சென்னை:
ரபரப்பான சூழலில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி காலை 11.20 மணிக்கு டெல்லி செல்கிறார்.


பேரவையில் கவரனர் ஆற்றிய உரை தொடர்பாக, தமிழக அரசுக்கும் கவர்னருக்கும் இடையே மோதல் சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது.இந்நிலையில் ,டெல்லியில் நேற்று ஜனாதிபதியை திரௌபதி முர்முவை டி.ஆர்.பாலு உள்பட திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று சந்தித்துப் பேசிய நிலையில், கவரனர் ரவியின் டெல்லி பயணத் தகவல் வெளியாகியுள்ளது.

இதன்படி, இன்று தமிழ்நாடு கவரனர் டெல்லி செல்லவிருக்கிறார். மதியம் 1.30 மணிக்கு டெல்லி செல்லும் கவரனர் நாளை மாலை சென்னை திரும்புகிறார். கவர்னருக்கு எதிராக ஜனாதிபதியிடம் திமுக புகார் தெரிவித்திருக்கும் நிலையில் இந்த வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.