மேஷம்

குடும்பத்துல உங்க மகன் / மகள் நடந்துகொள்ளும் முறை மற்றும் அவங்க சாதனை பற்றி  நிம்மதியடைவீங்க/ மகிழ்ச்சியடைவீங்க/ பெருமைப்படுவீங்க. ஆரோக்யம் நல்லா இருக்குங்க. நிதி நிலை திருப்திகரம். குடும்ப மகிழ்ச்சி நல்லபடியா இருக்கும். உங்க விருப்ப லிஸ்ட்டில் உள்ள எல்லா அயிட்டமும் பச்சை ஸ்கெட்ச் பேனாவால டிக் வாங்கும். உடல் நலம் நல்லாவே இருக்கும்.  ஆனா அதுக்காக நீங்க கொஞ்சம் மெனக்கெட வேண்டியிருக்கும். கல்வியில் உங்களை மேலும் மேம்படுத்திக்கப் போறீங்க. இத்தனை காலத்தில் இந்த அளவு செலவுகள் இ,ருந்து நீங்க பார்த்ததே இல்லைதானே? வரவு எட்டு டாலர். செலவு பத்து  டாலர்னு இருக்கும்தான். ஆனா முன்பெல்லாம் செலவுங்க டென்ஷனும் வருத்தமும் தந்துச்சு. இப்ப அப்டியே ஆப்போசிட். எல்லாம் ஹாப்பி செலவுங்க.  சந்தோஷத்தில் குதிக்காம கன்ட்ரோல் பண்ணிக்குங்க.

ரிஷபம்

மம்மிக்கு அவங்க பொறந்த வீட்டிலிருந்து சொத்து அல்லது அதில் பங்கு அல்லது அட்லீஸ்ட் நகைங்க வரும்.  உங்கள் பேச்சில் இருக்கும் இனிமையும் மென்மையும் உண்மையும் எல்லா இடங்களிலும் பாராட்டு வாங்கித்தரும். இருந்தாலும் இன்னும் சிறிது  நாட்களுக்குக் கொஞ்சம்   ஜாக்கிரதையாப் பேசணும். நீங்க ஸ்டூடன்ட்டா? வாவ். ஜெயிச்சுட்டீங்க. குடும்பத்தில் யாருக்கேனும் திருமணம் நிச்சயமாகும்.  அரசாங்கத்திலிருந்து நன்மை கிடைக்கும். பொறுமைக்குப் பலன் உண்டு. வெளிநாட்டிலிருந்து வர வேண்டிய தொகையெல்லாம் டாண் டாண் என்று வரப்போவதாக உறுதி கிடைக்கும். கவர்மென்ட் உத்யோகம் வேணும்னு ரொம்ப காலமாய்க் கனவு கண்டீங்களே. இப்ப கிடைச்சாச்சு பார்த்தீங்களா?  வெளிநாட்டு வருமானமும் லாபமும் உங்க விலாசத்தை விசாரிச்சுகிட்டு வரும். கோபம் வந்தால் அதைத் தூக்கி வாசலில் வரும் குப்பை வண்டியில் போட்டுவிட்டு ரிலாக்ஸ்டா இருங்கப்பா

