வார ராசிபலன்: 14.1.2022 முதல் 20.1.2022 வரை! வேதா கோபாலன்

Must read

மேஷம்

இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

கணவன் – மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கி,  நெருக்கமும் சந்தோஷமும்  அதிகரிக்கும். அலவலகத்தில் தன்னம்பிக்கை மற்றும் தைரியத்துடன் செயல்படுவீங்க. காரியங்களில் வெற்றி உண்டாகும். புதிய முயற்சிகளை  வாரத்தின் மத்தியப்குதிக்கு மேல் தொடங்குவது நல்லதுங்க. குடும்ப உறுப்பினர்களின் பொறுப்புகளைப் பகிர்ந்துகொள்வீங்க. வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும். பிள்ளைங்களால  மகிழ்ச்சி உண்டாகும். முக்கிய முடிவு எடுப்பதற்கு உகந்த வாரம். தந்தையிடம் எதிர்பார்த்த உதவியும் ஆதரவும் கிடைப்பதால் அவருடைய ஆசிகள் நிறையும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீங்க. உடல் ஆரோக்கியம் சிறப்பா இருக்கும். அலுவலகத்தில் உடன் பணி புரிபவர்கள் ஒற்றுமையாக செயல்படுவாங்க. பூர்வீக சொத்துகளால் அனுகூலப்பலன் கிட்டும்.

ரிஷபம்

இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

பொறுமையுடன் இருக்கவேண்டிய வாரம். எதிர்பாராத செலவுகளால் கடன் வாங்கிய நிலை மாறி, உபரித்தொகை கையில் இருக்கும்.  குடும்பம் தொடர்பான முடிவுகள் எடுப்பதில் சந்தோஷமான பலன்கள் இருக்கும். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் இருக்கும். பேச்சினால் நன்மையும் சந்தோஷமும் ஏற்படும்.  மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடித்து வெற்றி காணுவீங்க. அக்கம்பக்கத்தில் உள்ளவங்க உதவிகரமாக இருப்பாங்க. வியாபாரத்தில் பணியாளர்களைத் தட்டிக்கொடுத்து வேலை வாங்கி அவர்களின் சந்தோஷத்துக்கு வழி வகை செய்வீங்க. இதனால் அவங்க அதிகம் உழைப்பாங்க.  பங்குதாரர்களால் வீண் செலவுகள் ஏற்படக்கூடும். திடீர் சந்தோஷ செலவுகளால் கையிருப்பு கரைந்தாலும் பொருட்படுத்தும்படி இருக்காதுங்க.  சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.   தெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும்.

மிதுனம்

இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

அனுகூலமான வாரம். புதிய முயற்சி சாதகமாக முடியும். தேவையான பணம் கையில் இருந்தாலும், கூடுதல் செலவுகளால் மனம் சஞ்சலப்படும். உறவினர்களால் குடும்பத்தில் சில நல்ல விஷயங்கள் ஏற்படக்கூடும். வாரக்கடைசியில் நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பணியாளர்களாலும், பங்குதாரர்களாலும் முன்பு ஏற்பட்டிருந்த சில சங்கடங்கள் முடிவுக்கு வரும். மறைமுக இடையூறுகள் ஏற்பட்டு ஓரிரு நாளில் நீங்கும். வாகனத்தில் செல்லும்போது கவனமா இருங்க. தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். தாய்வழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீங்க. அரசுத் துறையில் பணிபுரிபவர்களுக்கு கௌரவ பதவிகள் தேடி வரும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் ஒற்றுமை அதிகரிக்கும். ரிலேடிவ்ஸ் வழியாக உதவிகள் தேடி வரும். சுப காரியங்களுக்கான முயற்சிகள் அனைத்தும் வெற்றியைத் தரும்.

