வார ராசிபலன்: 29/07/2022 முதல் 04/08/2022 வரை! வேதா கோபாலன்

Must read

மேஷம்

பொருளாதார சிக்கல் நீங்கும். எந்த ஒரு காரியத்திலும் தெளிவான முடிவு எடுக்க முடியாத குழப்பம் ஏற்பட்டு பின்னர் சரியாகும். சொன்ன சொல்லை காப்பாற்றுவீங்க. எதிர்ப்புகளை சமாளித்து முன்னேற எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும். தொழில் வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவி கிடைக்கலாம். சிலருக்கு கூடுதல் பொறுப்புகள் வரும். வருமானம் கூடும். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவதில் ஆர்வம் இருக்கும். கணவன் மனைவிக்கிடையே நிதானமான போக்கு காணப்படும். பிள்ளைகளின் கருத்தை அறிந்து அதற்கேற்றார் போல் செயல்படுவீங்க. மூத்த சகோதரர் உடல்நலத்தில் கவனம் தேவை. பெண்களுக்கு மனக்குழப்பம் நீங்கும். மாணவர்களுக்கு கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். கூடுதலாக பொறுப்புகள் சேரும். செலவுங்க சந்தோஷத்தைக் குடுக்கும்.

ரிஷபம்

பதவிஉயர்வு உள்ளிட்டவை தேடி வரும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். தொழில் தொடர்பாக தேவையான உதவிகள் கிடைக்கும். பொருட்கள் விரைந்து விற்பனை யாகும். ஊழியர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். வியாபார வளர்ச்சி சிறப்பாக இருக்கும். புதிய வியாபார வாய்ப்புகள் தேடி வரும். சிறு வியாபாரிகள் முதல் பெரு வியாபாரிகள் வரை அதிக லாபம் ஈட்டக் கூடிய வாரமாக இருக்கும். பெண்கள் தங்கள் தேவைகள் பூர்த்தியாகி கண்டு மகிழ்ச்சி அடைவார்கள். திருமண முயற்சிகள் கைகூடும். சகோதர வழியில் இருந்த வருத்தங்கள் நீங்கி ஒற்றுமை ஏற்படும். புத்திரபாக்கியம் இல்லாதவர்களுக்கு இப்பொழுது புத்திரபாக்கியம் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான உதவிகள் கிடைக்கும். கலைத் துறை சார்ந்தவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும், எங்கும் எதிலும் நிதானப்போக்கு இருக்கும் என்பதால் பொறுமையுடன் சாதிக்க வேண்டும்.

மிதுனம்

தடைகள் அகலும். துன்பம் வருவதுபோல் இருக்குமே தவிர, வராது. மனதில் ஏதேனும் கவலை, பயம்  ஏற்பட்டால் அது அவசியமற்ற ஒரு கற்பனையாகவே இருக்கும். உங்க பேச்சே உங்களுக்கு எதிர்ப்பை உண்டாக்காம கேர்ஃபுல்லா இருங்க. கவனமாக யோசிச்ச பிறகு பேசுவது நல்லது. தொழில் வியாபாரத்துல எதிர்பார்த்த நிதியுதவி  கிடைக்கும். பர்சனல் வாழ்க்கையில் இருந்துக்கிட்டிருந்த இருந்த அலைச்சல் குறையும். உத்யோகத்துல உள்ளவங்களுக்கு விரும்பிய வகையில் மாற்றம் வரலாம். குடும்பத்தில் வீண் வாக்குவாதங்கள் ஏற்படாம  அவாய்ட் செய்துடுங்க. கணவன், மனைவிக்கிடையே நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. பிள்ளைங்க உடல் ஆரோக்கியத்தில் கவனமா இருப்பீங்க. உறவினர்கள், நண்பர்களிடம் கலகலப்பா கலந்து பேச சந்தர்ப்பம் வரும். எந்த ஒரு காரியத்தையும் செய்து முடிக்கும் வரை அந்த காரியம் முடியுமோ, முடியாதோ என்ற மனக் கவலை இருந்துக்கிட்டே இருந்தாலும் நல்லபடியாக முடிஞ்சு ஹப்பாடான்னு நிம்மதிப் பெருமூச்சு விடுவீங்க.

