டில்லி

நீதிபதி குரேஷிக்கு மத்திய பிரதேச உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பதவி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது குறித்து ”தி பிரிண்ட்” ஆங்கில ஊடகம் புதிய செய்தி வெளியிட்டுள்ளது

 

குஜராத் உயர்நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியான குரேஷிக்கு உச்சநீதிமன்ற கொலிஜியம் மத்திய பிரதேச தலைமை நீதிபதி பதவிக்கு பரிந்துரை செய்தது. இவர் தற்போது மும்பை உயர்நீதிமன்ற்த்தில் பணி புரிகிறார். ஆனால் மோடியின் அமைச்சரவை அந்த பரிந்துரையை ஏற்கவில்லை. அந்த பரிந்துரையை ஒத்தி வைத்து விட்டு நீதிபதி ரவிசங்கர் ஜா வை தற்காலிக தலைமை நீதிபதியாக நியமித்துள்ளது.

இது குறித்து நேற்று குஜராத் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கம் ஒரு கூட்டம் நடத்தியது. அந்த கூட்டத்தில் குரேஷியின் பதவி உயர்வு குறித்து பேச சங்கத்தின் பிரதிநிதிகளை பிரதமர் மோடி, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், மற்றும் சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் ஆகியோரை அனுப்ப தீர்மானம் இயற்றப்பட்டது. இந்த கூட்டத்தின் தலைவரான யதின் ஓஜா செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது ஓஜா, “முந்தைய குஜராத் முதல்வராக பிரதமர் மோடி மற்றும் குஜராத் அமைச்சராக அமித்ஷா ஆகியோர் பதவி வகித்தனர். அவர்கள் குறித்த வழக்குகள் 2010 மற்றும் 2011 ஆம் வருடம் நீதிபதி குரேஷியால் விசாரணை செய்யபப்ட்டது. அந்த வழக்குகளில் குரேஷி இவர்கள் இருவருக்கும் எதிரான தீர்ப்பை அளித்துள்ளார். அதுவே தற்போது அவருடைய பதவி உயர்வுக்கு எதிராக உள்ளது” என குறிப்பிட்டுள்ளர்.

குரேஷிக்கு எதிராக மத்திய அரசு நடந்து வருவது ஏற்கனவே நடந்துள்ளது என வேறு சில குஜராத் உயர்நீதிமன்ற வழக்கறிஞர்களும் தெரிவித்துள்ளனர்.

இதற்கு முன்பே குரேஷியை விட பணியில் இளையவரான தவே குஜராத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். வழக்கறிஞர்கள் அதை எதிர்த்ததால் குரேஷி மும்பை உயர்நீதிமன்றத்துக்கு பணி நிமித்தமாக அனுப்பப்பட்டுள்ளார். இதை அவர்கள் சுட்டிக் காட்டி உள்ளனர்.

 

Thanx ; THE PRINT