மேஷம்

தொழில் வியாபாரம் நல்லா நடக்கும். ஆர்டர்கள் அதிகமாக் கிடைக்கும். பழைய பாக்கிகள் வசூல் ஆகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமாக பணிகளை மேற்கொள்வது நல்லது. பதவி உயர்வு, நிலுவையில் உள்ள பணம் ஆகியவை வந்து சேரும். குடும்பத்துல இருந்து வந்த குழப்பங்கள் அகலும். கணவன் மனைவிக்கிடையே நீடித்து வந்த கருத்து வேற்றுமை நீங்கும். வீடு மாற்றம், இடமாற்றம் போன்றவை ஏற்படும் சான்ஸ் உள்ளது. பிரதர்ஸ்/ சிஸ்டர்ஸ் கிட்ட தேவையில்லாத விவாதங்களை செய்ய வேண்டாம். ஹஸ்பெண்ட்/ ஒய்ஃப் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கப்பா/ மா. வீட்டில் சுபநிகழ்ச்சிகளுக்கு திட்டமிடுவீங்க. எதிர்காலம் பற்றிய பயம் தோன்றும். பள்ளி கல்லுாரி நண்பர்களால் சந்தோஷம் ஏற்படும். காதல் சம்பந்தமான மகிழ்ச்சியான நிகழ்வுகள் மனதிற்கு இதமளிக்கும்.

சந்திராஷ்டமம் : டிசம்பர் 20 முதல் டிசம்பர் 23 வரை

ரிஷபம்

சக மனுஷங்களோட இருந்த மனவருத்தம் நீங்கும். ஸ்டூடன்ட்ஸ் பாடங்கள் படிப்பதில் இருந்த தடைகள் நீங்கி ஆர்வமாக படிப்பீங்க. இந்த வாரம் பணத்தேவை அதிகரிக்கும். விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வாய்க்கு ருசியாக உணவு உண்பீங்க. காரிய தாமதம், உடல் சோர்வு, வீண்பகை ஆகியவை நீங்கும். உங்களை கண்டும் ஒங்களோட வளர்ச்சியைக் கண்டும் அடுத்தவர் பொறாமை படக்கூடும். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களுக்காக அலைய வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளை அனுசரித்து செல்வதன் மூலம் நன்மை கிடைக்க பெறுவாங்க. குடும்பத்துல இருப்பவர்களின் செயல்களால் டென்ஷன் உண்டாகலாம். கோபமான பேச்சை விடுத்து அமைதியாக எதையும் எடுத்து சொல்வது நல்லது. பிள்ளைங்க நலனுக்காக செலவு செய்ய வேண்டி இருக்கும்.

மிதுனம்

திடீர் செலவு சந்தோஷம் தரும். கலைத்துறையினருக்கு வெளியூர் பயணம் அதன் மூலம் அலைச்சல் உண்டாகலாம். அரசியல்வாதிகள் மற்றவர்களுக்கு உதவிகள் செய்யும்போது ஆலோசித்து செய்வது நல்லது. மாணவர்களுக்கு பாடங்களை மிகவும் கவனமாக படிப்பது கூடுதல் மதிப்பெண் பெற உதவும். ஃப்ரெண்ட்ஸ்ஸுடன் அனுசரித்து செல்வது நல்லது. ஃபாரின் இன்கம் வரும். குடும்பத்தினர், நண்பர்கள் மூலம் நன்மைகள் சேரும். கணவர், மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். அதிகாரம் உள்ள பதவியில் அமர்வீங்க. உறவினர்களுக்கு உதவி செய்வீங்க. உதவிகளும் நன்மைகளும் செய்து பாராட்டு பெறுவீங்க. திட்டமிட்ட பணிகளைச் சிறப்பாக செய்வீங்க. குடும்பத்துல யாருக்கேனும் மருத்துவச் செலவு ஏற்படலாம். படபடப்பு, பரபரப்பு ரெண்டையும் கொஞ்சம் மூட்டை கட்டி லாஃப்டில்  போட்டுவிட்டு கொயட்டா இருங்க.

