வார ராசிபலன்: 22-10-2021 முதல் 28-10-2021 வரை! வேதா கோபாலன்

Must read

மேஷம்

மகன் .. மகள் பற்றி பயம் வேண்டாம். கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு இருந்ததைவிட அவங்க எவ்ளோ சாஃப்ட் ஆயிட்டாங்கன்னு நினைச்சுப் பாருங்க. குழந்தைகள் வயிற்றில் பாதாம்கீர் வார்ப்பாங்க. செலவைக் கட்டுப்படுத்துங்க.. முக்கியமான நல்ல சுப செலவுகள் வந்துக்கிட்டே இருக்கு கியூவில். அதுக்கு ரெடியாகற வழியைப் பாருங்க. நிலம் வீடு ஏதாவது கட்டாயம் வாங்குவீங்க. குழந்தைங்க திடீர்னு புத்திசாலித்தனமா ஆயிடுவாங்க. தர்ம சிந்தனை அதிகரிக்கும். சூழ்ந்திருப்பதுபோல் சந்தோஷமும் லாபமும் ஒரு பக்கம் நிலவும். பிரச்சினையும் டென்ஷன்களும் இன்னொரு பக்கம் இருக்கும், எதையும் சமாளிக்கும்  மனோதிடம் வரும். 30 வயசுக்கு  மேற்பட்டவங்கன்னா உழைப்பால் நன்மையும் நிறைய லாபமும் வரும். மம்மி உங்களுக்குச் சிறந்த வழிகாட்டி. அதை தயவு செய்து புரிஞ்சுக்குங்களேன். மகன் மகள் டென்ஷன் செய்கிறார்கள் என்று நீங்கள் டென்ஷன் ஆவதில் பயனே இல்லை. மென்மையா டீல் செய்யுங்க.

ரிஷபம்

சட்டென்று யாரையும் எதிர்த்துப் பேசாமல் இருந்தால் நல்லது. வெற்றி வெற்றி வெற்றி. தொழிலும் சிறக்கும் பணமும் பெருகும். பேச்சில் கவர்ச்சி கூடும். குடும்பத்தில் உங்களைப் புரிஞ்சுக்காம இருந்தவங்கள்ளால் இப்ப வந்து வணங்கி வாழ்த்திக் கட்டிப்புடிச்சு லைக் செய்வாங்க. குழந்தைங்க கிட்ட கொஞ்சம் அனுசரிக்க வேண்டியிருக்கும். சரியாயிடுவாங்க. வெயிட் பண்ணுங்க. எதை எடுத்தாலும் ஸ்லோவாப் போகுதுன்னு மூக்கால் அழாதீங்க. தாமதமானாலும் மறுக்கப்படாது. உடன் வேலை பார்ப்பவர்கள்.. உடன் படிப்பவர்களிடம் பேச்சில் கவனம்னா கவனம் அவ்ளோ கவனம் செலுத்தணும். உங்க பணிவாலும் செயல் திறமைகளாலும்  மேலதிகாரியைக் கவர்ந்திழுப்பீங்க.. அனேகமா அவங்க பெண்.. சகோதர சகோதரிங்க உங்களுக்கு நன்மை செய்வாங்க. மம்மி வெளிநாடு செல்வாங்க. அல்லது வெளிநாடு சம்பந்தமான இன்கம் வரும் அவங்களுக்கு.

மிதுனம்

டாடிக்கு வெளிநாட்டு லாபங்களும் வருமானமும் வரும். அருமை தெரிந்து அரவணைக்கும் நபரால் மிகுந்த நன்மை உண்டு. சின்ன ஆரோக்ப் பிரச்னைக்கும் மிகுந்த முக்கியத்துவம் கொடுங்கள். பாராட்டு குவியும். தொழிலில் இத்தனை பெரிய முன்னேற்றம் நீங்க பார்த்து ரொம்ப நாளாகுது. தொழில் செழிக்கும். குடும்பத்தில் சுபமான கொண்டாட்டம் உங்களை ஜாலியாக்கும். எதில்தான் குறைச்சல்? என்ஜாய். கல்யாண மண்டம் சமையல்காரர் டெய்லர் என்று சந்தோஷத்துடன் அலையவே நேரம் சரியா இருக்கும். ஆமாங்க ஆமாம், வீட்டில் பல காலமாய்க் காத்திருந்த சுப நிகழ்ச்சிகள் நடக்கும். குறிப்பாய்க் கல்யாணத்திற்குக் காத்திருந்த குடும்ப நபருக்குக் கல்யாணம் ஆகும். அது உங்களுக்கேகூட இருக்கலாம். வெளிநாட்டில் உள்ள நண்பர்களால் நன்மை ஏற்படும்.

