மேஷம்

இனிய பொங்கல் தின நல் வாழ்த்துகள்

அலுவலகம் மற்றும் கல்வி விஷயத்துல உங்களுக்கு ஒரு  அற்புதமான யோசனை உதிக்கறபோது, ​​அதை டிலே செய்யாமல் நிறைவேற்றினால்தான் என்னவாம்? நல்ல சான்ஸ் எல்லாம் தட்டிப்போகுது பாருங்க. கொஞ்சம் உங்க பணத்தை சேமிப்பதிலும் அக்கறை காட்டுங்கப்பா. நண்பர்களின் நலன் இப்போ உங்களுக்கு மிக முக்கியமானதா இருக்கும். யெஸ். ஷூர்லி. அலைச்சல் இன்கிரீஸ் ஆகும் என்பதால் அவசியமில்லாத பயணங்களைத் தவிர்க்கலாங்க. பெண்களுக்கு கோல்ட் நகைங்களோட சேர்க்கை அதிகரிக்கும். குட்டிக்குட்டியாய்த் வேலை தேடறதுல தடைகள் வரும் தடைகளை தாண்டி முன்னேற யாராவது ஒரு பெண் சிநேகிதி உதவி செய்வார். ஆன்மீக பயணம் மன அமைதியை ஏற்படுத்தும் தெய்வ அருள் கிடைக்கக் கோவிலுக்குச் செல்வீங்க. யெஸ்.. யூ வில் கோ.

சந்திராஷ்டமம் : ஜனவரி 17 முதல் ஜனவரி 19 வரை

சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருங்கள்.

ரிஷபம்

இனிய பொங்கல் தின நல் வாழ்த்துகள்

நீங்க மத்தவங்களை வாழ வைக்கறதுல அக்கறை காட்டி நிறையப் பாராட்டுப் பெறுவீங்க. உங்க பொறுமை இந்த வாரம் குடும்ப அமைதியை பராமரிக்க உதவி வீட்டுல உள்ளவங்களை ஹாப்பியாக்கும்.  உடல்நலம் முன்பைவிட நல்லாயிருக்குங்க. உங்க வாழ்க்கைல சில நல்ல செய்திகளையும் பெறுவீங்க. உங்க மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வீங்க. ஃபைனான்ஸ் விஷயங்கள்லயும் நல்ல முன்னேற்றம் இருக்குங்க. பணத்தை நீங்க இரட்டிப்பாக்க முடியும். இந்த வாரம் நீங்க பயணத்திலிருந்து பயனடைவீங்க. உங்க பொழுதுபோக்குக்காக அதிகப் பணம் செலவழிப்பீங்க. தட் மீன்ஸ் சூப்பரா செலவு செய்வீங்க. டோன்ட் ஒர்ரி.. நிறையப் பணம் வரவும் செய்யும். அப்பாவுக்காகச் செய்யும் செலவுகள் அதிகரிக்கும். அதனால் அவரின் ஆசியைப் பெறுவீங்க. பேச்சில் சூடு அதிகரிக்கும் அதிகாரத்தை கொஞ்சம் குறைக்கவும்.  பண விஷயத்தில் கவனம் தேவை.  ப்ளீஸ் பி கேர்ஃபுல்.

மிதுனம்

இனிய பொங்கல் தின நல் வாழ்த்துகள்

தொழில் முதலீடுகளில் லாபம் இரட்டிப்பாகும். வருமானத்தில் லாபம் அதிகரிக்கும். வேலையில் திடீர் இட மாற்றங்கள் ஏற்படும். புதிய திட்டங்கள் வெற்றிகரமாக முடியும். ரிலேடிவ்ஸ் கிட்டேயிருந்து  நல்ல செய்திகள் தேடி வரும்.  வேலையை விட்டுட்டு புதிய வேலைக்கு முயற்சி செய்யறீங்களா? சின்னத் தடைங்களுக்குப் பிறகு நிறைவேறுங்க. வண்டி வாகனங்களில் செல்லும் போது வேகத்தை குறைத்து மெதுவாக செல்லவும். உங்களுடைய புதிய முயற்சிகளில் வெற்றிகள் கிடைக்க பொறுமையும் நிதானமும் தேவை. புதிய முயற்சிகள் இழுபறியாகவே நடைபெறும். உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனமும் அக்கறையும் தேவைப்படும். நம்பிக்கையுடன் முயற்சி செய்பவர்களுக்கு நினைத்தது நடக்கும். பெஸ்ட் விஷஸ். ஹெல்த் விஷயத்துல இருந்த பிரச்னைங்க விலகி ஹப்பாடான்னு நிம்மதியாவீங்க பாருங்களேன். ஹாப்பியா?

