மேஷம்

தொழில் போட்டிகளை சாமர்த்தியமாக சமாளிப்பீங்க. வாரக் கடைசியில சில சிக்கல்களை சாமர்த்தியமா ஃபேஸ் பண்ணி ஊதித் தள்ளிடுவீங்க. அதை மனதில் கொண்டு எதையும் தைரியமா செய்ங்க. உங்க முயற்சிங்க மிகச்சிறந்த நன்மைகளை கொடுக்கும். வெளியூர் பயணங்கள் நல்ல பலனை கொண்டு வரும். வெளிநாட்லேயிருந்து நல்ல செய்தி வந்து சேரும். அரசாங்கத்திலிருந்து அனுகூலமான நியூஸ் வந்து சேரும். நீண்ட நாள் பகையை பேச்சு வார்த்தை மூலம் தீர்த்து அப்பாடான்னு நிம்மதியடைவீங்க. சொத்து சம்பந்தப்பட்ட வழக்குகளில் சாதகமான பதிலை பெறுவீங்க. உறவினர்கள் மத்தியில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். நீங்க நில்லுன்னா நிற்பாங்க. உக்காருன்னா உக்காருவாங்க. வியாபாரத்தில் இயல்பான நிலையே இருக்கும். இனி செய்யவேண்டிய வேலைகளை பற்றிய வரைவுத் திட்டம் போடுவீங்க. துணையாக இருக்கும் நண்பர்கள் தோள் கொடுத்து உதவுவாங்க.

ரிஷபம்

பெரும் முயற்சி செய்து மங்கள காரியங்களுக்காக நீங்கள் செய்த ஏற்பாடுகள் சிறிய பிரச்சனைகளைத் தாண்டி சூப்பராய் வெற்றி பெறும். என்றைக்கோ செய்த முயற்சிக்கும் உழைப்பும் இந்த வாரம் பலன் கெடைக்குங்க. எதிர்பாராத வகையில் பண வரவு உங்களை திக்கு முக்காட வைக்கும். பழைய கடன்களை அடைச்சு நிம்மதிப் பெருமூச்சு விடுவீங்க. குடும்ப விஷயங்களை அடுத்தவங்க கிட்டயெல்லாம் பகிர்ந்துக்காதீங்க. நிதானமான போக்கை கடைப்பிடிங்க. தொழில் காரணமாக குடும்பத்தை விட்டு பிரிந்து இருக்க வேண்டிய நிலை உருவாகும். பட் நல்ல காரணத்துக்குத்தான் என்பதால் மனசு சமாதானமடையுங்க. வெற்றி செய்திகள் வீடு வந்து சேரும். தொழில் வளர்ச்சி அதிகரிக்கும். பணியாளர்கள் தொல்லை அகலும். திடீர் திருப்பங்கள் பல வந்து சேரும். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை பூர்த்தி செய்து மகிழ்வீங்க.

மிதுனம் ­

பிள்ளைகளால் முன்பு  சில பிரச்சனைகளை சந்தித்து மன அமைதியை இழந்தீங்கதானே? பெரிய மனிதர்களின் ஆதரவால் வார இறுதியில்­­­­ பிரச்சனைக்கு சரியான தீர்வு கிடைச்சு நிம்மதியும் சந்தோஷமும் அடைவீங்க. உங்கள் நடவடிக்கைகள் நன்மை தீமை என கலந்த பலன்களை கொண்டு வரும். புதிய முதலீடுகளை எச்சரிக்கையாக செய்யுங்கள். நம்பிக்கையான நபராக இருந்தாலும் பண விஷயத்தில் கவனமாக நடந்து கொள்வீங்கஎன்பதால் நோ பிராப்ளம். வியாபாரத்தில் துணிச்சலுடன் ஈடுபடுவீங்க. நிலம் வாங்கி விற்பது நல்ல பலனை கொண்டு வரும். குடும்பத்தில் திருமணம் நிகழும். அல்லது புதிய உயிர் உற்பத்தியாகி அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தும். அவசரம் பதற்றம் போன்ற குணங்களை விடுத்து இப்போது நிதானமும் பக்குவமுமாய்ச் செயல்படுவீங்க.