கடகம்

வெளிநாட்டுக்குப் போக ஆசைப்பட்டீங்களே.  சீக்கிரம் பேக் செய்யுங்க. பாஸ்போர்ட் ரெடியாத்தான் இருக்கும்.. விசாவுக்கு அப்ளை செய்விங்க. உடனே அதுவும் கிடைக்கும். கிளம்புங்க.. கிளம்புங்க. பச்சைப் பசேல்னு சூழல் இருக்கும் ஏரியாவில் அழகான..ரொம்ப ரொம்ப அழகான வீடு வாங்குவீங்க. . அல்லது கார் வாங்கப் போறீங்க. நன்மைகளும் லாபங்களும் சுப நிகழ்ச்சிகளும் சந்தோஷமும்னு கலந்து ஒரு மிக்ஸி மாதிரி அலைக்கழிக்கும். மம்மிக்கு அவங்க பொறந்த வீட்டிலிருந்து சொத்து அல்லது அதில் பங்கு வரும். கல்யாணத்துக்கு அவசரப்படாதீங்க. இன்னும் கொஞ்சம் வெயிட் பண்ணிடுங்க. அம்மாவுக்குச் சில நன்மைகள் நடக்கும். அதற்காக அவங்க பல காலம் காத்திருந்தாங்க. எனவே அவங்க மகம் மலரும். அதைப் பார்த்து உங்க மனசு மலரும்.

சிம்மம்

கணவருக்கு/ மனைவிக்கு நல்ல செய்திகள் மெசேஜிலும்  மெயிலிலும் வரும். அதற்காக அவங்க பல காலம் காத்திருந்தாங்க். அதே சமயம்  கணவருடன்/ மனைவியுடன்  இஷ்டத்துக்கு வாக்குவாதம் செய்ய வேண்டாம். அப்புறம் “சே இப்டி பேசிட்டேனே” என்று உங்களை நீங்களே குற்றம் சொல்லவும் வேண்டாம். உங்க குடும்பத்தில் நிச்சயம் தோரணம் பாயசம் மாலை மேளம் எல்லாம்  உண்டு. டாடிக்கு சின்ன பிரச்சினைகள் இருக்கும். ஆனா அது நீங்க கற்பனை செய்த அளவுக்கு இல்லைங்க. சிம்ப்பிளாய்ச் சரியாகும். மனசில் நல்ல எண்ணங்களும் இரக்க சுபாவமும் மேம்பட்டு அவை உங்க செயலிலும் பிரதிபலிக்கும். எதிர்பார்த்த இடங்களிலிருந்து மட்டுமின்றி எதிர்பாராத திக்குகளிலிருந்தும் பண வரவு/ உதவி கிடைக்கும்.

கன்னி

வாகனம் வாங்குவீங்க. மாணவர்கள் படிப்பில் ஜமாய்ப்பீங்க. உங்களுக்கு / குடும்பத்தில் யாருக்கேனும் திருமணம் நிச்சயமாகும்.  கல்யாணம் ஆகுமா என்று ஏங்கிக் காத்திருந்தீங்க. இதோ… ரெடியா.. கடைகடையா ஏறி இறங்கி சேலையும் நகையும் வாங்கவே நேரம் சரியாப் போகும். உங்கள் பேச்சில் இருக்கும் இனிமையும் மென்மையும் உண்மையும் எல்லா இடங்களிலும் பாராட்டு வாங்கித்தரும். நீங்க ஸ்டூடன்ட்டா? வாவ். ஜெயிச்சுட்டீங்க. மாணவர்களே… உங்களுக்குப் படிப்பில் அக்கறை பிளஸ்ஸாகும். அரசாங்கத்திலிருந்து நன்மை கிடைக்கும். பொறுமைக்குப் பலன் உண்டு. கணவரோட/ மனைவியோட கொஞ்சம் அனுசரிச்சுப் போங்க. மற்றவர்களிடம் இனிமையாகப் பேசும் நீங்கள் இவங்ககிட்ட மட்டும் ஏன் இப்படி? வார்த்தைகளைப் பயன்படுத்தும்போது மனசுக்குள் எடிட் செய்துக்குங்க. இன்னும் சிறிது  நாட்களுக்கு மிக மிக ஜாக்கிரதையாப் பேசணும்.