மிதுனம்

உங்க குடும்பத்தில் ஷ்யூரா தோரணம் பாயசம் மாலை மேளம் எல்லாம்  இருக்கும். டாடிக்கு சின்ன பிரச்சினைகள் இருந்தாலும் அது தூக்கத்தைக் கெடுக்கும்படி இருக்காது. ஆனா அது நீங்க கற்பனை செய்த அளவுக்கு இல்லைங்க. சிம்ப்பிளாய்ச் சரியாகும். மனசில் நல்ல எண்ணங்களும் இரக்க சுபாவமும் மேம்பட்டு அவை உங்க செயலிலும் பிரதிபலிக்கும் திடீரென்று  பொறுப்புணர்ச்சி தோன்றி சின்சியரா உழைப்பதன் பலன் உங்களை வாழ்வில் உயரச் செய்வது உறுதி. எப்பவும் இதே மாதிரி உழையுங்களேன். நீங்கள் எல்லோரையும் டக் டக்கென்று அட்ராக்ட் செய்வீங்க. பேச்சில் மிகுந்த புத்திசாலித்தனத்தைத் தூவி அனைவரையும் புருவம் உயர்த்தச் செய்வீங்க. பச்சைப் பசேல்னு சூழல் இருக்கும் ஏரியாவில் வீடு வாங்குவீங்க அல்லது குடி போவீங்க. நன்மைகளும் லாபங்களும் சுப நிகழ்ச்சிகளும் சந்தோஷமும்னு கலந்து ஒரு மிக்ஸி மாதிரி அலைக்கழிக்கும்.

கடகம்

கவர்ச்சி அம்சம் இன்கிரீஸ் ஆகுமுங்க.  உங்களின் குடும்ப வாழ்க்கை நல்லபடியா, ஹாப்பியா இருக்கும். கணவன் மனைவிக்குள் நல்ல காரணத்துக்காகப் பிரிவு ஏற்படலாம். இட்ஸ் ஓகே. அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டு வீடியோ காலில்  ஏக்கமாய்ப் பேசி முடிப்பதற்குள்ளாகவே சேர்ந்துடுவீங்க. அத்தனை ஷார்ட்டான பிரிவா இருக்கும். மிக திடீர் செலவுகள் வரும். கவனமா.. ரெடியா இருங்க. அம்மா வெளியூர்  அல்லது வெளிநாடு போக வாய்ப்பு இருக்குங்க. திடீர்னு உங்களை மற்றவங்க மதிக்க ஆரம்பிப்பாங்க. குறிப்பா எதிர்பாலினத்தினர் உங்களிடம் அதிகம் இழைவாங்க. சற்றே கவனமாயிருங்க. பணம் புரளும். சேமியுங்களேன். ஆரோக்யத்தைக் கெடுக்கும் எந்தப் பழக்கத்தையும் யாரும் ஏற்படுத்தாதபடி கவனமாய் இருங்க. மம்மிக்கு லக் ஒன்று காத்துக்கிட்டிருக்கு. ஃபேமிலியிலி குதூகலம் நிரம்பி வழிந்து சந்தோஷம் அலையடிக்கும். ஆர் யூ ஹாப்பி?

சந்திராஷ்டமம் : ஆகஸ்ட் 12 முதல் ஆகஸ்ட் 14 வரை

சிம்மம்

மனசில் தர்ம சிந்தனைங்க வரும். சுப விசேஷங்கள் சின்ன சஸ்பென்ஸூக்குப் பிறகு கன்ஃபர்ம் ஆகும். ரிலேடிவ்ஸை ரொம்ப நாள் கழிச்சு சந்தித்துப் பேசி சந்தோஷப்பட்டு ஆனந்தக் கண்ணீர் விடுவீங்க.  எதிர்பார்த்துக் காத்துக்கிட்டிருந்த வெளிநாட்டு வேலை கைக்கு எட்ட சான்ஸ் இருக்கு . ஜாப்ல உள்ள அழுத்தங்கள் விலகி நிம்மதி வரும். எந்த நன்மையுமே சிறு தாமதத்துக்குப் பிறகு கிடைக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். நிம்மதியான வாரம். அலுவலகத்தில் கொஞ்சமும் எதிர்பார்க்காத உயர்வு ஒன்று இந்த வாரத்தில் கிடைக்கும். அதிலெல்லாம் டவுட்டே இல்லை. பணம் என்பது ஒரு பெரிய கவலை கொடுக்காது. ஆணவம், கர்வம், ஈகோ என்றெல்லாம் சொல்வாங்களே.. அந்த விஷயம் உங்களை அண்டாமல் பார்த்துக்குங்க. தட்ஸ் இனஃப். பிரதர்/ சிஸ்டருக்குப் பெரிய நல்ல நியூஸ் உண்டுங்க. கணவர் / மனைவி பற்றிய கவலை தீரும். கிரேட் ரிலீஃப்.