கடகம்

தாய்மாமன் வழியில் சில நடவடிக்கைகள் உங்களுக்கும் உங்க ஃபேமிலிக்கும் உதவியா இருக்கும். இரவு பகலா உழைப்பீர்கள். பண சேமிப்பில் அக்கறை செலுத்துவீங்க. கலைத்துறையினர் முன்னேற்றமான நிலையை அடைவார்கள். அலங்கார பொருள் விற்பனை, அழகு நிலையம் போன்ற பிசினஸ்கள் நல்ல லாபத்தை கொடுக்கும். மருத்துவச் செலவுகள் இருந்தாலும்கூட அதெல்லாம் மன நிம்மதியை கெடுக்காம இருக்கும். தக்க சமயத்தில் நண்பர்கள் உதவி செய்வார்கள். தொழில் போட்டிகளை சூப்பரா சமாளிப்பீர்கள். பல குட் திங்ஸ் நடக்கும். தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும்னு சொல்ல முடியாட்டியும், நாட் பேட். எடுத்துக்கிட்ட வேலைங்க எல்லாத்தையும் ஈஸியா செய்து முடிப்பீங்க. குடும்பத்தில் ஏற்பட்டிருந்த சச்சரவுகள் தீரும். கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும். அலுவலகத்தில் இருந்த டஃப் டைம் தீரும்.

சிம்மம்

உறவினர்களின் தேவையை பூர்த்தி செய்ய கைக்காசை செலவு செய்வீங்க. வீட்டை புதுப்பிக்க வங்கியில் கடன் பெறுவீங்க. பிள்ளைகளின் கல்விச் செலவுகளுக்காகச் சந்தோஷமாச் செலவு செய்வீங்க. அவங்களை பாட்டு கிளாஸ், டான்ஸ் கிளாஸ்னு எக்ஸ்டிரா திறமைகளுக்கும் செலவு செய்வீங்க. உங்க முயற்சிங்க தொழிலுக்கு உதவியாக இருக்கும். பங்குச்சந்தை வியாபாரம் சிறப்பான பலனை கொடுக்கும். வியாபாரிகளுக்கு யோகமான காலகட்டம். சிறு வியாபாரிகள் பெரிய லாபத்தை பார்ப்பார்கள். ரத்த உறவுகளால் சில நன்மைகளும் லாபங்களும் நற்பலன்களும் உண்டாக சான்ஸ் இருக்குங்க. இளம் வயதினர்கள் மேரேஜ் பந்தத்தில் ஈடுபடுவார்கள். விருந்து நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். சகோதர சகோதரிகள் உதவிகரமாக இருப்பார்கள். கணவர் அல்லது மனைவிக்கு  ரொம்பவும் சப்போர்ட்டா இருப்பீங்க.

கன்னி

வேலை இடத்தில் கவனமாயிருப்பீங்க.  பணியில முன்னேற்றம் ஏற்படும். சிலருக்கு பிரமோஷன் கெடைக்கலாம். இளம் வயதினர் மனதை பரிமாறி லவ்வில் ஈடுபட சான்ஸ் இருக்கு. பெண்கள் உற்சாகம் கொள்வார்கள். மனைவி மக்களை சந்தோஷப்படுத்தும்படியான செயல்களில் ஈடுபடுவீங்க. சினத்தை கட்டுக்குள் வைத்திருப்பீர்கள் என்பதால் சிக்கலில் மாட்டாமல் தப்புவீங்க. பழைய பாக்கிகளை அக்கறையோடு மட்டுமில்லாம வெற்றிகரமாவும் வசூல் செய்வீங்க. ஆன்மீகப் பெரியோர்களின் சந்திப்பு மன அமைதியை கொடுக்கும். எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். பிசினஸ் பீப்பிளுக்கு நல்ல வருமானம் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் சற்றுக் கூடுதலாய் ஏற்படும். பிசினஸ் தொடர்பாக வேண்டிய உதவிகளும், ஒப்பந்தங்களும் கிடைக்கும். அரசு நெருக்கடிகள் விலகும். வங்கியின் உதவிகள் கிடைக்கும். ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்களுக்கும், நிலத் தரகர்களுக்கும் எதிர்பாராத ஒப்பந்தங்கள் கிடைத்து வருமானம் ஹாப்பியா இருக்கும்.