துலாம்

அலுவலகவாசிகள் பிசியாயிடுவீங்க. நண்பர்கள் நல்ல அட்வைஸர்களா இருப்பாங்க.. திடீர்னு எதிர்பார்க்காத இடங்களிலிருந்து இன்கம் ..லாபம் வரும். வேலை பார்க்கும் இடத்தில் உங்க மதிப்பு ‘கும்’ முன்னு உயரும்.  குடும்பத்தினர் கிளம்பி வெளிநாடு செல்வார்கள். எனவே அடிக்கடி ஏர்போர்ட் போய் டாட்டா காண்பிப்பீங்க. அவங்களால் நன்மையும் லாபமும் நிச்சயம் வரும். பேச்சில் ஆத்திர மற்றும் கோப ஃப்ளேவர் அடிக்காமல் பாதுகாத்தால் நல்லது. இல்லாட்டி பிற்காலத்தில் உங்களுக்கே பாதிப்பு வரும். இவ்ளோ செலவு செய்வாங்களோ? அதுவும் ஆடை ஆபரணங்களுக்காக (அதை நான் குற்றம் என்றோ தவறு என்றோ தப்பு என்றோ சொல்ல வரவில்லை.)இப்போதைக்கு  வேண்டாம். பிறகு செய்ங்க என்கிறேன். ஏன் தெரியுமா? இப்போது வேறு சில முக்கியமான நல்ல செலவுகள் காத்துக்கிட்டிருக்கு. அதனால்தான்.

சந்திராஷ்டமம் : அக்டோபர் 22 முதல் அக்டோபர் 25 வரை

விருச்சிகம்

உங்க டாடிக்கு நன்மை வந்தால் அது உங்களால்தான். குழந்தைங்களைப் பற்றி எத்தனைக்கெத்தனை பயந்து நடுங்கினீங்களோ.. அவ்வளவுக்கவ்வளவு பெருமிதப்படுத்துவாங்க. நீங்க சினிமாத்துறையா? விளம்பரத் துறையா? சின்னத்திரையா? அப்படியானால் மேலும் மேலும் ஒப்ந்தங்கள் கையெழுத்தாகி சிரத்தையாய் உழைத்து முன்னேறிக் கொழிக்கப் போறீங்க பாருங்களேன். கருணையும் இரக்கமும் கனிவும் உங்களை உயர்த்தி மத்தவங்க கண்ணுக்கு பிரமிப்பு ஏற்படுத்தும். உடம்பு. உங்களின் புத்திசாலித்தனமான நடவடிக்கைகள் மூலம் அலுவலகத்திலும், குடும்பத்திலும் ஆபத்துகள் தவிர்க்கப்படும். கணவருக்கு/ மனைவிக்கு வர வேண்டிய நன்மைகள் சற்று மெதுவாக வரும். ஆனால் கட்டாயம் வரும். கணவருடன் /மனைவியுடன் இருந்த மனத்தாபம் தீரும்.

சந்திராஷ்டமம் : அக்டோபர் 25 முதல் அக்டோபர் 27 வரை

தனுசு

பயங்கர இக்கட்டான நிலையையெல்லாம் தாண்டி வந்தாச்சு. வெயிட் வெயிட். நல்ல நேரம் கூப்பிட்ட தொலைவில் இருக்கு. கவலை வேண்டாம். குழந்தைங்க  மேடை மேல ஏறி பெருமிதமாய்ச் சுற்றிலும் பார்த்துவிட்டுப் பரிசுகள் வாங்குவாங்க. கணவரோட / மனைவியோட எக்காரணம் கொண்டும் சண்டை வேணாம். உங்க நியாயம் எடுபடாது. உங்க பக்கம் தப்பும் இருக்கும். மேலும் மேலும் நல்ல செய்திகள் காத்துக்கிட்டிருக்கு. எல்லாமே ஆர்ட் ஃபிலிம் மாதிரிக் கொஞ்சம் மெதுவாய்த்தான் நகரும். ஒண்ணும் இல்லாத விஷயங்களுக்கு இவ்ளோவா டென்ஷன் ஆவாங்க? கவரும் தன்மை அதிகரிக்கும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை உண்டு. அலுவலகத்தில் நீங்க உழைச்ச உழைப்புக்குக் கிடைக்க வேண்டிய ஊதியம் தவிர அதிகப்படியா வரும். தவறு செய்வோரைக் கண்டிக்கும்போது கடுமை காட்ட வேண்டாம். மென்மையாக அறிவுறுத்துங்கள்.