சந்திராஷ்டமம் : ஆகஸ்ட் 14 முதல் ஆகஸ்ட் 16 வரை

கன்னி

குழந்தைங்க பிரபலமாவாங்க.  ஒரு வேளை அவங்க வளர்ந்த குழந்தைங்களா? அப்ப சரி. தன் காதல் விவகாரங்களை உங்க கிட்ட உடைச்சு சொல்லிடுவாங்க. பட் அதில் எதிர்ப்பு தெரிவிக்கும்படி எந்த டென்ஷனும் இருக்காது. எனவே உடனே ஓகே சொல்லிடுவீங்க. இப்போ நல்ல நல்ல செலவுங்க உங்க வீட்டு வாசலில் க்யூவில் நிற்கும். ஹாப்பியா கார்ட் தேய்க்கும் நேரம் இது. அதற்கேற்ற சேமிப்பும் கைவசம் இருக்குமுங்க. அலுவலகத்தில் கொடுத்த பொறுப்பை நிறைவேற்றிட்டீங்க. இனி எல்லாம் சுபமே. குழந்தைங்களுக்காக நிறையக் கவலைப் பட்டீங்க…வேதனைப் பட்டீங்க. எல்லாமும் சரியாயிடுச்சுதானே? அலைச்சல்கள் உங்களை ஆட்டிப்படைச்சது போக இப்போது திடீர்னு ஓரிடத்தில் அசையாம இருப்பது நிம்மதி பிளஸ் சந்தோஷம் அளிக்கும்  இப்போது இருக்கும் உத்யோகத்தையே சரியாகப் பிடித்துக் கொண்டால் உங்களுக்கு பெரிய நன்மைகள் காத்திருக்கின்றன. அலைபாயுதே கண்ணா என்று தடுமாற வேண்டாம். யூ ஷுட் பி ஸ்ட்ராங்.

சந்திராஷ்டமம் : ஆகஸ்ட் 16 முதல் ஆகஸ்ட் 19 வரை

துலாம்

ரூபாய் மேல ரூபாய் வந்து கொட்டுகிற வாரமிது. என்றைக்கோ உழைத்த உழைப்பெல்லாம் இன்றைக்கு பேங்க் பேலன்ஸாய் உருமாறி உட்காரும். நிறைய அலைச்சல் ஏகப்பட்ட பயணங்கள் இருந்துச்சில்லையா? அதுதான் இத்தனை நல்ல பலன் கொடுத்தது. குடும்பத்தில் மேரேஜ் அல்லது டெலிவரி மூலம் ஒரு புதிய நபர் இணைந்து சந்தோஷமளிப்பாங்க. எதிர்பாலினத்தினரின் நட்பு திடீர்னு அதிகமாகும். உங்களுக்கு அவங்களால நன்மையோ இல்லையோ.. அவங்களுக்கு உங்களால்  நிச்சயமாய் நன்மை உண்டாகுங்க. சகோதர சகோதரிகளுடன் அப்படி ஒண்ணும் பிரமாதமான நட்புறவை எதிர்பார்க்க முடியாது என்றாலும் சண்டை சச்சரவெல்லாம் வராமல் இருக்கும் ரைட்? குழந்தைங்களுக்கு உங்களோட அருமை தெரிய வரும். புண்ணியம் தரும் விஷயங்கள்  செய்வீங்க. புது ஜாப் முயற்சி செய்தீங்கன்னா  அதிக முயற்சிக்குப் பிறகே கிடைக்க சான்ஸ் இருக்குங்க குட் லக்.

