக்கப்பட்ட சிலை சரி செய்யப்பட்டு, மேலும் மெருகூட்டப்பட்டு மீண்டும் கல்லூரி வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்டது. அந்த சிலைக்கு    மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.