துலாம்

குடும்பப் பொறுப்புகளை உணர்ந்து செயல்படுவீங்க. பிள்ளைகளுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுப்பீர்கள். மனைவியின் மனம் கோணாமல் நடந்து கொள்வீங்க. பக்குவமாக செயல்பட்டு வியாபாரத்தை விரிவுபடுத்துவீங்க. புதுசா இன்வெஸ்ட்மென்ட் செய்வீங்க. ரியல் எஸ்டேட் தொழில் மூலம் அமோகமான லாபம் பார்ப்பீர்கள். அல்லது ஷேர் மார்க்கெட்டில் ஹாப்பியா சக்ஸஸ் ஆவீங்க. மணல் வியாபாரம் சிறப்பா கை கொடுக்கும். குடும்பத்துல சுப காரியங்கள் திடீர்னு நடக்கும். அதற்கான செலவுகளை ஈடுகட்ட தடுமாற்றம் அடைஞ்சாலும் இறுதியில் வெற்றி அடைவீங்க. பெரியோர்கள் சந்திப்பு நடந்து தெய்வ வழிபாடுகள் செய்து வேண்டுதலை நிறைவேற்றிக் கொள்வீங்க. பெண்கள் தங்கள் தேவைகள் பூர்த்தியாவதைக் கண்டு ஹாப்பி ஆயிடுவாங்க. தாமதப்பட்டு கொண்டிருந்த மேரேஜ் கன்ஃபர்ம் ஆகும். வேலையில்லாதவங்களுக்கு ஜாப் கெடைக்கும்.

சந்திராஷ்டமம் : அக்டோபர் 12 முதல் அக்டோபர் 15 வரை

விருச்சிகம்

கணவன் மனைவி உறவு ஹாப்பியா இருக்கும். கடன் தொல்லைகள் அகலும். ரொம்ப நாளா இருந்துக்கிட்டிருந்த மனக்கவலைகள் விலகும். சுக்கிரன் மூன்றாம் வீட்டில் இருக்கிறார். கூட்டுத் தொழில் செய்வதற்கான முன்னெடுப்புகளை செய்வீங்க. சிலருக்கு திருமணம் கைகூடி வந்து இல்லற வாழ்க்கையில் அடியெடுத்து வைப்பார்கள். கண்டதை சாப்பிட்டு வயிற்றை கெடுத்துக்காதீங்க. ப்ளீஸ். கேர்ஃபுல்லா இருந்துட்டா பிரச்னை இருக்காதில்ல. . அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்பட்டு பணத்தை இழக்காதீங்க. கவலையும் மகிழ்ச்சியும் கலந்து இல்லற வாழ்வு இருக்கும். சினிமா, மியூசிக் மாதிரியான ஃபீல்ட்டில் உள்ளவங்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். ஸ்மால் விஷயங்களில்கூட சக்ஸஸ் கிடைக்கும். எதிர்பார்த்த பணம் மட்டும் இல்லீங்க.. எதிர்பாராத பணமும் வரும். வியாபாரத்தில் வரவேண்டிய பாக்கிங்க வசூலாகும். தொழில் தொடர்பாக எதிர்பார்த்த ஆர்டர்ஸ் கிடைக்கும்.

சந்திராஷ்டமம் : அக்டோபர் 15 முதல் அக்டோபர் 17 வரை

தனுசு

தொழிலுக்காக நீங்கள் எதிர்பார்த்த பணம் கிடைக்கும். வெளியூர் பயணங்களில் அலைச்சலுக்கு பிறகு விஷயங்கள்  சக்ஸஸ்ஃபுல்லா நிறை வேறும். வியாபாரத்தில் இருந்த இடையூறுகளை வெற்றிகரமாக முறியடிப்பீர்கள். நம்பி பணம் கொடுத்தவர்கள் நம்பிக்கைக்கையைக் காப்பாத்திக்குவாங்க. போட்டி பந்தயங்கள் உங்களுக்கு சாதகமாக அமையும். நீங்கள் வாங்கிய மனை இடத்திலிருந்த சிக்கல்கள் விலகும். பத்திரப்பதிவு செய்வீங்க. சுப விசேஷங்கள் தொடர்பான விஷயங்கள் இன்று நல்லபடியா ஃபைனலைஸ் ஆகும். சுபச் செலவுங்க ஏற்படும். சொத்து சம்பந்தமான பிரச்னையில் ஹாப்பியான முன்னேற்றம் ஏற்படும். அலுவலகத்தில் யூஷுவல் நிலையே இருக்கும். பிசினஸில் வளர்ச்சி இருக்கும். புது பிசினஸ் செய்ய சான்ஸ் கிடைக்கும். எதிர்பாராத ஹெல்ப் கிடைக்கும்.