விருச்சிகம்

அழகான..ரொம்ப ரொம்ப அழகான வீடு அல்லது கார் வாங்கப் போறீங்க.குடும்பத்தினர் கிளம்பி வெளிநாடு போவாங்க.  ஏர்போர்ட் போய் டாட்டா காண்பிப்பீங்க. நண்பர்களால் உங்களுக்கு லாபம் வரும். அவங்களால் உங்களுக்கும் நன்மையும் லாபமும் அண்ட் ஆல்ஸோ சந்தோஷமும் வரும். பேச்சில் ஆத்திர மற்றும் கோப ஃப்ளேவர் அடிக்காமல் பாதுகாத்தால் நல்லது. இது வேறுமாதிரி உருவெடுத்துப் பிற்காலத்தில் உங்களுக்கே பாதிப்பு வரும். அண்ட் பை த வே… அளவுக்கு மீறின செலவுங்க எதுவுமே  இப்போதைக்கு  வேண்டாம். பிறகு செய்ங்கப்பா. ஏன் தெரியுமா? இப்போது வேறு சில முக்கியமான நல்ல செலவுகள் காத்துக்கிட்டிருக்கே. அதனால்தான் சொன்னேன். கணவரோட/ மனைவியோட கொஞ்சம் அனுசரிச்சுப் போனால் குடும்பத்தில் ஹாப்பி இந்த வாரம் முதல் ஹாப்பி.

தனுசு

ஒங்க வயசு 30க்கு  மேலயா? சூப்பர் அப்படின்னா உழைப்பால் நன்மையும் நிறைய லாபமும் வரும். மம்மி உங்களுக்குச் சிறந்த வழிகாட்டியா இருந்து சாதனைகளுக்கு ஹெல்ப் செய்வாங்க. மகன் மகள் டென்ஷன் செய்கிறார்கள் என்று பயமெல்லாம் வேணாங்க. மென்மையா டீல் செய்யுங்க. குழந்தைகள் பற்றிக் கவலைப்படுவதை கொஞ்சம் தள்ளிப்போடுங்க. நல்ல செய்தி உண்டு. காதல்  வெற்றியாகி திருமணத்துக்கு நாள் குறிச்சிருப்பாங்க. திடீர்னு ஓவர் நைட் புகழ் வந்து சேரும். லோன் கேட்டிருந்தீங்களா வங்கியிடம்? கொடுப்பாங்க. டாடிக்குப் பெரிய அளவில் நன்மை காத்திருக்கு. வெளிநாட்டு வேலை தேடிக்கிட்டிருந்தீங்களே. கிடைச்சாச்சு இந்த வாரமே. வாயை மட்டும் ஜிப் போட்டு மூடிக்குங்க. தட்ஸ் ஆல். இப்போ அலுவலகத்தில் சூப்பரா உழைக்க ஆரம்பிச்சிருக்கீங்க. அது உங்களுக்கு அருமையான ரிஸல்ட் குடுத்து மகிழ்விக்கப்போகுது. எந்த நன்மையும் கொஞ்சம் ஸ்லோவாத்தான் வரும்.

மகரம்

ஹஸ்பெண்டுடன் / ஒய்ஃபுடன் எக்காரணம் கொண்டும் ஃபைட் சீன் வேணாம். ஆமா.. சொல்லிப்புட்டேன். உங்க நியாயம் எடுபடாது. உங்க பக்கம் தப்பும் இருக்கும். மேலும் மேலும் நல்ல செய்திகள் காத்துக்கிட்டிருக்கு. எல்லாமே ஆர்ட் ஃபிலிம் மாதிரிக் கொஞ்சம் மெதுவாய்த்தான் நகரும். ஒண்ணும் இல்லாத விஷயங்களுக்கு இவ்ளோவா டென்ஷன் ஆவாங்க? நீங்க சினிமாத்துறையா? விளம்பரத் துறையா? சின்னத்திரையா? அப்படியானால் மேலும் மேலும் ஒப்ந்தங்கள் கையெழுத்தாகி சிரத்தையாய் உழைத்து முன்னேறிக் கொழிக்கப் போறீங்க பாருங்களேன். கருணையும் இரக்கமும் கனிவும் உங்களை உயர்த்தி மத்தவங்க கண்ணுக்கு பிரமிப்பு ஏற்படுத்தும். கடந்த சில வாரங்களாய் இன்கம் பற்றி செம்ம டென்ஷன் ஆயிக்கிட்டிருந்தீங்க. இனி அதெல்லாம் இல்லைங்க. ஜாலியா இருப்பீங்க. பிரதர் அல்லது சிஸ்டருக்கு நன்மை வரும். அவங்க உங்களுக்கு நன்மை செய்வாங்க.