கடகம்

இனிய பொங்கல் தின நல் வாழ்த்துகள்

வியாபாரம் விருத்தியாகும் தம்பதியரிடையே நெருக்கம் அதிகரிக்கும். பாதிப்புகள் குறைவாகவே இருக்கும். நல்ல ஜாப் கெடைக்கும். வேலையில் இருந்த நெருக்கடிகள் நீங்கும்  தொழில் கூட்டாளிகளுடன் பேச்சில் கவனம் தேவை. செய்யும் தொழிலில் கவனமும் நிதானமும் தேவை. செலவுகளைப் பற்றிய பயம் வேண்டாம். ஒவ்வொரு செலவும் மகிழ்ச்சியையும் நன்மையையும் தருவதுடன் சில எக்ஸ்பென்ஸஸ் நீங்க இன்வெஸ்ட் செய்யும் தொகையாகிவிடும். வியாபார வாடிக்கையாளர்களினால் நன்மை உண்டாகும், நண்பர்களுடன் நல்லுறவு அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்குவது தொடர்பாக இந்த வாரம் முயற்சி செய்யலாம். திடீர் யோகங்கள் வரக்கூடிய வாரமாக அமைந்துள்ளது. குழந்தைகளுக்கு திடீர் நன்மை உண்டு. தந்தைக்கு அதிர்ஷ்டம் உண்டாகும். கணவர் அல்லது மனைவியால் உங்களுக்கு நன்மை ஏற்படும். குட்லக்.

சிம்மம்

இனிய பொங்கல் தின நல் வாழ்த்துகள்

உங்களை லைக் பண்ணாத சிலரால் உங்களுக்குச் சில சின்னச் சின்னப் பிரச்னை வரக்கூடும். இந்த வாரம் ஸ்டூடன்ட்ஸ்க்கு அதிகம் வெற்றி கெடைக்கும். பதவி உயர்வு தேடி வரும் வருமானம் அதிகரிக்கும் மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். செயல்களில் கவனம் தேவை. வீடு நிலம் போன்றவற்றில் முதலீடுகள் செய்வது லாபத்தை தரும். தொழில் வியாபாரத்தில் திடீர் லாபம் வரும்.  சொந்தமாக செய்யும் தொழில் சிறப்படையும். திருமண சுப காரியங்கள் தொடர்பாக சின்னச் சின்னத் தடைங்க இருந்தா டோன்ட் ஒர்ரி மெல்லத்தான் சரியாகும். வியாபாரம் சிறப்படையும். மனசுல குழப்பம் உண்டாகும். இந்த வாரம் அமைதியும் பொறுமையும் சகிப்புத்தன்மையும் தேவைப்படும். அலுவலக விஷயங்கள்ல இந்த வாரம் சாதகமா இருக்குங்க.  திடீர் அதிர்ஷ்டம் தேடி வரும். பண பிரச்னைகள் முடிவுக்கு வரும். முயற்சி ஒன்று வெல்லும். ஆல் த பெஸ்ட்.

கன்னி

இனிய பொங்கல் தின நல் வாழ்த்துகள்

உத்தியோகத்துல கவனம் தேவை. ஃபைனான்ஸ் விஷயத்துல இந்த வாரம் சாதகமா இருக்கு. ரிலேடிவ்ஸ் வீட்ல சுப காரியங்கள் நடைபெறும். பண வருமானம் வந்தாலும் சுப காரிய செலவுங்க தேடி வரும். பிள்ளைங்களால ஏற்பட்ட பிராப்ளம்ஸ் அவங்களாலேயே நீங்கும். உங்களுக்குச் சாதகமான நல்ல கிரகங்கள் நல்ல பலன் தரப்போவது உறுதிங்க. ஸ்டூடன்ட்ஸ் கல்விக்காக வெளிநாடு கிளம்ப சான்ஸ் இருக்குப்பா. அதிலும் குறிப்பா நீங்க விரும்பிய பள்ளி அல்லது பல்கலைக்கழகத்தில் சீட் கிடைக்கப் போகுது பாருங்களேன். திடீர் அதிர்ஷ்டத்தின் மூலம் பண வரவு அதிகரிக்கும். வேலை விஷயமாக வெளியூர், வெளிநாடு பயணம் செய்ய வேண்டியிருக்கும். ரொம்ப காலமா தீராம தொல்லை தந்துக்கிட்டிருந்த பிரச்சனைங்க உங்களுக்கு டாட்டா சொல்லிட்டு விலகிப்போயிடுங்க. சூப்பர்.