கடகம்

வீண் அலைச்சல் குறையும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெறுவது பற்றிய கவலை நீங்கும்.  ஆன்மிக எண்ணம் அதிகரிக்கும். கடின முயற்சியால் வெற்றி பெறுவீங்க. வீண் கவலை ஏற்பட்டு நீங்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் அதிகரிக்கும். உங்க சொத்து தொடர்பான விவகாரங்களில் இருந்த தாமதம் விலகும். பக்தியில் நாட்டம் அதிகமாகும். நெருங்கிய நண்பர்களிடம் மனஸ்தாபம் ஏற்பட்டு உடனேயே அது நீங்கும். தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் பார்ட்னர்கள் மற்றும் வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து செல்வது நன்மை தரும். உத்யோகஸ்தர்கள் வேலை பளு ஏற்பட்டாலும், எப்படியாவது செய்து முடித்து விடுவீங்க. சக ஊழியர்கள் ஒத்துழைப்பு  இருக்கும். குடும்பத்தினருடன் ஏதாவது ஒருவகையில் வாக்குவாதம் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே மனஸ்தாபம் முடிவுக்கு வரும். வெளியூருக்கு டிராவல் செய்ய வேண்டி வரும். .

சிம்மம்

நன்மைகள் நடைபெறும். எந்த காரியத்தில் ஈடுபட்டாலும் அடுத்தவரின் உதவி கிடைக்கும். உங்களுக்கு மிகவும் வேண்டியவர் உங்களை விட்டு விலகிச் சென்றார் அல்லவா? அவர் சமாதானக்கொடி பறக்க விடுவார். மாற்று மதத்தினரின் உதவி கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த பணவரவு இருக்கும்.புதிய முயற்சிகளில் ஈடுபடுவீங்க. உத்யோகத்தில் இருப்பவர்கள் செய்யும் பணிகள் திருப்திகரமாக நடந்து முடியும். எதிர்பார்த்த இடமாற்றம் வரலாம். குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களை அனுசரித்து செல்வது மனதுக்கு இதமாக இருக்கும். கணவன், மனைவிக்கிடையே  வாக்குவாதம் ஏற்பட்டாலும் நத்திங் சீரியஸ். குடும்பத்தில் உள்ளவங்க உங்களை புரிந்து கொண்டு நடப்பாங்க. பெண்களுக்கு சிறு வெற்றி உண்டாகும். கலந்துகொள்ளும் போட்டிகள் எதிலும் வெற்றியே கிடைக்கும்.

கன்னி

மற்றவர்களிடம் பேசும் போது யாரைப் பற்றியும் விமர்சிக்காமல் இருப்பது நல்லது. மாணவர்கள் அதிக நேரம் ஒதுக்கிப் பாடங்களை படிப்பீங்க. எதிலும் கவனம் அவசியம். சுப நிகழ்வுகள் நடக்கும். காரியதடை, தாமதம் விலகும். பணியிடத்தில் வேலையை முடிக்க கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். இருந்தாலும் பாராட்டுக் கெடைக்குங்க. அன்னிய மொழி பேசுபவர்களால் உதவி கிடைக்கும். வசிக்கும் இடத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் முன்னேற தேவையான வாய்ப்பு கிடைக்கும். தொழில் போட்டிகள் விலகும். உத்யோகத்தில் இருப்பவர்கள் உற்சாகமாக பணிகளை கவனித்தாலும், அலுவலக வேலைகளில் தாமதம் இருக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு செயல்படுவாங்க. பிள்ளைங்க மூலம் பெருமை உண்டாகும்.