கடகம்

மனதில் எதிர்காலம் பற்றிய சிந்தனை உண்டாகும். மாணவர்களுக்கு சக மாணவர்கள், நண்பர்களிடம் அதிகம் பேசி பழகுவதை தவிர்ப்பது நல்லது. பாடங்களில் கூடுதல் கவனத்துடன் படிப்பது நன்மை தரும். புதிய வேலைக்கு முயற்சி செய்கிறவர்களுக்கு வேலை கிடைக்கும். குடும்பத்துல மகிழ்ச்சியான நிலை காணப்படும். யாரிடமும் எதிர்த்து பேசி விரோதத்தை வளர்த்துக் கொள்ளாமல் இருப்பது நன்மை தரும். ஆன்மிகச் சிந்தனை மேலோங்கும். பிரயாணங்களால் செலவு ஏற்படலாம். லாண்ட்/ ஃப்ளாட் சம்பந்தபட்ட இனங்களில் புதிய முதலீடுகள் செய்ய ஏற்ற வாரம். பங்குச் சந்தையில் நிதானமாக ஈடுபடுங்கள். குழந்தைங்க வழியில் சுபச்செலவுகள் உண்டு. பணியாளர்களுக்கு அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். விருப்பங்கள் நிறைவேறும். தொழில்செய்பவர்கள், போதியவாய்ப்பைப்பெறுவீங்க.

சிம்மம்

புத்தி சாதூரியத்தால் எதிலும் வெற்றி பெறுவீங்க. மற்றவர்களின் பாராட்டும் கிடைக்கும். மற்றவர்களின் கட்டாயத்திற்காக எந்த காரியத்தையும் செய்ய வேண்டாம். எந்த இடத்தில் பேசும் போதும் கவனமாக பேசுவது நல்லது. வாக்குறுதிகளை கொடுப்பதை தவிர்ப்பது நன்மை தரும். விருப்பத்திற்கு மாறாக காரியங்கள் நடக்கலாம். மனம் தளராமல் இருப்பது நல்லது. நியாயமான ஆசைகள் தோன்றலாம். அவை நிறைவேறும். வெற்றிகள் அதிகரிக்கும் வாரம். பணிச்சுமை சற்று அதிகமாக இருந்தாலும் மேலதிகாரிகளிடம் நல்ல பெயரை பெற்றுக்கொள்வீங்க வாகன வகையில் ஆதாயம் உண்டாகும். கணவன் மனைவி ஒற்றுமை மேம்படும். பதவி உயர்வு அல்லது இடமாற்றம் போன்றவை ஏற்படும். தொழிலில் இருந்த இக்கட்டான சூழ்நிலைகள் விலகும். புதிய தொழில் தொடங்குவதற்கான பேச்சை அடுத்த வாரத்துக்குத்‘  தள்ளிப்போடலாம். அலுவலகப் பணிகளில் இயல்பான நிலை தொடரும்.  பட் யார் கிட்டயும் சவால் அது இதுன்னு விட்றாதீங்கப்பா.

கன்னி

இந்த வாரம் அறிவு திறமை வெளிப்படும். ஒங்களோட வார்த்தைக்கு மதிப்பு உண்டாகும். அடுத்தவர்களின் குற்றச்சாட்டுக்கு ஆளாக நேரிடலாம் கவனம் தேவை. அதிகமாக உழைக்க வேண்டி இருக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் இருக்கும். வாடிக்கையாளர்களிடம் சாமர்த்தியமாக பேசுவதன் மூலம் வியாபாரம் வளர்ச்சி பெறும். அடுத்தவர்கள் கூறும் ஆலோசனைகளை ஏற்கும் போது கவனம் தேவை. அவற்றை ஆராய்ந்து பார்த்து செய்வது நல்லது. நீண்ட நாளாக விற்க முடியாமல் இருந்த சொத்துகளை விற்பதற்கு வாய்ப்பு உள்ளது. வாகன மாற்றும் சிந்தனை ஏற்படும். புதிய வாகனம் வாங்குவதற்கான முயற்சிகளைச் சற்று தாமதப்படுத்தலாம். முயற்சிக்கு தேவையான உதவிகள் கிடைக்கும். மனம் பரபரப்பாக இருக்கும் தேவையற்ற எண்ணங்கள் மனதில் வந்து போகாமல் காத்துக்கொள்ளுங்க. சின்னப் பயணங்களால ஹாப்பி ஆவீங்க.

