சென்னை:
மேற்குவங்க இடைத்தேர்தலில் பபானிபூர் தொகுதியில் மம்தா பானர்ஜி போட்டியிட உள்ளார்.
மேற்குவங்க சட்டப் பேரவைத் தேர்தலில் ம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் மகத்தான வெற்றியைப் பதிவு செய்தது. மொத்தமுள்ள 294 இடங்களில் 213 தொகுதிகளை அக்கட்சி கைபற்றியது. தீவிர பிரச்சாரம் செய்த போதிலும் பாஜக தேர்தலில் ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை. 77 இடங்களுடன் இரண்டாவது பெரிய கட்சியாக உருவெடுத்தது.
மேற்கு வங்க சட்டப் பேரவைத் தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட முதல்வர் மம்தா தோல்வி அடைந்தார். அவரது முன்னாள் சகாவான சுவேந்து அதிகாரி, பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். எனினும் மேற்குவங்க முதல்வராக மம்தா பானர்ஜி பதவியேற்றார். அவர் அடுத்த 6 மாதங்களுக்குள் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட வேண்டும். அவர் மேற்குவங்க மாநிலத்தில் உள்ள பபானிபூர் தொகுதியில் போட்டியிட உள்ளார்.