மேஷம்

எந்த ஒரு வேலையும் தடை இன்றி முடியக்கூடிய வாய்ப்புகள் உண்டு. கொடுத்த பொறுப்புகளை சரியாக செய்வீங்க. கணவன் மனைவிக்கு இடையே இருந்து வந்த பனி போராட்டம் முடிவுக்கு வரும். தொழில் செய்பவர்கள் பங்குதாரர்களுடன் வாக்குவாதங்களை தவிருங்கள். உத்தியோகஸ்தர்கள் உங்களை சுற்றியுள்ள சூழ்ச்சிகளை எளிதாக முறியடிப்பீர்கள். தன்னம்பிக்கை உங்களுக்கு எப்பவும் நல்லாத்தான் இருக்கும், சமீபத்தில்தான் அது மிஸ் ஆயிடுச்சுங்க. பூனை மாதிரிப் பதுங்கியிருந்த நீங்க, நல்ல காரணங்களுக்குப் புலி மாதிரி பாய்வீங்க. குட் லக். நல்ல நல்ல செலவுகளும் வரும். அதை மிஞ்சும்படியான வருமானமும் வரும். ஒங்க டாடிக்குப் பாராட்டும் பெருமையும் கிடைக்கும்.அவர் அலுவலகத்தில் அவருக்கு செல்வாக்கு ரொம்பவும் அதிகமாகும். நியாயத்துக்கும் நேர்மைக்கும் புறம்பான காரிங்களைச் செய்யும்படி உங்களை யார் வற்புறுத்தினாலும்  மாட்டேன்னு சொல்லிடுங்க.

சந்திராஷ்டமம் : அக்டோபர் 27 முதல் அக்டோபர் 29 வரை

ரிஷபம்

எதிர்பாராத நன்மைகள் நடக்கப் போகிறது. சுப காரிய முயற்சிகளில் இருந்து மந்த நிலை மாறும். கணவன் மனைவி இடையே விரிசல் எழாமல் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு பயணங்கள் மூலம் ஆதாயம் காணும் யோகம் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வேலை பற்றிய நுணுக்கங்களை கற்றுக் கொள்ளும் வாய்ப்பு கிட்டும். ஆரோக்கியம் சீராகும். வாயை இறுகத் தைத்துக்கொண்டு பேச்சை அடக்கினால் நல்லது. சுளீர் சுளீர் என்று நாக்கைச் சாட்டைபோல் சுழற்றாதீங்கப்பா. அது பூமராங் மாதிரி செயல்படும். நீங்க நல்லது பேசினால் அதன் நற்பலன் உங்களுக்கும் உண்டு என்பதை நினைவுல வெச்சுக்குங்க. கட்டாயமா யாருக்கும் சாபம் இடவே கூடாது. நல்ல வார்த்தைகள் மட்டுமே வாயில் வருமாறு பார்த்துக்குங்க. உங்களுக்கு உங்க மேலேயே நம்பிக்கை இல்லைன்னா என்ன செய்யறது?

சந்திராஷ்டமம் : அக்டோபர் 29 முதல் அக்டோபர் 31 வரை

மிதுனம்

குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். உங்களுடைய முயற்சிகளுக்கு உற்றார், உறவினர்களின் பங்களிப்பு இருக்கும். தடைகளை தாண்டிய வெற்றி அடையக்கூடிய வாய்ப்பு உண்டு. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு தைரியம் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு இழுப்படியாக இருந்த வேலையும் சுலபமாக முடியும். உடல் நலன் தேறும். தைரியமும் வீரமும் அதிகரித்து மனதில் இருந்ததை வாய்விட்டுக் கேட்பீங்க. இன்னும் கேட்கவில்லையா? எனில் ஒரு சின்ன ஆலோசனை சொல்றேன். நீங்க கேட்க விரும்புவதைச் சுள்ளென்று கேட்காதீர்கள்.    புதிய நன்மைகளை எதிர்பார்க்கக்கூடிய வாரம் இது. யெஸ். யூ கேன் எக்ஸ்பெக்ட். அதிகாரிங்ககிட்டயும் பெரிய மனுஷங்க கிட்டேயும் பேசும்போது குரலில் பணிவு இருப்பது போல் நடிக்கவாவது செய்யுங்களேன். வாக்குவாதத்தைத் தவிர்க்கப்பாருங்க. நீங்க விரும்பியது கிடைக்க வாய்ப்பு அதிகம் உள்ளது.

