மேஷம்  

குடும்பம் பற்றிப் பெரிய முடிவுகள் எடுக்கும்போது நாலையும் யோசித்தபிறகுதான் இறங்க வேண்டும் என்பது பற்றி மிகவும் தீர்மானமாய் இருங்க. ஏற்கனவே செய்த முதலீடுகள் பெரிய அளவு லாபமளிக்கும். வேலை மாறுவதானால் அவசரம் வேண்டாம். வித்தியாசம் பார்க்காமல் பழகறீங்க நீங்க.  வீட்டு நலனுடன், நாட்டு வளர்ச்சி குறித்தும் அதிகம் யோசிக்க றீங்க. சூப்பருங்க.  சின்ன சின்ன கனவுகளெல்லாம் .. ஆசைங்களெல்லாம் நிறைவேறும். கடன் பிரச்சனைகள் சின்னதாய் ஒரு பக்கம் விரட்டினாலும் இங்கிதமாகப் பேசி பிரச்சினைங்கள்லேருந்து வெளியே வருவீங்க.  கோயில்களைப் புதுப்பிக்க உதவுவீர்கள். குலதெய்வத்துக்கும் உங்களால் இயன்றதைத் தருவீங்க.

சந்திராஷ்டமம்  : ஜூன் 15 முதல் ஜூன் 17 வரை

ரிஷபம்

அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளில் தாமதம் வேண்டாம். மறதிமேல் பழியைப் போடா தீங்க. சின்ன வயசு நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். கடந்த சில நாட்களாய் விமானம் முதல் பஸ் வரை எதுவும் பாக்கியில்லாமல் பிரயாணம் செய்துட்டீங்க. கொஞ்ச நாளைக்கு அவை குறையும். மேல்படிப்பு ஆயத்தம் வெற்றி தரும். யாரையும் அதிகமாய் நம்பிப் பொறுப்பை ஒப்படைக்காதீங்க. வேலை மாற வாய்ப்பு உள்ளது. எல்லாம் நன்மைக்குத் தான்னு நம்புங்க. (சும்மா சமாதானமில்லை. உணருவீங்க) உங்கள் வாழ்க்கைத் தரம் உயரும். பாதியில் நின்ற வேலைகளெல்லாம் முடியும். தினந்தோறும் எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். உங்கள் ரசனைக் கேற்ப .. நீங்கள் விரும்பி எதிர்பார்த்த நல்ல வீடு அமையும். 

சந்திராஷ்டமம்  : ஜூன் 17 முதல் ஜூன் 19 வரை

மிதுனம்

குடும்பத்தில் நன்மைகள் நடக்க வேண்டுமானால் கொஞ்ச காலம் பொறுத்துத்தான் ஆகணுங்க. ப்ளீஸ். சகோதர்களிடமும் சகோதரிகளிடமும்  ஈகோ வேண்டாமே. நண்பர் களால் உங்களுக்கும் உங்களால் அவர்களுக்கும் நன்மை உண்டு. புதிய நட்புகளின் அறிமுகம் பிற்கால நன்மைக்கு உத்தரவாதமாக அமையும் புதிய வேலை கிடைக்கும். ஓரிரு விஷயங்களில் திடீர்த்தடைகள் ஏற்பட்டு அவை திடீரென்று விலகி ஓட்டம்பிடிக்கும். அழகு, இளமை இரண்டும் உங்களுக்கு அதிகரிக்கும். பழைய வாகனத்தை மாற்றி புது வண்டி வாங்குவீங்க. பிள்ளைங்க பொறுப்பாக நடந்துக்குவாங்க . பூர்வீக சொத்தில் மராமத்து வேலைகள் செய்வீங்க. சமையலறையை நவீனமாக்குவீங்க.  ஏதாவது ஒரு கட்டுமானப்பணி பற்றி உங்க முழு கவனம் இருக்கும். எல்லாவற்றிற்கும் பயம் வேண்டாம். தைரியமாய்க் காலை எடுத்து வைங்க.

சந்திராஷ்டமம்  : ஜூன் 19 முதல் ஜூன் 22 வரை

கடகம்

வேலைச்சுமை அது பாட்டுக்கு இருந்து இருந்துக் கொண்டேதான் இருக்குங்க.. அதுக்காக ஆதங்கப்படுவீங்க. ஆனாலும் என்னங்க  செய்ய முடியும்? வீண் சந்தேகத்தால் நல்லவர் களின் நட்பை இழக்க நேரிடும். கவனமாய் இருந்துக்குங்க.   நல்லவங்களைப் புரிஞ்சுக்குங்க. பணப்பற்றாக்குறையை போக்கக் கூடுதலாக உழைப்பீங்க. முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். வேலையை மத்தவங்க கிட்ட விடாதீங்க. மத்த வங்க வேலையையும் ஆஃபீஸ்ல நீங்க வாங்கிச் செய்யாதீங்க. உங்களிடம் மறைந்துக் கிடந்த திறமைகளை வெளிப்படுத்த நல்ல சந்தர்ப்பம் கிடைக்கப்போகுது. இதனால் சூப்பர் எதிர்காலம் காத்திருக்கு.  தள்ளிப் போன திருமணம் கூடி வரும்.

