மேஷம்

நீங்க எடுக்கற எல்லா விஷயஙகள்லயும் நல்ல ரிசல்ட் கெடைக்குங்க. பணவரத்து இருக்கும். ரிலேடிவ்ஸ் வருகையால் மனம் மகிழ்ச்சியடையும் சம்பவம் நிகழும். வெளியூர் பயணம் செல்ல வேண்டி வரலாம். செலவும் அதிகரிக்கும். கோபத்தை கட்டுப்படுத்துவது நல்லது. விருந்து நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வேண்டி வரலாம். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் கோபத்தை குறைத்துக்கொள்வது நன்மையை தரும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். ஃப்ரெண்ட்ஸ் வருகை இருக்கும். பிள்ளைகள் வழியில் சந்தோஷம் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் உண்டாகும். லேடீஸுக்கு…  பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும் மனம் மகிழும்படியான சூழ்நிலை உருவாகும். பயணங்கள் செல்ல நேரிடும். செலவு கூடலாம். எதிர்மறை எண்ணங்களை அகற்றுங்களேன் ப்ளீஸ்…  மனஅழுத்தத்திலிருந்து விடுபடலாம். குழந்தைங்க விஷயத்துல மனம் நிறையும். செலவு நன்மை தரும். வார்த்தைகளில் நிதானப்போக்கு அவசியம். கேர்ஃபுல் வேர்டிங்ஸ்

ரிஷபம்

ஆலயத் திருப்பணிகள் செய்யும் வாய்ப்புகள்கூடக் கிடைக்கும். பெண்களுக்கு மம்மி  வீட்டிலிருந்து சொத்து, பணம், நகை வந்து சேரும். வெளிநாட்டில் இருப்பவர்கள் சொந்த ஊருக்கு வர விரும்பி சந்தோஷமா வருவீங்க.  வழக்கு சம்பந்தமாக சற்று விட்டுக் கொடுத்து சமாதானமாகப் போறது நல்லதுங்க. ஆடல், பாடல்  போன்ற கலைத் துறையில் உள்ளவங்களுக்கு  ஃபாரின் போக வாய்ப்பு கிடைக்குமுங்க. கணவர் அல்லது மனைவியின் பெற்றோர் உடல்நலம் முன்னைவிட பெட்டராகும். சின்னதாய் மருத்துவ செலவுகளும் ஏற்பட சான்ஸ் இருக்கங்க. மாணவர்களுக்கு பள்ளி கல்லூரிகளில் அதிக முயற்சியின் பேரில் பாஸ் செய்வீங்க. நண்பர்களிடம் அதிக நெருக்கம் காட்டாமல் இருப்பது நல்லதுங்க. குழந்தைகளின் நடவடிக்கையில் இருந்தவந்த கவலைகள் தீரும். பெண்கள் இடம் பொருள் சூழ்நிலை அறிந்து நடப்பது  நல்லதும்மா. மாமன், அத்தை வகை உறவுகளுடன் ஏற்பட்ட மனக்கசப்புகள் நீங்கும். சுருங்கச் சொன்னால் அப்பா, அம்மாவின் கூடப் பிறந்தவங்க உங்களைப் புரிஞ்சுப்பாங்க.

மிதுனம்

பெற்ற மகன் அல்லது மகள் மூலம் மகிழ்ச்சியும் செலவுகளும் உண்டாகும். அவசரத் தேவைக்காக சகோதர சகோதரிகள் வாங்கிய கடனை அடைப்பீங்க.  உத்யோகம் சாதகமாக இருக்கும். எனவே வேற கம்பெனிக்கு ஷிப்ட் ஆவது பற்றி யோசிக்காதீங்க. அலுவலகத்தில் உங்களோட நீண்ட கால கோரிக்கைகள் நிறைவேறும். பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும்.  அதே நேரம் வேலைச்சுமையும் அதிகரிக்கும். வியாபாரம் விருத்தியாகும். கொடுக்கல், வாங்கல் சீராக இருக்கும். பிசினசில் ஈடுபட்டிருப்பவர்கள் புதிய ஏஜென்சிகள் எடுப்பீர்கள். அலுவலகத்திலும் வீட்டுச்சூழலிலும், பிசினசிலும் வேலையாட்கள்  ஒத்துழைப்பார்கள். ஸ்டூடன்ட்ஸ்க்குச் சீரான முன்னேற்றங்கள் ஏற்படும். மாமன் வகை உறவுகள் கை கொடுத்து உதவுவாங்க. உடன் பிறந்தவங்களும் சண்டை முடிஞ்சு வெள்ளைக் கொடி காட்டி, உதவிக்கு வருவாங்க