துலாம்

மனதில் தைரியம் தன்னம்பிக்கை இன்கிரீஸ் ஆகும். வாக்கு வன்மையால் காரிய வெற்றி உண்டாகும். எதிர்பாராத திடீர் செலவு உண்டாகலாம்.  சமாளிச்சுடுவீங்க. கடவுள் பக்தி அதிகரிக்கும். கொடுக்கல், வாங்கல், சொத்து வாங்குவது ஆகியவற்றில் கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டி நீங்கும். கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். சரக்குகளை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும்போது கவனம் தேவை. உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு மறைமுக பிரச்சனைகள் தீரும். குடும்பத்தில் இருப்பவர்கள் நீங்க கூறுவதை ஏற்காமல் தங்களது விருப்பப்படி ஏதாவது செய்தாலும் பிறகு சரண்டர் ஆவாங்க. பிள்ளைங்களுக்காக ஹாப்பியா செலவு செய்வீங்க. பெண்கள் அடுத்தவர் கூறும் கருத்துக்களை அப்படியே ஏற்றுக்கொள்ளாமல் அதில் உள்ள நல்லது கெட்டதை யோசிச்சு தப்பிப்பீங்க. ஸ்டூடன்ட்ஸ் எதையும் நன்கு யோசித்து பின்னர் செய்வது நன்மை தரும்.

விருச்சிகம்

சுபச்செலவுகள் ஏற்படும். எந்த காரியத்தை செய்தாலும் அதில் வேகத்தை காட்டாமல் நிதானமாக செய்து வின் பண்ணுவீங்க. தொழில் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு தொழில் தொடர்பான சின்னதொரு அலைச்சல் உண்டாகும். பணவரத்து தாமதப்பட்டாலும் வந்து சேரும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை தொடர்பான கவலை தீரும். சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நல்லது. குடும்ப விஷயமாக அலைய வேண்டி இருக்கும். கணவன் மனைவிக்கிடையே  அன்யோன்யம் அதிகரிக்கும். தாய், தந்தையரின் உடல்நலனில் கவனம் தேவை. எதிலும் உற்சாகம் கூடி சோம்பல் குறையும். பெண்கள் எடுத்த வேலையை சிறப்பாக செய்து முடித்து நற்பெயர் பெறுவீங்க. அதே நேரத்தில் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். பரவாயில்லீங்க. மாணவர்கள் கவனத்தை சிதறவிடாமல் பாடங்களை படிப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் அதிகரிக்கும். பலன் கூடும்.

தனுசு

எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் இருந்து வந்த  தடை தாமதம் நீங்கும். அவசர புத்தி உள்ளோர் சங்கடமான சூழ்நிலையை சந்திக்க வேண்டி இருக்கும். எனவே கொஞ்சம் கேர்புல்லா எதையும் செய்ங்க. ஜீரணகோளாறு  ஏற்பட்டாலும் உடனே சரியாயிடும். செலவுங்க அதிகரிக்கும். ஆனா அதோட பலன் இனிக்கும். அடுத்தவரை நம்பி காரியத்தில் இறங்கும் போது கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் தடைங்களைத் தாண்டி முன்னேறுவீங்க. உத்யோகத்துல உள்ளவங்க எந்தப் பணியை முதலில் முடிப்பது என்ற குழப்பம் ஏற்படும். குடும்பத்தினரால் சிறு சலசகலப்பு ஏற்பட்டு பின்னர் நீங்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்துக்கிட்டிருந்த வேற்றுமை நீங்கறதுக்கு முயற்சி எடுத்து வின் பண்ணுவீங்க. பிள்ளைங்க கிட்ட பேசும்போது எச்சரிக்கை தேவை. ரிலேடிவ்ஸ் கிட்ட எந்த பிராமிஸும் தராமல் இருப்பது நல்லதுங்க. லேடீஸ் அடுத்தவர்களுக்கு உதவிகள் செய்வதில் சங்கடமான சூழ்நிலை உண்டாகும். மாணவர்களுக்குப் போட்டிகள் சாதகமான பலன் தரும். திட்டமிட்டு எதையும் செய்து வெற்றி பெறப்பாடுபடுவீங்க.