கடகம்

இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

அரசு துறையில் இருப்பவர்களுக்கு அவங்க எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். வியாபாரத்தில் புதிய நபரின் அறிமுகத்தால் அனுகூலமான பலன்கள் கிட்டும் எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். வாழ்க்கைத்துணையுடன் முன்பு ஏற்படட்  மனஸ்தாபம்  ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வதால் முடிவுக்கு வரும். ரிலேடிவ்ஸ் மூலம் சுபநிகழ்ச்சி ஒன்றுக்கான பேச்சுவார்த்தை சுமுகமாக முடியும். சிலருக்கு எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு கரைவதுடன் கடன் வாங்கவும் நேரிடும்.  ஆனால் உங்க புத்திசாலித்தனமான நடவடிக்கையால் அதிலிருந்த மீளப்பார்க்கலாமே? நண்பர்களுக்காக செலவு செய்யவேண்டி வரும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும்., பணியாளர்களால் ஏற்பட்டிருந்த பிரச்னை தீரும்.  திடீர் செலவுகளால் கடன் வாங்க நேர்ந்தாலும் மனதில் நிம்மதியும் மகிழ்ச்சியும் குறையாது. 

சிம்மம்

இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

அற்புதமான வாரம்.  இந்த வாரம்  நீங்க எடுக்கும் புதிய முயற்சி வெற்றிகரமாக முடியும். பெற்றோர் உதவி செய்வதால் நீங்க எதிர்பார்த்த விஷயம் அனுகூலமாக முடியும். உங்களுடைய முயற்சிக்கு நண்பர்கள் பக்கபலமாக இருப்பாங்க. சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும்.  படிப்படியாகப் பொருள் சேர்க்கை உண்டு. புதிய முயற்சிகளை தைரியமாக மேற்கொள்ளுமுன் தசாபுக்தி சாதகமாக உள்ளதா என்று பார்த்துக்கொள்வது நல்லது. மேலதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும். மனதில் கருணை மற்றும் இரக்க சிந்தனை அதிகரிப்பதால் மற்றவங்களுடைய விருப்பத்திற்கு ஏற்றாற்போல் நடந்து கொள்வீங்க. எதிர்பாராத சுபச்செலவு ஏற்பட வாய்ப்பு உண்டு. வாழ்க்கைத்துணை மூலம்  சில நன்மைகள் ஏற்படும்.  

கன்னி

இனிய பொங்கல் வாழ்த்துகள்.

தந்தை வழி உறவுகளால் ஆதாயம் கிடைக்கும். தந்தையின் உடல் ஆரோக்கியம் மேம்படும். சகோதரர்களால் ஏற்பட்டிருந்த சில பிரச்னைகளை உங்களுடைய மென்மையான அணுகுமுறை முடிவுக்குக்கொண்டுவரும். வாழ்க்கைத்துணையின் விருப்பம் ஒன்றை  நிறைவேற்றுவதால் அவருக்கு மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் உண்டாகும். வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் சிலருக்கு எதிர்பாராத வெற்றி வாய்ப்பு உண்டாகும். அரசியல் சார்ந்த அதிகாரிகளின் சந்திப்பு ஆதாயம் தருவதாக இருக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். பணியாளர்கள் உற்சாகமாகச் செயல்படுவாங்க. மேற்கொள்ளும் புதிய முயற்சி சாதகமாக முடியும். சகோதரர்களால் சிறு சங்கடங்கள் ஏற்படு உடனுக்குடன் சரியாகிவிடும். எதிர்பார்த்த நல்ல செய்தி உங்களைத் தேடித் தானாய்வர வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் தாராள தன வரவு உண்டாகும். ரிலேடிவ்ஸ் முலம் சுபசெய்திகள் கிடைக்கும்.