சந்திராஷ்டமம் : அக்டோபர் 27 முதல் அக்டோபர் 30 வரை

மகரம்

ஆரோக்யத்தை அலட்சியம் செய்யாம டாக்டரிடம்  போங்க. . சகோதரர்களோட ஃபைட் பண்ணாதீங்க. தன் ஆரோக்யத்தை அம்மாதான் அலட்சியம் செய்கிறார்னா நீங்களுமா அதை அனுமதிப்பீங்க? வெளிநாட்டிலிருந்து வர வேண்டிய தொகையெல்லாம் டாண் டாண் என்று வரப்போவதாக உறுதி கிடைக்கும். கவர்மென்ட் உத்யோகம் வேணும்னு ரொம்ப காலமாய்க் கனவு கண்டீங்களே. இப்ப கிடைச்சாச்சு பார்த்தீங்களா?  வெளிநாட்டு வருமானமும் லாபமும் உங்க விலாசத்தை விசாரிச்சுகிட்டு வரும். கோபம் வந்தால் அதைத் தூக்கி அரபிக்கடலில் போடுங்க. விதம் விதமான செலவுங்க வரும். சமாளிப்பீங்க. ஆனாலும் அலுத்துக்கொள்வதைத் தவிர்க்க முடியாது. அபபாவுக்கு உங்களாலும் உங்களுக்கு அவராலும் நன்மைகள் உறுதி. பல நாட்கள் சந்திக்காத ஒருவரைச் சந்திப்பீர்கள். அந்தச் சந்திப்பு மகிழ்ச்சியையும் நன்மையையும் தரும்.

கும்பம்

லவ் என்னும் புதிய கிணற்றில் குதிப்பீங்க. சின்ன சின்ன ஆரோக்யப் பிரச்சினைகள்  டென்ஷன் தரும். நீங்க டென்ஷன் ஆக வேண்டாம். தன்னம்பிக்கை கூடும். கணவருக்கு/ மனைவிக்கு  நிறைய முன்னேற்றம் உண்டு.  மாணவர்கள் நினைச்சே பார்க்க முடியாத மார்க்ஸ் வாங்குவீங்க. வெரி குட். கங்கிராட்ஸ். குழந்தைகள் பற்றிக் கவலைப்படுவதை கொஞ்சம் தள்ளிப்போடுங்க. நல்ல செய்தி உண்டு. திருமணத்துக்கு நாள் குறிச்சிருப்பாங்க. திடீர்னு ஓவர் நைட் புகழ் வந்து சேரும். லோன் கேட்டிருந்தீங்களா வங்கியிடம்? கொடுப்பாங்க. டாடிக்குப் பெரிய அளவில் நன்மை காத்திருக்கு. வெளிநாட்டு வேலை தேடிக்கிட்டிருந்தீங்களே..கிடைச்சாச்சு. அப்பாவுக்கு  இத்தனை நாளாய்க் காத்திருந்த நன்மைகள் கிடைக்கும். எதிலும் நிதானப் போக்கு இருக்கிறதே என்ற சலிப்பு வேண்டாம். நல்ல முடிவு உண்டு.

மீனம்

குடும்பத்தில் ஒரு நல்ல விஷயமும் நடக்கமாட்டேங்குதே என்று சலித்துப் போயிருந்தீங்க. இனி வரிசையாய்ச் சுப நிகழ்ச்சிகள்தான். தொட்டதெல்லாம் துலங்கும். வாகனம் வாங்கப் போறீங்க. நல்லவங்களை நம்புங்க.. கெட்டவங்களை சந்தேகியுங்க. நீங்க அப்டியே ஆப்போசிட்டா இருக்கீங்களே. நீங்க ஹலோன்னு சொன்னாலும் “கிண்டலா” ன்னுவாங்க. எனவே கவனமாய்ப் பேசுங்க. எதிர்பாலின நட்பு சந்தோஷம் தரும். நன்மையும் தரும். ஆரோக்யத்தைக் கண் மாதிரி கவனிச்சுக்குங்க. திடீரென்று தோன்றி சின்சியரா உழைப்பதன் பலன் உங்களை வாழ்வில் உயரச் செய்வது உறுதி. எப்பவும் இதே மாதிரி உழையுங்களேன். நீங்கள் எல்லோரையும் டக் டக்கென்று அட்ராக்ட் செய்வீங்க. பேச்சில் மிகுந்த புத்திசாலித்தனத்தைத் தூவி அனைவரையும் புருவம் உயர்த்தச் செய்வீங்க.

 

More articles

Latest article