துலாம்

அடுத்தவங்க பேசுவதை காதில் வாங்காமல் தவிர்ப்பது நல்லது. நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த பிரச்சினைகள் குறையும். வீடு, வாகனங்கள் புதுப்பிக்க அல்லது புதிதாக வாங்கும் முயற்சியில் ஈடுபடுவீங்க. அதில் சாதகமான பலன் கிடைக்கும். மனக்குழப்பம் நீங்கி தெளிவான சிந்தனை மேலோங்கும். பயணங்கள் வெற்றியை தரும். எதிர்கால திட்டங்கள் தீட்டுவீங்க. முயற்சிகள் அனைத்தும் சாதகமாக இருக்கும். வாழ்வில் வளர்ச்சி அமோகமாக இருக்கும். எதிர்பார்த்த வங்கிக் கடன் கிடைக்கும். தொழில் தொடர்பான முயற்சிகள் சற்று தாமதமாகும். வியாபார பேச்சுவார்த்தைகள் சாதகமாக இருக்கும். பணி தொடர்பான நல்ல தகவல் கிடைக்கும். நன்மைகள் அதிகமாக நடைபெறும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வெளிநாட்டுக் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். மம்மிக்கு இருந்துக்கிட்டிருந்த பிராப்ளம்ஸ் தீர்ந்து நிம்மதியாவாங்க.

விருச்சிகம்

கணவன் மனைவிக்கிடையே இருந்த பிரிவு நீங்கி ஒன்று சேர்வாங்க. பெண்களுக்கு எந்த செயலையும் தைரியமாக செய்து முடிப்பீங்க. வீண் ஆசைகள் மனதில் தோன்றாமல் பார்த்துக்குங்க. காரியங்களில் திடீர் தடை ஏற்பட்டாலும் அவை உடனுக்குடன் நீங்கும். திட்டமிட்டு செய்வதன்மூலம் சாதகமான பலன் கிடைக்கும். ஸ்டூடன்ட்ஸ் கல்வியில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் கஷ்டமான பாடங்களையும் மனம் துவளாமல் படிப்பீங்க.  திருமணப் பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடியும். கலைஞர்களுக்கு உயர்வுகள் ஏற்படும். இளைஞர்கள் வாழ்வில் வசந்தம் காண்பீங்க. வயிற்று ஆரோக்யத்தில் கவனம் தேவை. ஒரு சிலர் சிறிய அளவிலான வியாபாரம் தொடங்குவது பற்றிய முயற்சியில் ஈடுபடுவீங்க. பணியாளர்கள் முயற்சியை அதிகரித்துப் பேச்சைக்குறையுங்க.  திருமணமாகாத பெண்களுக்கு இப்போது திருமணம் நடக்கும்.

தனுசு

இந்த வாரம் முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். துணிச்சலுடன் செயல்பட்டு எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீங்க. பணவரத்து இருக்கும். இடமாற்றம், வெளியூர் பயணங்கள், அலைச்சல் ஆகியவை இருக்கும். தொழில் வியாபாரம் முன்னேற்ற பாதையில் செல்லும். அரசு தொடர்பான காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கட்டளை இடுகின்ற பதவி கிடைக்கும். வேலையில் இருக்கும் பெண்கள் பதவி உயர்வு ஊதிய உயர்வு உள்ளிட்ட அவை  கிடைக்கும்.விளையாட்டு போன்ற பொழுதுபோக்கில் ஈடுபடுவீங்க.  சிலருக்கு சுயமாக தொழில் தொடங்கும் சிந்தனை உருவாகும். இளைஞர்கள் வெளிநாட்டு முயற்சிகளில் ஈடுபட்டால் எளிதான வெற்றியைக் காணலாம்.பணியில் நன்மை தரும் சிறு மாற்றம் ஏற்படும்.  பணியாளர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