சந்திராஷ்டமம் : அக்டோபர் 31 முதல் நவம்பர் 2 வரை

கடகம்

நீங்கள் தைரியத்துடன் செயல்படக்கூடிய வாரமாக இருக்கிறது. உங்களை எதிர்த்தவர்கள் பின்வாங்குவாங்க. கணவன் மனைவி இடையே மட்டுமின்றி மற்றவர்களிடமும் வார்த்தையில் கட்டுப்பாடு தேவை. சுப காரிய முயற்சிகளில் அலைச்சல் ஏற்படலாம். சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு போட்டிகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். திடீர்னு புது வேலை கிடைச்சு உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். சம்பளம் கூட நீங்க நினைச்சதைவிடக் கூடவே இருக்கும். கணவருக்கு/ மனைவிக்கு திடீரென்று பதவியோ சம்பளமோ உயரும். யார் கண்டது. இரண்டுமே உயரக்கூடும். தந்தைக்கு சிறு உபாதைகள் வந்தாலும் உடனுக்குடன் சரியாகி நிம்மதியளிக்கும். அம்மாவுக்குப் பாராட்டும் புகழும் கிடைக்கும். குடும்பத்தில் சந்தோஷமான விரிவாக்கம் இருக்கும்.

சிம்மம்

உங்களுடைய தேவைகளில் ஒன்று நிறைவடையும். சிந்தனைகள் ஆழமாக காணப்படும். எதையாவது தீவிரமாக சிந்தித்துக் கொண்டே இருப்பீர்கள். கணவன் மனைவி இடையே பொறுமை தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். தொழில் மட்டும் வியாபாரம் செய்பவர்களுக்கு பொருளாதார ரீதியான முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். செல்வாக்கும் அதிகாரமும் பொறுப்பான பதவியும் உங்களை ‘கெத்’தாக வைக்கும். அதுக்காக ஓவரா அலட்ட வேண்டாம்.  அப்பாவுக்கும் உங்களுக்கும் இடையே பிரச்சனைகள் ஏற்படக்கூடும். அவருக்கு ஒரு கஷ்டம் என்றால் நீங்கதானே முதல்ல விரைந்து உதவப்போறீங்க? அதை அவருக்குப் புரிய வைச்சு ஒற்றுமையாப்போங்க. யூ கேன். குழந்தைங்க மேடை ஏறிக் கைதட்டலும் பரிசும் வாங்குவாங்க. சகோதர சகோதரிகளுடன் சற்று முகத்தைத் தூக்கி வெச்சுப்பீங்க. புதுசா வாகனம் வாங்கிக் குடும்பத்துடன் சந்தோஷமா ஊர்சுற்றுவீங்க.

கன்னி

நீங்கள் உங்களுடைய முக்கிய முடிவுகளை எடுக்க நல்ல நாளாக அமைந்துள்ளது. எந்த ஒரு விஷயத்தையும் வேண்டாம் அல்லது வேண்டும் என்று தீர்க்கமாக முடிவெடுங்கள். கணவன் மனைவிக்கு இடையே இனம் புரியா அன்பு மலரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நினைத்ததை சாதிக்க கூடிய வாய்ப்புகள் கிட்டும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சில விஷயங்கள் வியப்புக்குரிய வகையில் சாதகமாக அமையும். பேச்சில் ஒரு விதக் கவர்ச்சி அம்சம் இருப்பதால் உங்களை எல்லோருக்கும் ரொம்பவே பிடிக்கும். மேடைப்பேச்சில் வெளுத்து வாங்கிக் கைதட்டல் பெறுவீங்க. குடும்பத்தில் காணாமல் போயிருந்த சந்தோஷமும் நிம்மதியும் , அமைதியான உறக்கமும் நல்ல முறையில் உங்களை வந்தடையும். சண்டை சச்சரவுகள் தீரும். சிநேகிதர்களிடம்/ தோழிகளிடம் சற்று முறைத்துக் கொள்வீங்க. என்ன செய்ய, அவங்க செய்வதும் நியாயம் அல்லதான். நியாயம் உங்க பக்கம்தான். டோன்ட் ஒர்ரி. சமாதானமாயிடுவீங்க