சந்திராஷ்டமம் : ஜூலை 27 முதல் ஜூலை 30 வரை – சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும், செயலிலும் கவனம் தேவை

மகரம்

ஸ்டூடன்ட்ஸ் கவனத்துடன் பாடங்களை படிப்பது கூடுதல் மதிப்பெண் பெற உதவும். எதையும் சமாளிப்பீர்கள். உழைப்பின் மூலம் உன்னத நிலையை அடைவீங்க. மனதெளிவு உண்டாகும். எந்தக் காரியத்தையும் செய்து முடிக்கும் திறமை அதிகரிக்கும். வயிற்று கோளாறு நீங்கி நிம்மதி வரும். சமூகத்துல மதிப்பும், மரியாதையும் உயரும். ஆன்மிக நாட்டம்  அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் லாபம் கூடும். ஏற்றுமதி சிறக்கும். பழைய பாக்கி வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேன்மை உண்டாகும்.  குடும்பத்தினர்  உங்களை அனுசரித்து செல்வாங்க. கணவன் மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கும். பிள்ளைங்களோட உடல்நிலையில் கவனம் தேவை.  பெண்கள் திறமையாக செயல்பட்டு காரிய வெற்றி காண்பர். மாணவர்கள்  கல்வியில் சிரமப்பட்டு முன்னேற்றம் காண்பீர்கள். தேவையற்ற பயங்களால் வேலை ஒன்று தடைப்படக்கூடும்.

சந்திராஷ்டமம் : ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 1 வரை – சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும், செயலிலும் கவனம் தேவை

கும்பம்

மகன்/ மகளின் கல்வி தொடர்பான செலவு குறையும். நிலுவையில் உள்ள பணம்  கைக்கு வந்து சேரும். மனோதைரியம் கூடும். எப்படிப்பட்ட சூழ்நிலையையும் சமாளிச்சு முன்னேறிடுவீங்க. ஆனால் மற்றவர்களின் சூழ்ச்சிக்கு ஆளாகாமல் கவனமாக இருப்பது அவசியம். வழக்கு விவகாரங்களில் சாதகமான பலன் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். பழைய பாக்கிங்க வசூலாகும். உத்யோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.சக ஊழியர்களிடம் நிதானமாக பேசுவது நல்லது. குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும்.பிள்ளைங்களோட நலனில் அக்கறை காட்டுவீங்க. குடும்பத்தாருடன் விருந்து நிகழ்ச்சியில் கலந்துக்குவீங்க. உறவினர்கள் மத்தியில் மதிப்பும் மரியாதையும் கூடும். முன் கோபத்தை குறைத்து நிதானத்தை கடைபிடித்து பிரச்னைகள் வராமல் காப்பாத்திக்குவீங்க.

சந்திராஷ்டமம் : ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 4 வரை – சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும், செயலிலும் கவனம் தேவை

மீனம்

குடும்பத்துல சந்தோஷம்  அதிகரிக்கும். சொத்துக்கள் வாங்குவது, விற்பது ஆகியவற்றில் முன்னேற்றம் இருக்கும். பயணங்களின் போதும், வாகனங்களில் செல்லும் போதும் எச்சரிக்கை தேவை. சரியான நேரத்தில் உண்ணவும் உறங்கவும் முடியாத சூழ்நிலை உண்டாகும். மற்றவங்களுக்கு வலிய சென்று உதவுவதால் பழைய விரோதம் நீங்கும். தொழில் வியாபாரம் தொடர்பாக அலைய வேண்டி இருக்கும். பணியாளர்களிடம் நிதானத்தை கடைப்பிடித்து வெல்வீங்க. உத்யோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரி கூறுவது படி நடந்து கொள்வது நன்மை தரும்.  குடும்பத்தில் இருப்பவர்களால் பிரச்னைகள் உண்டாகலாம். குழந்தைங்களோட உடல் ஆரோக்கியத்திலும், வாழ்க்கை துணையின் ஆரோக்கியத்திலும் கவனம் தேவை. கணவன், மனைவிக்கிடையே இருந்த மனகசப்பு மாறும். பெண்கள்  வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.

More articles

Latest article