துலாம்

இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

சோம்பலையெல்லாம் உதறித் தள்ளிச் சுறுசுறுப்பாகச் செயல்படுவீங்க. எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டாலும் தேவையான பணம் இருப்பதால் சமாளித்துவிடுவீங்க. மற்றவர்களின் பணத்தையோ பொருளையோ கையாளும்போது எச்சரிக்கையா இருங்க. குறிப்பாக உறவினர்களிடம் பேசும்போது மிகுந்த பொறுமையைக் கடைப்பிடிக்கவும். யாருடனும் வீண் விவாதத்தில் ஈடுபடவேண்டாம். வியாபாரத்தில் விற்பனை சற்று சுமாராக அதிகரித்திருக்கும். பணியாளர்களிடம் கடுமையான சொற்களைப் பயன்படுத்தாமல் அவர்களைத் தட்டிக்கொடுத்து வேலை வாங்கவும். எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் வாரத்தின் மத்தியப் பகுதியில் நீங்கும். வெளியூர்ப் பயணம் தவிர்ப்பது நல்லது. தந்தைவழியில் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். பொது இடங்களில் புதிய மனிதர்களிடம் பேசும்போது பொறுமையைக் கடைப் பிடிப்பது நல்லது. அலுவலகத்திலும் வீட்டிலும் சந்தோஷ சூழல் நிலவும்.

சந்திராஷ்டமம் : ஜனவரி 12 முதல்  ஜனவரி 15 வரை/ சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமா இருங்க.

விருச்சிகம்

இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

புதிய முயற்சிகளில் ஈடுபடும்போது கூடுதல் கவனம் தேவை. வழக்கமான பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும். சிலருக்கு மனதில் இருந்து வந்த இனம் தெரியாத சோர்வும் பயமும் ஒரு நிகழ்ச்சி மூலம் முழுமையாக நீங்கி மெல்ல நிம்மதியடைய ஆரம்பிப்பீங்க.  அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுடன் இணக்கமாக நடந்துகொள்ளவும். உடல் நலனில் கவனம் தேவை. பிள்ளைங்களால  வீண் செலவுகள் ஏற்பட்டாலும் அவங்க மகிழ்வதைக் கண்டு மனம்  நெகிழும். குடும்பப் பெரியவங்க கிட்ட பேசும்போது வார்த்தைகளில் கவனமா இருங்க. வியாபாரம் சற்று சுமாராகத்தான் இருக்கும். பணியாளர்களை அனுசரித்துச் செல்லவும். நண்பர்கள் மற்றும் உறவினரின் உதவிகள் சிரமம் குறைக்கும்.  அவசர முடிவுகளைத் தவிர்ப்பது நல்லது. எதிர்பார்த்த செய்தி கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டாலும் நல்லசெய்தி நிச்சயம் வரும். வாழ்க்கைத்துணையை அனுசரித்துச் செல்வது நல்லது.

சந்திராஷ்டமம் : ஜனவரி 15 முதல்  ஜனவரி 17 வரை/ சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமா இருங்க.

தனுசு

இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

உற்சாகமான வாரம். கணவன் – மனைவிக்கிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் அதெல்லாம் உடனுக்குடன் தீர்ந்து வெள்ளைக்கொடி பறக்கும். வாழ்க்கைத்துணையின் விருப்பத்தை நிறைவேற்று வீங்க. முக்கியமான முடிவுகள் எதையும் அவசரப்பட்டு எடுக்க வேண்டாம். நலம் விரும்புவோர் மற்றும் அனுபவசாலிகளின் ஆலோசனைகளைப் பெறுவது நல்லது. பிள்ளைகள் பிடிவாதம் பிடித்தாலும், விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. வியாபாரத்தில் விற்பனை வழக்கம்போலவே நல்ல முறையில் காணப்படும். உங்க முயற்சிகளுக்கு பங்கு தாரர்களின் ஆதரவு கிடைக்கும்.  உறவினர்களால் குடும்பத்தில் குழப்பங்கள் உண்டாகும் என்பதால் யாருடனும் வாக்குவாதங்கள் வேண்டாம். பெரிய அளவு பணம் போட வேண்டிய புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும்.

சந்திராஷ்டமம் : ஜனவரி 17 முதல்  ஜனவரி 20 வரை / சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமா இருங்க.

