வரும் 27ல் காவல் அருங்காட்சியகத்தை பார்க்க பொதுமக்களுக்கு அனுமதி

Must read

சென்னை:
ரும் 27ல் காவல் அருங்காட்சியகத்தை பார்க்க பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, எழும்பூரில் உள்ள தமிழ்நாடு காவல் அருங்காட்சியகத்தை  பார்வையிட வரும் அரசுக் கல்லூரிகள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு இலவச அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. அருங்காட்சியகம் திறந்து வைக்கப்பட்ட ஓர் ஆண்டில் இதுவரை மொத்தம் 30 ஆயிரத்து 285 பேர் பார்வையிட்டுள்ளனர்.

இந்நிலையில், இந்த அருங்காட்சியகம் திறக்கப்பட்டு ஓராண்டு நிறைவு பெற்றதை அடுத்து வரும் 28-ஆம் தேதி பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ-மாணவிகள் பார்வையிட இலவச அனுமதி அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

More articles

Latest article