சந்திராஷ்டமம் : அக்டோபர் 17 முதல் அக்டோபர் 20 வரை

மகரம்

வழக்கறிஞர்கள் வாத திறமையால் பெரும் புகழடைவார்கள். மருத்துவர்கள் சாதனை படைப்பார்கள். கொட்டிக் கொடுத்தாலும் கும்பிட்டு அழைத்தாலும் தவறான  ஃப்ரெண்ட்ஸ் பேச்சை கேக்கவே  கேக்காதீங்க. ப்ளீஸ். மல்லுக்கட்ட நினைக்கும் எதிரிங்களை புல்லுக்கட்டு மாதிரித் தூக்கி வீசுவீங்க.  குலதெய்வம் கோயிலுக்கு சென்று நீண்ட நாள் வேண்டுதலை நிறைவேற்றுவீங்க. அண்ணன் தம்பி அல்லது சிஸ்டர்ஸ்க்கு இடையே இருந்த பிரச்சனைகள் தீர்ந்து அன்போடு இணைந்து வேலை செய்வார்கள். மெல்ல மெல்ல சிரமங்கள்லேயிருந்து விடுபடுவீங்க. முதலாளிங்க அன்பை பெறுவது கடினம்னு நினைச்சிருந்தீங்க. அதனால அர்ப்பணிப்பு உணர்வோடு வேலை பார்ப்பீங்க. முதலாளி அன்புக்குப் பாத்திரமாவீங்க. பணத்தேவைகள் நல்லபடியா பூர்த்தியாகும். எதிர்பார்த்த பிசினஸ் ஆர்டர் கிடைக்கும். தொழில் தொடர்பாக வேண்டிய ஹெல்ப்ஸ் கிடைக்கும்.

கும்பம்

கோபத்தை தூக்கி எறிந்து விட்டு இல்லற வாழ்க்கையில் மகிழ்ச்சியை நிலைநாட்ட பாடுபட்டு அதுல சக்ஸஸ் ஆயிடுவீங்க. நீங்கள் எதிர்பார்த்த காரியம் நண்பர்கள் மூலமாக நிறைவேறும். தொழிலுக்கு தேவையான உதவிகள் கிடைக்கும். அப்பாவுக்காக செய்த செலவு வீண் போகலைன்னு உணர்ந்து நிம்மதிப் பெருமூச்சு வருமுங்க. வியாபாரத்தை பெருக்குவதற்காக புத்திசாலித்தனமாக நல்ல முடிவுகளை எடுப்பீர்கள். அதன் மூலமாக நிலையான வருமானம் பெறுவீங்க. குரு ஏழாமிடத்தில் இருக்கிறார். எந்தச் செயலிலும் கவனமாக் காலடி எடுத்து வைங்க. அது போதும். வாழ்க்கை துணையின் தேவைகளைப் பூர்த்தி செய்வதால் அன்பும் பாசமும் பெருகும்.  வேலை தேடறவங்களுக்கு அது பற்றிய நியூஸ் கிடைக்கும். அலுவலகத்தில் புதிய போஸ்ட் கிடைக்கும். பெண்களுக்கு பிரதர்ஸ், சிஸ்டர்ஸ் மூலம் ஹெல்ப் கிடைக்கும்.  நினைச்சது நிறைவேறும் வாரம்.

மீனம்

நினைத்த விஷயங்கள்  தடையில்லாம நிறைவேறும். ஃபாரின் போறதுக்கான வாய்ப்புகளைப் பெறுவீங்க. நிகழ்ச்சிகளால் வீட்டில் இன்பம் பொங்கும். கணவன் மனைவி உறவில் இருந்த பிணக்குகள் விலகும். பிள்ளைங்களால பெருமை உண்டாகும். உங்க பர்சனல் அட்ராக்ஷன் அதிக மாகும். மேடையில் கைதட்டல் வாங்குவீங்க. உத்தியோகத்தில் சக ஊழியர்களை பகைத்துக் கொள்ளாதீங்க. அலைச்சல் அதிகரிக்கும். சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்பட தொடங்குவீங்க. குடும்பத்தாருடனும் நண்பர்களுடனும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். அத்தியாவசிய செலவுகள் ஏற்படும். வீட்டு பராமரிப்பு செலவுகளும் உண்டாகும். புதிதாக தொழில் தொடங்குவது அல்லது புதிதாக பிசினஸ் ஸ்டார்ட் செய்வது போன்ற விஷயங்கள் உங்களுக்குச் சாதகமாக இருக்கும். வங்கிக் கடன் தொடர்பாக நல்ல தகவல் கிடைக்கும். குடும்பப் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். குடும்பத்தினரின் தேவைகளை பூர்த்தி செய்து தருவீங்க. இம்ப்பார்ட்டன்ட் பொருட்களை வாங்குவீங்க. வீட்டுப் பராமரிப்புச் செலவுகள் கூடும். கார்/ பைக் மாற்றும் சிந்தனை உண்டாகும்.