கடகம்

தன்னம்பிக்கை அதிகரிக்கும். திறமையுடன் எதையும் செய்து முடித்து வெற்றி பெறுவீங்க. சமூகத்தில் அந்தஸ்து உயரும். மனமகிழ்ச்சி உண்டாகும். மனதில் குழப்பம் நீங்கி தெளிவு ஏற்படும். உங்களது செயல்களுக்கு ஏற்பட்ட தடைகள் விலகும். உங்களது உடைமைகளை கவனமாக பார்த்துக்கொள்வது நல்லது. தொழில் பிஸினஸ் முன்னேற்றம் காரணப்படும். பிஸினஸ் விரிவாக்கம் செய்ய திட்டமிடுவீங்க. உத்தியோகத்தில் இருப்பவர்கள் சிறப்பாக செயல்பட்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தி மேல் அதிகாரிகளிடம் பாராட்டு பெறுவீங்க. மனதில் இருந்த கவலை நீங்கி தெளிவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். லேடீஸுக்கு…  கொடுத்த வாக்கை காப்பாற்ற எடுக்கும் முயற்சிகள் வெற்றியை தரும். ஸ்டூடன்ஸ்க்கு தேர்வில் வெற்றிபெற கூடுதல் நேரம் ஒதுக்கி பாடங்களை படிப்பது நன்மை தரும். . குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வெரி ஹாப்பி.

சிம்மம்

புத்தி சாதூர்யத்தினால் எதையும் சாதிக்கும் திறமை உண்டாகும். பணவரத்து அதிகரிக்கும். மதிப்பும், மரியாதையும் கூடும். உடல் ஆரோக்கியம் பெறும். எதிர்ப்புகள் விலகும். நோய் நீங்கி ஆரோக்கியம் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு பழைய பாக்கிகள் வசூலாகும். சமயோசிதமாக செயல்பட்டு புதிய ஆர்டர்களை கிடைக்கப்பெறுவீங்க. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு செயல்திறன் அதிகரிக்கும். குடும்ப சுகத்தில் திருப்தி உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே ஃபைட்டிங் முடிஞ்சு நெருக்கம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களுக்கு ஆடை அணிகலன்கள் மற்றும் தேவையான பொருட்கள் வாங்கித்தர வேண்டி இருக்கும். பிள்ளைகள் எதிர்காலம் பற்றி சிந்திப்பீங்க. லேடீஸுக்கு…  திறமையான செயல்களினால் மதிப்பும் மரியாதையும் கூடும். ஸ்டூடன்ஸ்க்கு கல்வி தொடர்பான போட்டிகள் நீங்கும். ஆசிரியர்கள் பெற்றோர்கள் ஆதரவாக இருப்பாங்க. குட் சப்போர்ட்.

கன்னி

எதிர்பாராத திருப்பங்களை சந்திக்க நேரலாம். பணவரத்து இருக்கும். மனதில் துணிச்சல் உண்டாகும். எதிர்ப்பை கண்டு அஞ்ச மாட்டீர்கள். கவர்மென்ட் தொடர்பான பணிகள் திருப்திகரமாக நடந்து முடியும். தொழில், பிஸினஸ் முன்னேற்ற பாதையில் செல்லும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கலாம். தொழில் பிஸினஸ் விரிவுபடுத்தும் ஆலோசனையில் ஈடுபடுவீங்க. உத்தியோகத்தில் இருப்பவர்கள் பதவி உயர்வு கிடைக்க பெறுவாங்க. சிலருக்கு பொறுப்புகள் கூடும். வேலை தேடுபவர்களுக்கு வேலை வாய்ப்பு வரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். குடும்ப உறுப்பினர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்துவீங்க. லேடீஸுக்கு…  இழுபறியாக இருந்த காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். எதிர்ப்பை கண்டு அஞ்சாமல் செயல்பட்டு வெற்றி காண்பீங்க. ஸ்டூடன்ஸ்க்கு பாடங்களை படிப்பதிலும் கூடுதல் மார்க் பெறுவதிலும் ஆர்வம் உண்டாகும். நைஸ் டு ஹியர்.