துலாம்

இனிய பொங்கல் தின நல் வாழ்த்துகள்

தொழில் விருத்தியடையும். வேலையில் இருந்த பிராப்ளம்ஸ் நீங்கும். யெஸ். குட். உங்க முடிவுகளை மற்றவர்கள் மீது திணிக்காதீங்க. இந்த வாரம் ஆபீஸ்ல நீங்க விரும்பிய விஷயங்கள் நடக்கும். யாராவது புதிய நபர் உங்களுக்கு நெருக்கமாவாங்க. சிலர் நம்பிக்கையற்றவர்களாக இருக்கக்கூடும். கொஞ்சம் கவனமாக இருங்கள். பெண்களால் நன்மை உண்டாகும். புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். வருமானம் வரும்.  கணவன் மனைவிக்கு இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் அகலும். வாய்க்கு ருசியான உணவில் அதிக நாட்டம் கொள்வீங்க. வெட்டிப் பேச்சுக்கள் விவகாரத்தைக் கொண்டு வரும். பிள்ளைகளின் கல்வி தொடர்பான விஷயங்களில் ஆலோசித்து முடிவு எடுங்க.. வியாபாரத்தை விரிவுபடுத்த கடையை அழகுபடுத்துவீங்க. நிறைய டிராவல் செய்வீங்க. பழைய ஃப்ரெண்ட்ஸைப் பார்ப்பீங்க.

விருச்சிகம்

இனிய பொங்கல் தின நல் வாழ்த்துகள்

புதிய முதலீடுகளுக்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்வீங்க.. நீண்ட காலமாக பாதிப்பைத் தந்த நோய் அகலும். உறவுகள் நட்புகள் மேம்படும். எதிர்ப்புகளை முறியடிப்பீங்க. மங்கல நிகழ்ச்சிகளுக்கு தடையில்லை. ஆடம்பரமான விருந்து உபசரிப்புகளைச் செய்வீங்க. நிலம் வாங்குவதில் அக்கறை காட்டுவீங்க. ரியல் எஸ்டேட் தொழில் முன்னேற்றமாக காணப்படும். கணவன் மனைவிக்கிடையே போட்டி அகன்று சுமுகம் நிலவும். பணிவாக நடந்து கொண்டால் பொது இடங்களில் ஒங்களோட செல்வாக்கு உயரும். ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் எச்சரிக்கை தேவை. சரக்குகளை அனுப்பி வைக்கும் போது பாதுகாப்பு அம்சங்களைக் கவனத்தில் கொள்ளுங்கள். திருமண முயற்சிகள் சாதகமான பலனைத் தரும். போட்டி பந்தயங்களில் விளாசித் தள்ளுவீங்க. பிளான் பண்ணி செலவுங்களைக் குறைப்பீங்க. இட் இஸ் எ குட் மூவ்

தனுசு

இனிய பொங்கல் தின நல் வாழ்த்துகள்

கமிஷன் வியாபாரங்கள் நல்ல லாபத்தைக் கொண்டு வரும். நிலம் வாங்கி விற்கும் தொழில் அமோகமாக நடக்கும். யாருக்கும் வாக்குக் கொடுக்காதீங்க. ஜாமீன் கையெழுத்துப் போடாதீங்க. பிள்ளைகளின் நடவடிக்கை மனசுக்கு நிம்மதி தருங்க. வியாபாரம் மள மளவென்று உயரும். தொழில்துறையில் சாதனை படைப்பீங்க. உத்தியோகம் பார்ப்பவர்கள் உற்சாகமாக இருப்பாங்க. எதிர்பாராத இடத்திலிருந்து பணவரவு உண்டாகும். பெரிய மனிதர்களின் சந்திப்பால் அரசாங்க வேலை துரிதமாக நடக்கும். கடந்த ஏழு வருஷங்களா இருந்துக்கிட்டிருந்த பெரிய பிரச்னைங்க்ள்ளேந்து படக்குன்னு வெளியே வந்திருப்பீங்களே. காலில் அடிபட்டவங்களுக்கு எல்லாமும் மந்திரக்கோலைச் சுழற்றினமாதிரி சரியாகிப்போயிருக்கும். முன்பு வீண் பழி சொன்னவங்க வெக்கப்படற அளவுக்கு சாதிப்பீங்க. தூங்கவிடாம செய்த பயங்கள் நீங்கி நிம்மதி வந்திருக்குமே. ஹாப்பி?

