கொல்கத்தா: மேற்கு வங்கம், அஸ்ஸாம் மாநிலங்களில் சட்டமன்ற தேர்தலின் 2வது கட்ட வாக்குப்பபதிவு இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

மேற்குவங்க மாநிலத்தில் மம்தா பானர்ஜி போட்டியிடும் நந்திகிராம் தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதனால், அங்கு பலத்த பாதுகாப்பபு போடப்பட்டு உள்ளது.

மேற்குவங்க மாநிலத்தில் 8 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. முதல்கட்ட வாக்குப்பதிவு கடந்த 27ஆம் தேதி நடைபெற்றது. இதையடுத்து இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு  இன்று நடைபெற்று வருகிறது.  இதற்கான பிரச்சாரம் நேற்று முன்தினம் மாலையுடன் முடிவடைந்தது.

இன்று நடைபெற்று வரும்  2-ம் கட்ட வாக்குப்பதிவு  30 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது.  30 தொகுதிகளில் 19 பெண்கள் உள்பட 171 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அதேபோல், வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அஸ்ஸாமிலும்  இன்று  2- ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது. அசாம் மாநிலத்தில் 39 தொகுதிகளில் 26 பெண்கள் உள்பட 345 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெறுவதை ஒட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இன்று அதிகாலை முதலே, வாக்காளர்கள் தங்களது ஜனநாயக கடமைமையை செய்து வருகின்றனர்.