சிம்மம்

கொஞ்சம் பொறுமையில்லாமல் இருக்கீங்க. மாத்திக்குங்க. அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். கணவன்-மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கி ஜாலியா, சந்தோ ஷமா இருப்பீங்க. குறிப்பாக குழந்தைங்க பற்றி இருந்த டென்ஷன்ஸ் தீரும். சிக்கனம் செய்யறீங்க. சரி. கருமித்தனம் செய்யாதீங்க. தப்பு. தெருவுக்கு ஒரு வங்கி கடன் கொடுக்க வீட்டு வாசலின் நின்றாலும் வாங்காதீங்க! ப்ளாட்டினமாகவே  இருந்தாலும் க்ரெடிட் கார்ட்  என்பது கடன் அட்டைதானேங்க! நமக்கு இந்த வாய்ப்பு இல்லை என்று தருமி மாதிரிப் புலம்பிக் கொண்டிருந்தவர்களுக்கு வாசல் கதவை அதிருஷ்ட லட்சுமி தட்டுகிற…காசு கொட்டுகிற நேரம் இது. குழந்தை பாக்யம் கிடைக்கவில்லையே என வருந்தினீர்களே! இனி  வாரிசு உருவாகும்.

கன்னி

விலை உயர்ந்த தங்க நகைங்க வாங்கப் போறீங்க. பிசினஸ் லாபகரமாகப் போகும். எடுத் தோம் கவிழ்த்தோம் என்றில்லாமல் ஆழமாக யோசித்து முடிவெடுக்கும் நீங்கள், கடந்து வந்த பாதையை என்றைக்கும்  மறவாதவர்கள். புதிய யோசனைகள் பிறக்கும். பிறவி யிலேயே உங்களுக்குள்ள புத்திசாலித்தனம் கைகொடுக்கும்.  நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை நீங்கள்தான் முன் நின்று நடத்துவீங்க. அதற்கான பாராட்டும் கிடைக்கும். அலுவலக விவகாரங்களில் சிறிது நிதானம் இருக்கவே செய்யும். ஃப்ரீயா வுடுங்க. தன்னிச்சையா சரியாகும். பாஸ்போர்ட் விசா விஷயங்களில் வெற்றிதான்.

துலாம்

எந்த விஷயத்துக்குமே சற்றே அலைஞ்சு திரிஞ்சு டயர்ட் ஆகவேண்டியிருக்கும்.  சலிச்சுக்கா தீங்க. முடிவு வெற்றிகரமாகவே இருக்கும். புது வாகனம் வாங்குவீங்க. விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்க வாய்ப்புள்ளது. அல்லது உங்க மம்மியோ கணவரின் மம்மியோ உங்களுக்கே உங்களுக்குன்னு நகையைக் கொடுப்பாங்க. அரசு காரியங்கள் நீங்க எதிர்பார்த் ததைவிடவும் விரைந்தே முடியும். உங்களின் தனித்திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும்.  அதை விடாமல் பிடிச்சுக்கிட்டு அலுவலகத்தில் நல்ல பெயர் எடுப்பீங்க. வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். நீண்ட நெடுநாட்களாக தள்ளிப் போன விஷயங்கள் திடீரென்று முடுக்கிவிடப்பட்டு முடியும்.

விருச்சிகம்

உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு ஜாஸ்தியாகும். குடும்பங்களுக்கிடையேயும் நண்பர் களுக்கு மத்தியிலும் இருந்த பிரச்சினைகள் தீர நீங்க கருவியாய் இருப்பீங்க என்பதால் உங்களைக் கொண்டாடுவாங்க.  இருந்தாலும் சில விஷயங்கள் முடியலை என்று சலிப்பு இருக்கும்தான். அலுத்துக்காதீங்க. எதுவும் வேளை வந்தால் உங்க  முயற்சி இல்லாமயே தன்னிச்சையாய் முடியும்.   நேர்மையா இருப்பதும்… யாரேனும் தீய வழியில் இழுக்கப் பார்த்தால் ஈடுகொடுக்காமல் இருப்பதும்தாங்க முக்கியம். அப்படி உள்ளவங்களுக்கு எந்தப் பிரச்சினையும் வராது. குறுக்கு வழியில் போறவங்களுக்குப் பெரிய பழிகள் வரக்கூடும்.  அப்படிப்பட்ட பொல்லாத காலகட்டம் நடக்குது. எனவே கவனமாய் இருந்துக்குங்க.