துலாம்

எதிலும் அவசரமும், முன்கோபத்தையும் தவிர்த்து சற்று நிதானமாக எதையும் செய்வது காரிய வெற்றிக்கு வழிவகுக்கும். வீண் ஆசைகள் விபரீத எண்ணங்கள் தோன்றலாம். உடல் ஆரோக்கியத்திலும் கவனம் தேவை. தொழில் பிஸினஸ் மேன்மை அடைய அவசரமாக எதையும் செய்வதை தவிர்த்து நிதானத்தை கடை பிடிப்பது நல்லது. எதிர்பார்த்த பணவரத்து  மற்றும் புதிய ஆர்டர்கள் கிடைக்க பெறலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அவசர முடிவுகள் எடுப்பதை தவிர்த்து மேல் அதிகாரிகளின் ஆலோசனையை கேட்டு அதன்படி செய்வது நல்லது.  குடும்பத்தில் திடீர் விருந்தினர் வருகை இருக்கும். லேடீஸுக்கு…  வீண் பிரச்சனைகள் தோன்றலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. ஸ்டூடன்ஸ்க்கு: கல்வியில் மேன்மை அடைய அவசரப்படாமல் நிதானமாக பாடங்களை படிப்பது நல்லது. பெரியோர் ஆலோசனை நன்மைதரும். ஸ்டூடன்ஸ்க்குக் கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உயர் கல்வி கற்று கொண்டிருப்பவர்கள் முன்னேற்றத்தை நோக்கிச் செல்வாங்க. குட் பிராக்ரஸ்

விருச்சிகம்

அடுத்தவர் விவகாரங்களில் தலையிடுவதை தவிர்ப்பது நன்மை தரும். உதவி செய்ய போய் மற்றவர்களால் குற்றஞ்சாட்டப்பட வேண்டி வரலாம். விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்துகிட்டு மன மகிழ்ச்சி அடைவீங்க. புத்தி சாதூரியம் அதிகரிக்கும். பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் திறமையாக செயல்பட்டு கூடுதல் லாபம் கிடைக்க பெறுவாங்க. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலைச்சல் உண்டாகலாம். சாமதர்த்தியமான பேச்சின் மூலம் அலுவலக பணிகளை முடித்து சாதகமான பலன் பெறுவீங்க. குடும்பத்தில் இருந்து வந்த குழப்பம் நீங்கும். லேடீஸுக்கு…  விருந்து நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு மன மகிழ்ச்சியடைவீங்க. ஸ்டூடன்ஸ்க்கு வீண் அலைச்சல் உண்டாகலாம். சாதூரியமான பேச்சின் மூலம் மற்றவர் மனதில் இடம் பிடிப்பீங்க. கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். சொந்தத் தொழில் செய்பவர்கள் முன்னேற்றமடைவீங்க. ஹாப்பி. ஹாப்பி.

தனுசு

வேலைகளில் அதிக கவனம் செலுத்தி விரைவாக செய்து முடிப்பீங்க. சுப காரிய வாய்ப்புகள் கைகூடி வரும். புதிதாக தொழில் ஆரம்பிக்க முயற்சி செய்து கொண்டிருப்பவர்கள் வெற்றி அடைவாங்க எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். சொந்தத் தொழில் செய்பவர்கள் முன்னேற்றத்தைக் காண்பாங்க. கூட்டுத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய வாய்ப்புகளையும் உத்தியோக உயர்வு, ஊதிய உயர்வு போன்ற நல்ல முன்னேற்றங் களைக் காண்பாங்க. சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான காரியங்களில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு வெற்றி கிடைக்கும். நல்ல வேலைக்குச் செல்வதற்கு வாய்ப்பு உள்ளது. பேங்க் பேலன்ஸ் திருப்தியாக இருக்கும். , புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவாங்க. வாகனப்போக்குவரத்தில் கவனம் அவசியம். சிறப்பானதொரு வாரமாக அமையும் கணவன் – மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். லவ் அண்ட் அஃபெக்ஷன்.