மகரம்

உறவினர்களிடம் நிதானமாக பேசுவது நல்லது. பிள்ளைகளை அனுசரித்து செல்வது நன்மை தரும். பெண்கள் எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. கலைதுத்துறையினருக்கு நீங்க விரும்பியபடி எதையும் செய்ய முடியும். தொழிலில் இருந்த போட்டி நீங்கும். அரசியல்வாதிகளுக்கு உங்களுடன் இருப்பவர்கள் உங்களுடன் அனுசரித்து செல்வாங்க. விசேஷ நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள நேரிடும். நெறைய செலவுங்க வந்தாலும் நல்ல செலவாவே இருக்குமுங்க. பெண்கள் ஆரோக்யத்தில் அலட்சியமாக இருக்கக்கூடாது. பயணங்கள் ஏற்படும். நண்பர்களின் சிரமம் காரணமாக செலவுகளும் ஏற்படும். தாமதமாகிக் கொண்டிருந்த அலுவலக வேலையைச் செய்து முடிப்பீங்க. தொழில் தொடர்பான சந்திப்புகளில் மனமகிழ்ச்சி ஏற்படும். ஆடம்பரச் செலவுகள் அதிகமாக இருக்கும். கூடுதலான பணவரவு இருக்கும்.தேவையான உதவிகள் கிடைக்கும்.

கும்பம்

கடன் தொடர்பான பிரச்சனை ஒன்று முடிவுக்கு வரும். குடும்பத்துல குதூகலம் அதிகரிக்கும். மகிழ்ச்சிகரமான சம்பவங்கள் நடக்கும். புதிய பொருட்கள் வாங்குவீங்க. எதிர்பார்த்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். எடுத்துக்கொண்ட வேலைகளைப் பொறுமையான முயற்சி செய்வதன்மூலம் வெற்றிகரமாக செய்து முடிப்பீங்க. பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். எதிர்பார்த்துக் கொண்டிருந்த வியாபார ஒப்பந்தம் கிடைக்கும்போது அந்த வாய்ப்பைச் சரயாகப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். திருமணப் பேச்சுவார்த்தை சுமுகமாக முடியும். திருமணத் தேதி முடிவு செய்ய வாய்ப்பு உள்ளது.  வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் வாரத்தின் பிற்பகுதியில் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும். சிலருக்கு புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்பு உண்டாகும்.  குடும்பப் பெரியவர்களும் நண்பர்களும் உதவிகரமாக இருப்பாங்க. குடும்பத்தை நிர்வகிக்கும் திறன் கூடும்.

சந்திராஷ்டமம் : டிசம்பர் 16 முதல் டிசம்பர் 18 வரை

மீனம்

பெண்களுக்கு உறவினர்கள் மத்தியில் மதிப்பு மரியாதை கூடும்.  கணவரின் அன்பும் அவர் வழி உறவினர்களின் ஆதரவும் கிடைக்கும்.  பணியாளர்களுக்கு நன்மை ஏற்படும். சிலருக்குப் புண்ணிய தலங்களுக்குச் செல்லும் வாய்ப்பு உண்டாகும். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்களுக்கு சில நன்மைகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். நண்பர்களின் குடும்பத்தினருடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடும்.   தந்தையின் உடல் ஆரோக்கியம் சரியாகிவிடும். தாய்வழி உறவினர்களிடம் அனுசரனையாக நடந்துகொள்வது நன்மை தரும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படும். குழந்தைகளால் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நிகழும். நண்பர்களும் அனுகூலமாக இருப்பாங்க. சிறு முயற்சிகளுக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மறைமுகப் பிரச்னைகளைச் சமாளிக்கவேண்டி இருக்கும். வாரத்தின் பிற்பகுதியில் கொடுக்கல் – வாங்கல் விஷயத்தில் எச்சரிக்கை அவசியம்.

சந்திராஷ்டமம் : டிசம்பர் 18 முதல் டிசம்பர் 20 வரை