துலாம்

உற்சாகத்துடன் இருப்பது நல்லது. சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் கூடுதல் உழைப்பை கொடுக்க வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நெருங்கிய நண்பர்களால் சந்தோஷமான நன்மைகள் ஏற்படும். சின்னதாகக் காலில் வலி வீக்கம் இருந்தாலோ அடி பட்டாலோ முதல் உதவி சிகிச்சை செய்ய டாக்டரிடம் போங்க. நீங்களே செல்ஃபி வைத்தியமெல்லாம் செய்துக்க வேணாங்க. அதிருக்கட்டும்… ஆபீசிலும் ரிலேடிவ்ஸ் கிட்டயும் தயவு செய்து பணிஞ்சு போங்களேன். கணவன் மனைவிக்குள் வாக்குவாதம் ஏற்படுவதெல்லாம் சகஜம். அதையெல்லாம் போய்ப் பெரிசா நினைத்துத் தூக்கத்தையும் நிம்மதியையும் இழக்காதீங்கப்பா. ரிலாக்ஸ். இத்தனை காலம் ஓடி ஒளிஞ்சுபிடிச்சு விளையாடிக்கொண்டிருந்த தன்னம்பிக்கை ஒரு வழியா உங்க கிட்ட வந்து ஒட்டிக்கும்.

விருச்சிகம்

புதிய அனுபவங்கள் கிடைக்க கூடிய இனிமையான நல்ல வாரமாக இருக்கப் போகிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வாகன ரீதியான பிரச்சனைகள் வரலாம் கவனம் வேண்டும். கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு முக்கிய பொறுப்புகள் கிடைக்கும் எனவே விழிப்புணர்வுடன் இருப்பது நல்லது. குடும்பத்தினரின் புத்திசாலித்தனத்தால் உறவினர் மத்தியில் ஒற்றுமையும் நன்மையும் ஏற்படுவது போலவே ..அலுவலகத்தில் நீங்க புத்திசாலித்தனமாய் நடந்து கொண்டு கம்பெனிக்கு லாபம் ஏற்படச்செய்வீங்க. அதனால் உங்களுக்கும் பாராட்டும், புகழும் ஏற்படும். நண்பர்கள் நல்லவங்களா அமைவது வரம். அந்த வரம் உங்களுக்குக் கிடைச்சிருக்கு. நம்புங்க. அவங்க உங்களுக்கு நன்மைதான் செய்வாங்க. ஆரோக்யத்தை மிக முக்கியமாகப் பார்த்துக்குங்க.

தனுசு

நீங்கள் உங்களுடைய குடும்ப சூழ்நிலையை அறிந்து விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. சகோதரர்களுக்கு இடையே இருந்து வந்த மனக்கசப்புகள் அகலும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு அவசரமாக வாங்கி இருந்த பணம் திரும்ப கொடுக்க வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு அதிரடி மாற்றங்கள் நிகழும் வாய்ப்பு உண்டு. ஆரோக்கியத்தில் ஏற்றம் காணலாம். திடீர் உத்யோகம் கிடைக்க வாய்ப்பிருக்கு, அதுவும் வெளிநாட்டில் கிடைக்கலாம். இத்தனை காலம் மனசையும் உடம்பையும் வாட்டிக்கிட்டிருந்த பிரச்சினைகள் கல் எறிந்தவுடன் பறந்தோடும் பறவைகள் மாதிரி ஓடியிருக்குமே! நல்ல காலம் ஆரம்பித்துவிட்டது. நிறையச் செலவுகள் உண்டு. கொஞ்சம் தயாரா இருங்க. ஆனாலும் அந்தச் செலவுங்களால பிற்காலத்தில் பெரிய நன்மைகள் உண்டு. சுருங்கச் சொல்லணும்னா, அவற்றை நீங்க செலவுகளாய் நினைக்காமல் முதலீடா நினைச்சுக்குங்க. யெஸ். இன்வெஸ்ட்மென்ட்.

