சென்னை:
பொங்கல் பண்டிகையைக் கொண்டாட சென்னையில் இருந்து மக்கள் சொந்த ஊருக்குச் செல்வதால் பெருங்களத்தூர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

பொங்கல் பண்டிகை வரும் 15 ஆம் தேதி கொண்டாடபட உள்ளது . சனி, ஞாயிறு விடுமுறை நாட்களை தொடர்ந்து 16, 17 ஆம் தேதிகளில் மாட்டு பொங்கல், காணும் பொங்கல் என அரசு விடுமுறை நாட்களுடன் பொங்கல் விடுமுறையும் இணைந்து 4 நாட்கள் விடுமுறை கிடைப்பதால் சொந்த ஊர்களுக்கு ஏராளமான மக்கள் படையெடுத்துவருகின்றனர். இதனை முன்னிட்டு சென்னையிலிருந்து இன்று முதல் 14ஆம் தேதி வரை தினமும் வழக்கமாக இயக்கக்கூடிய பேருந்துகளுடன் சிறப்பு பேருந்துகள் என 3 நாட்களுக்கும் மொத்தமாக 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இது மட்டுமின்றி தனியார் பேருந்துகள், கார் மற்றும் இதர வாகனங்களில் பொதுமக்கள் தனது சொந்த ஊருக்கு பயணிக்கின்றனர். இதனால் பெருங்களத்தூர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த போக்குவரத்து நெரிசலை சரி செய்வதற்காக 50க்கும் மேற்பட்டமேற்பட்ட போலீசார் பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்னை புறநகர், பெருங்களத்தூர் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.