மகரம்

இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

எதிர்பாராத பணவர ஒரு பக்கம் வந்தாலும், திடீர் செலவுகளும் சிறிய அளவில் ஒன்றிரண்டு ஏற்படும். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவீங்க. நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வார மத்தியில் உறவினர் ஒருவர் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்க வாய்ப்பு உள்ளது. எதிரிகள் பணிந்து போவாங்க. காரியங்களில் சிறுசிறு தடைகள் உண்டானாலும் வெற்றிகரமாக நிதானமாக முடித்துவிடுவீங்க. உறவினர்களின் வம்பினால் ஏற்பட்ட மறைமுகத் தொல்லைகள் மறையும். வியாபாரத்தில் பணியாளர்கள் நல்லபடி ஒத்துழைப்பு தருவாங்க. உங்களின் அவசரப்போக்கினால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். சகோதர வகையில் செலவுகள் ஏற்படக்கூடும். புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். பிள்ளைங்களால  நன்மைகள் ஏற்படும். வீட்டிற்குத் தேவையான புதிய பொருட்கள் வாங்குவீங்க.

கும்பம்

இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். சகோதர வகையில் எதிர்பார்க்கும் காரியம் முடிவதில் சிறு சிறு தாமதங்களும் தடைகளும் உண்டாகும். சிலருக்கு வயிறு தொடர்பான பிரச்னைகள் ஏற்படும். பிள்ளைங்களால  அலைச்சலும் தேவையற்ற செலவுகளும் ஏற்பட்டிருந்த நிலை மாறி மனதில் நிம்மதி உண்டாகும். தந்தை மூலம் எதிர்பார்த்த விஷயம் ஒன்று அனுகூலமாக முடியும். வாழ்க்கைத்துணையால் சில பிரச்னைகளுக்குத் தீர்வு ஏற்படும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம்போலவே இருக்கும். உடல்நலனில் கவனமா இருங்க.பிள்ளைங்களால  பெருமையும் மகிழ்ச்சியும் உண்டாகும். அவர்களால் ஏற்பட்டிருந்த கவலை ஒன்று முழுமையாக முடிவுக்கு வரும். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு ஏற்படக்கூடும். பொறுப்பான பதவிக்கு உயர்வதால் பொறுமையும் கவனமும் அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்து வந்த சோகச்சூழல் மாறிக் குதூகலம் ஏற்படும். அவசரப்பட்டு வார்த்தைகளை விட்டுவிட வேண்டாம்.

மீனம்

இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

புதிய முயற்சிகளை புதனுக்கு மேல் தொடங்குவது சாதகமாக முடியும். தாயின் உடல்நலனில் இருந்து வந்த பிரச்னைகள் நீங்கி மகிழ்ச்சியடைவார். சிலருக்கு வயிறு அல்லது இடுப்புப் பகுதியில், சிறிய அளவில் ஆரோக்கியக்குறைவு ஏற்பட்டு உடனுக்குடன் சரியாகும். உறவினர்களுடன் பேசும்போது வீண் மனவருத்தம் ஏற்படாதபடி இனிமையான மற்றும் மென்மையான சொற்களைப் பயன்படுத்தி, பொறுமையைக் கடைப்பிடிக்கவும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் இருந்து வந்த தாமத நிலை மாறும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சுமாராக இருந்தாலும் மோசமான நஷ்டம் எதுவும் வராது. உங்க பொறுமையான அணுகுமுறை அல்லல்களைக் குறைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனமா இருங்க. ரிலேடிவ்ஸ் மூலம் கிடைக்கும் செய்தி குதுகலம் தரும். வாழ்க்கைத்துணையால் செலவுகள் ஏற்படக்கூடும். குழந்தைங்க வாழ்வில் மகிழ்ச்சி வரும். வாகனம் வாங்குவீங்க. மாணவர்களுக்குப் பொன்னான வாரம்.

More articles

Latest article