மகரம்

எல்லா விதத்திலும் நன்மை உண்டாகும். வீண் வாக்குவாதம் மற்றவர்களுடன் மனஸ்தாபங்கள் ஏற்பட்டாலும் அவை நீங்கி நற்பலன் உண்டாகும். தாயாரின் உடல் நிலையில் கவனம் தேவை. தொழில் பிஸினஸ் தொடர்பான காரியங்களில் மந்தமான நிலை காணப்பட்டாலும் எதிர்பார்த்தபடி நடந்து முடியும். பணவரத்து திருப்தி தரும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைக்க பெறுவீங்க. உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலை பார்க்கும் இடத்தில் சற்று வீண் வாக்குவாதங்களை தவிர்த்து அனுசரித்து செல்வது நன்மை தரும். குடும்பத்தில் நிம்மதி குறையும் வாய்ப்பு உண்டாகும். வாகனம் மூலம் செலவு ஏற்படலாம். லேடீஸுக்கு…  வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. எடுத்த காரியத்தை சரியாக செய்து முடித்து பாராட்டு பெறுவீங்க. ஸ்டூடன்ஸ்க்கு வீண் பேச்சுக்களை தவிர்த்து பாடங்களை கூர்ந்து படிப்பது வெற்றிக்கு உதவும். பணவரவு இருக்கும். குட் இன்கம்.

சந்திராஷ்டமம் : செப்டம்பர் 23 முதல் செப்டம்பர் 25 வரை

கும்பம்

திடீர் மனக் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். எந்த ஒரு வேலையை செய்தாலும் வீண் அலைச்சல் பொருள் நஷ்டம் உண்டாகலாம். தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் விழிப்புடன் செயல்படுவது  நன்மை தரும். எதை பற்றியும் கவலைப்படாமல் உங்களது செயல்களை செய்வதுடன் தகுந்த ஆலோசனையும் பெறுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சல் மற்றும் கூடுதல் செலவை சந்திக்க நேரிடும். பணிபுரியும் இடத்தில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. குடும்பத்தில் வீண் மனஸ்தாபம் உண்டாகலாம். கவனம் தேவை. கணவன், மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வதும் வாக்குவாதங்களை தவிர்ப்பதும் நல்லது. பிள்ளைகளை அனுசரித்து செல்வதும் நல்லது. லேடீஸுக்கு…  எதிர்பாராத திடீர் செலவு உண்டாகலாம். ஸ்டூடன்ஸ்க்கு கல்வி தொடர்பான செலவு ஏற்படலாம். பாடங்களை கவனமாக படிப்பது நல்லது. கேர்ஃபுல்.

சந்திராஷ்டமம் : செப்டம்பர் 25 முதல் செப்டம்பர் 27 வரை

மீனம்

காரியங்களை கவனத்தோடு செய்து வெற்றி காண முற்படுவீங்க. உத்தியோகத்தில் சிலர், சக ஊழியர்களிடம் மனவேறுபாடுகளை அடைய நேரிடும். தொழிலில், அதிகமான வேலைப்பளு உண்டாகும்.  குறித்த நேரத்தில் பணியை முடிக்க முடியாது. குடும்பத்தினரின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் சிரமங்களைச் சந்திப்பீங்க. உத்தியோகத்தில் செல்வாக்கு அதிகமுள்ள பொறுப்புகள் வந்து சேரும். தொழில் செய்பவர்கள் உதவியாளரின் துணையுடன், கடினமான வேலை ஒன்றை செய்வீங்க. குடும்பத்தில் மங்கல காரியங்கள் நடைபெற முன்னேற்பாடுகளைத் தொடங்குவீங்க. பிரியமானவர்களுடன் பொழுதை கழிப்பீங்க. நிதி விவகாரங்களில் கவனம் அவசியம். பெற்றோரின் கனவுகளை மாணவர்கள் நனவாக்குவீங்க. செயல்களில் நேர்த்தி நிறைந்திருக்கும். பிரியமானவர்களுடன் பொழுதை கழிப்பீங்க. மகிழ்ச்சியான வாரம். ஹாப்பி வீக்.

சந்திராஷ்டமம் : செப்டம்பர் 27 முதல் செப்டம்பர் 29 வரை