மகரம்

இனிய பொங்கல் தின நல் வாழ்த்துகள்

பேச்சுலயும் செயல்லயும் ரொம்பவே கேர்ஃபுல்லா இருந்துக்குங்க. வீண் பழி தரக்கூடிய செயல் எதையும் அறவே செய்யக்கூடாதுங்க. கடந்த ரெண்டரை வருஷங்களா வாட்டி வதைச்சுக்கிட்டிருந்த பிரச்னைங்க இனி இல்லை என்பது பெரிய ரிலீஃப்தாங்க. வண்டி ஓட்டும்போது பத்து மடங்கு கேர்ஃபுல்லா ஓட்டுங்க. வெளியூர் வெளிநாடுன்னு டிராவல்  செய்ய வேண்டி வரும். குழந்தைங்களால வந்த டென்ஷன்கள் நீங்கி நிம்மதி வரும். நல்ல நட்புகளைத் தக்க வைச்சுப்பீங்க. நினைத்த காரியத்தை நினைத்தபடி முடிக்க முயற்சிகளை மேற்கொள்வீங்க. பழைய பாக்கிகளை அதிரடியாக வசூல் செய்வீங்க. கணவன் மனைவிக்கு இடையே மனம் மகிழும்படியான நிகழ்ச்சி நடக்கும். அதனால் பிள்ளைங்க முன்பிருந்ததைவிட ஒற்றுமையாக நடந்து கொள்வாங்க. மங்கல நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளைச் செய்வீங்க. குடும்பத்துல உள்ள பெரியவங்க கிட்ட ஆசீர்வாதம் வாங்கிடுவீங்க.

கும்பம்

இனிய பொங்கல் தின நல் வாழ்த்துகள்

எடுத்தேன் கவிழ்த்தேன்னு எதையும் செய்யாதீங்கப்பா. பொறுமையும் நிதானமும் கண்டிப்பா தேவை. குடும்பத்துல ஒருத்தருக்குத் புதிய வாகனம் வாங்குவீங்க. தள்ளிப்போன திருமணத்தைச் சொல்லி வைத்து நடத்துவீங்க. பொதுநல சேவைகளில் ஈடுபட்டு பலரின் பாராட்டைப் பெறுவீங்க. குரு நான்காம் வீட்டில் இருக்கிறார். வங்கி சேமிப்பு உயரும். பணவரவு தாராளமாக இருக்கும். ஒங்களோட வாக்கு பலிக்கும். ஆகவே, யாரையும் மனம் நொந்து திட்டாதீங்க. கடந்த காலத்தில் வாங்கிய நிலத்திற்கு பத்திரம் போடுவீங்க. பிள்ளைகளுக்கான செலவு கை மீறிப் போகும். கேது பகவான் பத்தாம் வீட்டில் இருக்கிறார். பழைய கடன்களை அடைப்பீங்க. வீடு வாகன தவணைகளை முறையாக செலுத்துவீங்க. கணவன் மனைவியால் டென்ஷனுக்கு உள்ளாகாதபடி பாத்துக்குங்க. அவங்களை அமைதிப்படுத்த வேண்டியது உங்க பொறுப்பு.

சந்திராஷ்டமம் : ஜனவரி 12 முதல் ஜனவரி 15 வரை

சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருங்கள்.

மீனம்

இனிய பொங்கல் தின நல் வாழ்த்துகள்

புது சிக்கல் எதுலயும் மாட்டிக்காதபடி கவனமாய் இருக்கப்பழகுங்க. யார் பற்றியும் யார் கிட்டயும் வத்தி வைக்காதீங்க. எஸ்பெஷலி ஆபீஸ்ல யாரோ எப்பிடியே போயிட்டுப் போகட்டுங்க. நமக்கேன் வம்பு? உங்க ட்யூட்டி உண்டு நீங்க உண்டுன்னு போயிடுங்கப்பா. ப்ளீஸ. கடந்த கால சோர்வுகளை விரட்டி அடிப்பீங்க. புதுப்புது சிந்தனைகளால் வியாபாரத்தைப் பெருக்குவீங்க. துரோகிகளைக் கூட நண்பர்களாக மாற்றுவீங்க. சகோதரிகளுக்குத் தேவையான உதவிகளை மனம் கோணாமல் செய்வீங்க. உறவுகளை ஒன்று சேர்ப்பதில் முனைப்புக் காட்டுவீங்க. மற்றவர்கள் பொறாமைப்படும் அளவுக்கு வியாபாரத்தைப் பெருக்குவீங்க. வேலைக்கு விண்ணப்பித்து இருந்தவர்களுக்கு வேலை கிடைக்கும். பணியின் காரணமாக சிலர் வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும். நிர்வாகத்தினரின் ஆதரவு கிடைக்கும். சிலருக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். அக்கம்பக்கத்து வீட்டுக்காரங்க கிட்ட சாஃப்டாப் பேசுங்க. சண்டை வலிக்க வர்றவங்க கிட்ட சரண்டர் ஆயிடுங்க.

சந்திராஷ்டமம் : ஜனவரி 15 முதல் ஜனவரி 17 வரை

சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருங்கள்.