கும்பம்

ஆபீசிலும் சரி.ங. அக்கம்பக்கத்தினருடனும் பேசும்போது வார்த்தைகளில் கொஞ்சம் கேர்ஃபுல்லா இருங்க. இப்போதைக்குப் புது வேலை மாற நினைக்க வேணாங்க. இருப்பதை விட்டு ஓடுவதைப்பிடிக்க நினைச்சா அது ஓடும்.. இது பறந்துவிடும். பொறுப்பை உணர்ந்து செயல்படுங்க. கடமையை சரிவர செய்தாகணும்…தட்டிக் கழிக்கப் பார்க்காதீங்க.  மனசில் உள்ள அழுத்தங்கள் விலகி நிம்மதி வரும்.  எந்த நன்மையுமே சிறு தாமதத்துக்குப் பிறகு கிடைக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். நிம்மதியான வாரம். தேவையேயில்லாத கவலைங்களைக் கற்பைனை செய்து மனசுல போட்டுக்கிட்டு அவதிப்படாதீங்க. சாப்பாட்டு விஷயம் = ஆரோக்ய விஷயம் என்பதை நினைவில் கொள்ள வேண்டிய நேரம் இது. கண்டதை/ கண்ட நேரத்தில்/ கண்ட இடத்தில்/ கண்டபடி சாப்பிடாதீங்க. அளவா.. நேரம் தவறாமல் சுகாதார இடத்தில் சாப்பிட்டால் ஷ்யூராய் ஆரோக்யம் பிழைக்கும். ஐ நோ யூ நோ இட்.

மீனம்

குழந்தைங்க வாழ்வில் உயர்வு ஏற்படுங்க. அவங்களைப் பற்றி உங்களுக்கு இருந்து வந்த கவலைங்க எல்லாமே பனி மாதிரி மறையும். அலுவலகம் மற்றும் குடும்பத்தில் இருந்து வந்த டென்ஷன்கள் மறையும். சகோதர சகோதரிக்கு இருந்துக்கிட்டிருந்த பிரச்னை ஒண்ணு தீரும். உங்களால் பலர் பலனடைவாங்க. நீங்க பெரியவங்களா இருந்தால் அலுவலகத்திலும் சிறியவங்களா இருந்தால் கல்வி நிலையத்திலும் இத்தனை காலம் இருந்துக்கிட்டிருந்த அழுத்தம் சற்றுக் குறையும். குடும்பத்தில் இருந்த சண்டை சச்சரவுங்க முடிவுக்கு வந்து ஹாப்பியான சூழல் ஆரம்பிக்கும். கணவர் / மனைவி உறவினர்களால் பெரிய அளவில் நன்மைகளும் உதவியும் கிடைக்கும். புது செலவுங்க வந்தாலும் அதெல்லாம் சந்தோஷம் தரும் சுப செலவுகளாய்த்தான் இருக்கும். ஷ்யூர். குடும்பத்திலும், வெளியிடத்திலும், அலுவலகத்திலும், பள்ளியிலும், கல்லூரியிலும், எதிர்பாலினத்தினரால் நன்மை பெற வாய்ப்பு உள்ளது.