மகரம்

உங்களுக்கு புதிய முயற்சிகளில் தொடர் தடைகள் நீங்கும். எனவே நிம்மதியும் சந்தோஷமும் வெற்றியும் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு உங்களுடைய திறமையை வெளிப்படுத்தக்கூடிய வாய்ப்புகள் கட்டும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வேலையில் இருக்கும் நெளிவு சுளிவுகளை கற்கும் யோகம் உண்டு. சகோதர சகோதரிகளுக்குப் பெரிய பெரிய நன்மைகளும் லாபங்களும் ஏற்படுமுங்க. அவங்க உங்களை நன்றியோடு நினைப்பாங்க. அவங்களோட நீங்க ஜாலியா நாலு இடம் சுற்றுவீங்க. அவங்களுக்கு அரசாங்கத்தால் நன்மை விளைஞ்சுதேன்னு பொறாமை கொள்ளாமல் சந்தோஷம் கொள்ளுங்க. இப்போ இவங்களுக்கு ஏற்பட்ட மாதிரி உங்களுக்கும் அரசாங்க நன்மை கிடைக்கப்போகும் நாள் அதிக தூரத்தில் இல்லை.  உழைப்புக்கேற்ற ஊதியம் உறுதியாக உண்டுங்க.

கும்பம்

உங்களுக்கு மகிழ்ச்சி நிறைந்த வாரமாக இருக்கப் போகிறது. எடுத்த முயற்சிகளில் வெற்றி காணலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு உங்களுடைய சுய சிந்தனையால் புதிய மாற்றத்தை காண போகிறீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நினைத்தது நடக்கும். தேவையற்ற வேலைகளை .. குறிப்பாக சக பணியாளர்களின் வேலையை இழுத்து போட்டுக் கொள்ளாதீர்கள். குழந்தைங்க சின்ன சின்ன ஏமாற்றங்கள்  தரக்கூடும். அவங்களுக்கு பாதிப்பிருக்காது. ஆனால் அவங்களுக்கு உங்களால கஷ்டம் வந்துடக்கூடாதில்லையா. அதை கவனமாப் பார்த்துக்குங்க. கொஞ்ச நாட்களில் அவங்க  உங்களைப் பெருமைப்படுத்தப்போறாங்க. உங்களின் முயற்சிக்கு நல்ல பலன்களைப் பெற முடியும் என்றாலும், சில தடங்களுக்கு பின்னரே முழு பலனைப் பெற முடியும் பட் யூ வில் கெட் இட்.

மீனம்

எதையும் பொறுமையுடன் கையாளுவது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு அரசு வழி காரியங்கள் அனுகூல பயன்படுத்தும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சில புதுமைகளை செய்ய வேண்டி இருக்கும். கணவன் மனைவி இடையே நடக்கும் பிரச்சினைகளை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம். ஆரோக்கியத்தில் அக்கறை கொள்ளுங்கள். அரசாங்கத்திடமிருந்து ஏதேனும் குட் நியூஸ் எதிர்பார்த்திருந்தா அது இப்போ முயற்சியே  செய்யாமலும்கூட உங்களுக்குக் கிடைக்குங்க. அடி சக்கை ! என்றைக்கோ செய்த முதலீடுகள் இப்போ பலன் கொடுக்கும். வரவே வராது என்று கணக்கில் சிவப்புக் கோடு போட்டு முடித்த விஷயங்கள் இப்போது வருமானமும் லாபமும் கொடுக்கும். ரொம்ப நாளாய்த் திரும்ப வருமான்னு காத்துக்கிட்டிருந்த கடன் தொகை வசூலாகும். நீங்க கலைத்துறையில் இருப்பவரா? அப்போ சரி அப்படியானால்,  ஜெயிச்சு மேலே வந்து முன்னேறிடுவீங்க.