தனுசு

ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச்சுமை தொடர்ந்துக்கிட்டேதாங்க இருக்கும். சின்னச்சின்ன உடல் நலப்பிரச்சினைகள் வந்து நீங்கும். குடும்பத்தில் சச்சரவு வந்து விலகும். ஆனால் அதுக்கு நீங்க காரணமா இருக்க மாட்டீங்க. எனவே இரண்டு பக்கம் பேசி சமாதானம் செய்து அமைதிக்கு வழிவகுப்பீங்க. எதிர்பார்த்த பணவரவு உண்டுங்க. பிரசவம் போன்ற நல்ல காரணங்களுக்காகப் பிரிஞ்சிருந்த தம்பதிங்க ஒண்ணு சேருவீர்கள். தீய பழக்கங்களிலி ருந்து விடுபடுவீங்க. ஏங்கிக் காத்திருத்தவங்களுக்குப் பிள்ளை பாக்யம் கிடைக்கும். அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். அருமையான செலவுகள் உண்டு. அவற்றால் சந்தோஷம் மட்டுமே கிடைக்கும்.

மகரம்

ஒதுங்கியிருந்த உறவினர்கள், நண்பர்கள்  மற்றும் அக்கம் பக்கத்தினர்.. உங்களுய வளர்ச்சியைப் பார்த்துவிட்டு வலிய வந்து உறவாடுவாங்க. புது வீடு கட்டி கிரகப் பிரவேசம் செய்வீங்க. செலவுகள் அதிகம் இருந்தாலும் வரவும் நிறையத்தான் இருக்கும். உணவு சம்பந்தமான பிசினஸ் செய்பவர்களுக்கு நல்ல லாபமான வாரம். எப்போதும் தியாகம் செய்து கொண்டிருக்கீங்க.  பிரதிபலன் பாராத சேவையால் எல்லோர் மனதிலும் இடம் பிடிப்பீங்க. எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பிரபலங்களின் பட்டியலில் இடம் பிடிப்பீர்கள். அலுவலகத்தில் எல்லோரும் திரும்பிப் பார்த்துப் பாராட்டும்படியான காரியங்கள் செய்வீங்க. பணம் வரத் தொடங்கும். வழக்கு சாதகமாகும்.

கும்பம்

அரைக்குறையாக நின்ற வீடு கட்டும் பணியை இனி தொடருவீங்க. தாய்வழி  மற்றும் பாட்டன் சொத்துக்களை பெறுவதில் இருந்த தடைகளும் பிரச்சினைகளும் நீங்கும். ஒரு வேளை ஏதும் வம்பு வழக்குகள் இருந்தால் அவை சுமுகமாக முடியும். அல்லது உங்கள் பக்கம் வெற்றியாக முடியும். நீங்கள் சமீபகாலமாக எதிர்பார்த்துக் காத்திருந்த வங்கிக் கடன் கிடைக்கும். அம்மான், அத்தை வகையில் மதிப்பு அதிகரிக்கும். அவங்க வீட்டு விசேஷங் களில் பங்கேற்பது மட்டுமின்றி உடலாலும், பணத்தாலும் உதவுவீங்க அதனால் நல்ல பெயர் கிடைக்கும். அது பிற்காலத்தில் நல்ல முறையில் உதவும். குறிப்பாக உங்க குடும்பத்தில் உங்களுக்கோ அல்லது வேறு யாருக்கேனுமோ திரும்ணம் நிச்சயமான சமயத்தில் இந்த உறவுகளின் உதவி கட்டாயம் கிடைக்கும்.

மீனம்

பல காலம் கிடப்பில் போட்டிருந்த விஷயங்களையும் பொறுப்புகளையும் விரைந்து முடிப்பீங்க. முன்பைவிட இப்போ அதிகமாக ஓடி உழைக்க வேண்டியிருக்கும். சாப்பிடவும் தூங்கவும் நேரமே இருக்காது. எனினும் நீங்கள் எதிர்பார்த்ததைவிட நிறைய நிறையப் பணம் வருதே! பேச்சைக் குறைத்து செயல்பாட்டில் வேகம் காட்டுவது நல்லது. அநாவசிய விஷயங்களில் கவனம் செலுத்தி நேரத்தை வீணடிச்சுக்கிட்டிருக்கீங்க. மலைபோலே வரும் சோதனை யாவும் பனி போல் நீங்கிவிடும். மருத்துவ ரிசல்ட் எல்லாம் வயிற்றில் மில்க் வார்க்கும்.  நிறைய சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்பீங்க. அது உங்களுக்கு லாபகரமாயும் இருக்கும். மேலும் எதிர்காலத்தில் நன்மை ஏற்படுத்தக்கூடிய சந்திப்புக்களையும் ஏற்படுத்திக்கொடுக்கும்.

சந்திராஷ்டமம்  : ஜூன் 12 முதல் ஜூன் 15 வரை